நேற்று தொலைக்காட்சியில் உள்ளம் கேட்குமே திரைப்படம் பார்க்க நேர்ந்தது.
ஆரம்பக் காட்சியில் ஆர்யா விறுவிறுப்பான ஒரு கிரிக்கெட் மாட்சில் ஆடி
ஜெயித்துவிட்டு வர, கடுப்படிக்கும் அந்த அணிப் பயிற்சியாளன் "ஈசியா
ஜெயிக்க வேண்டிய மாட்ச தேவைல்லாம கடைசி பால் வரைக்கும் இழுத்து
டென்ஷன் பண்ணிட்ட", என கோபப்படுவார்.
என் நினைவலைகள் என்னை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த
ஒரு கிரிக்கெட் மாட்சிற்கு அழைத்துச் சென்றன.
நான் என் கோச்சிடம் திட்டு வாங்கியது எளிமையாக ஒரு மேட்சை எங்களுக்கு
சாதகமாக நான் ஜெயிக்க வைத்துக் கொடுத்ததற்காக.
ஜெயிக்க வெச்சதுக்கு திட்டா? என்னக் கொடுமைன்னு கேட்கறீங்களா? எல்லாம்
இந்த பாழாப் போன மேட்ச் பிக்சிங்தான் காரணம். சரி வாங்க... மதுரைக்குப்
போகலாம்...
தொண்ணூறுகளின் மத்தியில்...
மதுரை.....டி.வி.எஸ். கிரிக்கெட் மைதானம். எங்கள் கல்லூரி அணிக்கும் மதுரையின் அந்தப் பிரபல கார்ப்போரேட் அணிக்கும் இடையேயான அரையிறுதிப் போட்டி ஒன்று.
அடிக்க வேண்டிய ரன்கள் நான்கு. கடைசி மூன்று பந்துகள் மீதம் இருக்க, கையில் இருந்த விக்கெட்டுகள் இரண்டு. பவுண்டரி லைனில் நின்றிருந்த எங்கள் அணியின் மானேஜரும் பயிற்சியாளருமான அச்சு சார் பேட்ஸ்மேனைப் பார்த்து ஏதோ சைகை செய்தார்.

ஏதோ கொஞ்சம் நல்லா போய்க்கொண்டிருந்த ஆட்டத்தில் பழம் போல ஒரு கேட்ச் கொடுத்துவிட்டு பேட்ஸ்மேன் பெவிலியன் திரும்பினான். அடுத்து களம் இறங்க வேண்டியது நான்.
கவுண்டமணி பாணியில் "ஏய்...நான் அப்படி, நான் இப்படி" என்று உதார் விடுவேனே ஒழிய எனக்கு அப்படியொன்றும் கிரிக்கெட் ஆடத் தெரியாது. அணியில் சேர்க்க பதினோராவது நபன் கிடைக்காத நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த நான் எங்கள் கல்லூரி அணியின் பத்தோடு பதினொன்றானவன்.
"பாத்துக்கோடா தம்பி", என அச்சு சார் என்னை நோக்கி ஆரம்பிக்கும்போதே "ஒண்ணும் கவலைப்படாதீங்க சார், ரெண்டு பந்து இருக்குல்ல. ஏதாவது ஒண்ணு மீட் ஆகிடும். பவுண்டரிக்கு அனுப்பிடறேன். பைனல்ஸ்'ல நாமதான் ஆடறோம்", என்றேன்.
"அது இல்லடா தம்பி, பைனல்ஸ் நாம ஆடப்போறது இல்லை. எதிரணிதான் நுழையணும். பாத்துக்கோ", என்றார்.
"என்னது, அப்போ இது என்ன பிக்சிங்'கா?", எனக்கு சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது.
மாவட்ட ரீதியான ஆட்டங்கள், மண்டல ரீதியான ஆட்டத் தொடர்கள் என எங்கு வந்தாலும் அந்த கார்ப்பரேட் அணிக்கு அப்படி ஒரு மரியாதை. ஏனென்றால் அவர்கள் ஸ்பான்சர்ஷிப்பில்தான் மதுரை கிரிக்கெட்டே நிமிர்ந்து நின்று கொண்டிருந்த நேரம் அது. எங்கு எந்த ஆட்டம் என்றாலும் இறுதி ஆட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும், அங்கும் ஜெயிக்க வேண்டும். அது மட்டுமல்ல "அசைக்க முடியாத" அணி என்ற பெயருடன் மதுரையை வலம் வர வேண்டும்.
ஓ...!! இதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதானா?, எனக்கு இப்போதுதான் விளங்கியது.
"சார், என்ன சொல்றீங்க. நான் மாட்ச முடிச்சிட்டு வந்துடறேன். நீங்க கொழப்பாதீங்க"
"நீ சின்ன பையன், உனக்கு ஒண்ணும் புரியாது. நான் சொன்னத மட்டும் செய்யி நீ"
கடுப்புடன் களமிறங்கினேன். எதிரே பந்து வீச வந்தவன் "இந்தக் கால" மலிங்கா போல "அந்தக் காலத்திலேயே" இருந்தான். என்னைப் பார்த்து பூச்சியைப் பார்ப்பது போல ஒரு பார்வை பார்த்தான். "என்னத்துக்கு நீ களம் எறங்கின? எப்படியும் ஆட்டம் எங்களோடது", என்றது அவன் ஏளனப் பார்வை.
வந்ததே கோபம் எனக்கு. அவன் போட்ட அந்த "ஆப் வாலியோ" "ஆப் பாலியோ" ஏதோ ஒன்று.... அதை "ஜெய் ஆஞ்சநேயா" என்று சொல்லி சாத்தினேன் ஒரு சாத்து. விவியன் ரிச்சர்ட்ஸ் கூட அப்படி ஒரு சிக்ஸ் அடித்து நான் பார்த்ததில்லை. நான் அடித்து நானே அதைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன். விர்ரென்று பறந்து பறந்து பந்து காணாமலே போனது.
பவுண்டரி லைனில் அச்சு சார் என்ன செய்வது எனப் புரியாமல் "கண்களை விரித்து" என்னை ஒரு வில்லப் பார்வை பார்த்தார். என் அணியின் ஓரிரு சீனியர் ஆட்டக்காரர்கள் "என்னடா பண்ணின?" என அங்கிருந்தே கையுயர்த்திக் கேட்டார்கள். மிச்ச மீதம் இருந்த அனைத்து ஜூனியர் ஆட்டக் காரர்களும் "ஓ"வெனக் கூவிக்கொண்டு வந்து என்னைத் தூக்கிச் சுற்ற ஆரம்பித்தார்கள்.
அந்த ஒயிட் ஆண்டு ஒயிட் அம்பயர், "இப்போ என்ன செய்யலாம், நான் வேணும்னா நோ பால் தந்துரட்டுமா", என எதிரணி கேப்டனிடம் "தத்துபித்திக்" கொண்டிருந்தான்.
ஆகவே அன்பர்களே, இந்த மேட்ச் பிக்சிங் என்பது தெருமுனை கிரிக்கெட் தொடங்கி, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரை அங்கிங்கெனாதபடி எங்கும் உள்ளது. ஆங்கில நியூஸ் சேனல் அனைத்தையும் அணைத்து வைத்துவிட்டு வேறு வேலை ஏதேனும் இருந்தால் பாருங்கள்.

5 comments:
Well said!. But do you think the craze will die so easily?. The corporates will never let their grip on the game loosen. This controversy will die fast and we will have the billion strong crowd baying for more cricket.
ICC code padi... ASC padi ungala LIFETIME ban kudukuren.. again PAK players maari ban podura maarti pottutu, again 2 months la munnavida speeda thirumbi vara koodadhu .. SOLLITEN...
PATTAYA KILAPARAPPA... :))
ரொம்ப கரெக்டா சொல்லியிருக்கீங்க கிரி..
நம்ம ஊர்ல இருக்கற பெரிய டீம்கள் பெரும்பாலும் ஜெயிக்கற கதை இதுதான்..
உங்க கருத்தை நானும் ஏத்துக்கறேன்..
அப்பவே அப்படியா! கடவுளே! இப்ப கேக்கணுமா? எப்பவும் போல நல்ல நகைச்சுவை இழையோடும் நல்ல பதிவு :-)
amas32
//அப்பவே அப்படியா! கடவுளே! இப்ப கேக்கணுமா?//
இப்படி உசுப்பேத்தியே...........
எனிவே! நன்றி AmaS
Post a Comment