Aug 30, 2010

மதம் கொத்திப் பறவைகள்...

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்.....


நெற்குன்றத்தில் அப்போது நான் வேலை செய்து வந்த நேரம். பைக் வசதியெல்லாம் இல்லாத ஒரு காலம். மாதவரத்திலிருந்து கோயம்பேடு, கோயம்பேடிலிருந்து நெற்குன்றம் என இரண்டு பேருந்துகள் தாண்டி அலுவலகம்.

வாழ்க்கையின் மிக சுவாரசியமான நாட்கள் அவை. லூகாஸ், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர், கிண்டி வழியாக தாம்பரம் வரை செல்லும் 170A மட்டுமே துணை அப்போது.  இத்தனை இடங்களை கடக்கும் அப்பேருந்தில் நீண்டதூரப் பிரயாண நண்பர்கள் என ஆறேழு பேர் சேர்ந்தோம்.



மூலக்கடையைக் கடக்கும்போது புளிமூட்டையாகிவிடும் பேருந்து. நடுவில் நுழைவாசல் உள்ள பேருந்து. எனவே பின் பாதி முழுக்க ஆண்கள் ராஜ்ஜியம் ஆகிவிட, கடைசி சீட்டை ஆக்கிரமிப்போம் நாங்கள். "கிரி, ம்ம்ம்.... ஆரம்பிங்க 'வராக நதிக்கரையோரம்", எனக் குரல் வரக் காத்திருக்கும் எங்கள் ஜமா.  பாட்டுக் கச்சேரியை ஆரம்பிப்போம். ஜன்னலோரம் அமரும் பவித்ரன் ஒரு கையை வெளியே வைத்து பேருந்தின் வெளிப்புறம் தாளம் தட்ட, நானும் சரவணனும் பாட ஆரம்பிப்போம்.  என்னடா நூறுபேர் மத்தியில் பாடுகிறோமே என்றெல்லாம் யோசிக்காத பருவம் அது.


அங்கே ஒவ்வொருவரின் ரீயாக்ஷனும் ஒவ்வொரு  மாதிரியாய் இருக்கும்.


"என்ன தம்பி, பழைய பாட்டெல்லாம் பாட மாட்டீங்களா?"


பீ.பி.ஸ்ரீநிவாஸ் பாடல் பாடினால், "சார், ஜெமினி கணேசனே நேர்ல வந்தாப் போல பாடறீங்க சார்" (நல்ல வேளை, அவர் இதை கேட்கலை).


"கண்ணுபடப் போகுதய்யா சின்ன கண்டக்டரே", என பவித்ரன் பாடினால் அந்த ஒல்லிப்பிச்சி கண்டக்டர், "ஏய், யாருய்யா, இங்க பாடவே கூடாது. அண்ணாநகர் போலிஸ் ஸ்டேஷன்'ல வண்டியப் போடுப்பா டிரைவர்", என எங்களை மறு கலாய்ப்பு செய்வார். 


"அண்ணா, புதுசா பாட மாட்டேங்களா? பழைய பாட்டா பாடி போர் அடிக்கறீங்க?" ஸ்கூல் வாண்டு ஒன்றின் நேயர் விருப்பத்திற்கு சரவணன் புதுப் பாடல் எதையேனும் எடுத்து விடுவான்.


சுந்தரம் சாருக்கு பழைய பாட்டு, குறிப்பாக "கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே", தினமும் பாட வேண்டும். அவருடனே பிரயாணம் செய்யும் அவர் சகலைக்கு எந்தப் பாட்டு பாடினாலும் ஒகே ஆனால் பாடுபவர் காலை வார வேண்டும்.


சிரித்தவாறே பாடல் கேட்கும் சதாசிவம் ஒவ்வொரு பாடலுக்கு இடையேயும் அப்பாடல் பற்றிய ஒரு கருத்தைப் பகிர்வான். எங்கள் ஜமாவின் அப்துல் ஹமீது அவன். இன்னைக்கும் இதே பாட்டாய்யா, சரி பாடித்தொலை என்பான் ரமேஷ்.


இதில் எதிலும் சேர்த்தியில்லை பாபு. அவன் எங்கள் குழுவில் எப்படிச் சேர்ந்தான் என்பது எங்கள் யாருக்கும் புரியாத ரகசியம். தவறாமல் தினம் வருவான், எங்கள் குழுவுடன் ஒன்றோடோன்றாக அமர்வான். என்ன பாடினாலும் என்ன பேசினாலும் ஒரு வெறித்த மௌனத்துடன் இருப்பான். நம்முடைய நாற்பது வார்த்தைக்கு அவனிடமிருந்து ஒரு வார்த்தை பதிலாக இருக்கும். கையில் எப்போதும் திறந்த நிலையில் ஒரு சிறு புத்தகம், வாயில் தவறாமல் ஏதோ ஒரு மந்திர ஜபம். இதுதான் பாபு.


நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு புனிதத் தலத்திற்கு செல்வதாக முடிவானது. "நான் வரலை" என பாபு தவிர்த்தான். அவன் மதம் சார்ந்த நம்பிக்கைகள் எங்களுடன் வருவதற்கு அவனுக்கு இடம் தரவில்லை என எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. 


ஆனால் எங்களால் புரிந்து கொள்ள இயலாத ஒரு விஷயம், அத்தனை மாதங்களாகப் பேசாமல் வந்து கொண்டிருந்த பாபு அதன்பின் புதிதாகப் பேச ஆரம்பித்தான். கொஞ்சமல்ல, நிறைய பேசினான். அவன் பேசிய அத்தனையும் மதம் சம்பத்தப்பட்ட பேச்சுக்கள். தன் மதத்துடன் எங்களில் பலர் சார்ந்திருந்த மதத்தையும், கடவுள்களையும் குறித்து சம்பந்தப்படுத்தி, ஒப்பிட்டு என   மெல்ல மெல்ல ஏதேதோ பேசத் துவங்கினான். இதை எங்களில் யாரும் ரசிக்கவில்லை.


பேச்சு ஆரோக்கியமான சூழலில் பயணிப்பதாக எங்களில் யாருக்கும் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் எங்கள் பேச்சுக்கள் கருத்து யுத்தமாகத் தொடங்கி, அதன் பின் பட்டிமன்ற பாணியில் பயணிக்கத் துவங்கியது. அதனை பெரும் சண்டையாக வெடிக்க வைக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது விதி.


பாபு தவிர்த்து மற்ற எல்லோரையும் ஒரு வார இறுதியில் சந்திக்க அழைத்தார் சுந்தரம் சார். "நாம் பாபுவைத் தவிர்ப்போம்", என்றார். அப்படியே ஆகிப் போனது. இப்போது நாங்கள் எல்லோரும் பழைய பாபுவாகிப் போனோம். "ஒரு ஹாய்", "ஒரு பை", அத்துடன் அவனிடம் நிறுத்திக் கொண்டோம்.



பாபு இதனை எதிர்பார்க்கவில்லை. எங்கேனும் பேச்சு துவங்குமா எனக் காத்திருந்தான். அவனுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாக அவன் பயன்படுத்திக் கொண்டாலும், எங்களில் ஒருவர் ஏதேனும் பேசி அந்தச் சூழலை மாற்றுவதாக நாங்கள் ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்ததால், சிலப்பல நேரங்களில் அது பாபுவுக்கு மூக்குடைப்பில் சென்று முடிந்தது.


இப்போது அவனுடைய அடுத்த இலக்கு நானாகிப் போனேன். தினம் அவன் பேருந்து ஏறும் இடத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர்கள் நடந்து வந்து நான் பேருந்து ஏறும் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் மெல்லப் பேச்சு தரத் துவங்கினான். மீண்டும் மத யானை முருங்கை மரம் ஏறியது. தாங்குமா?


கடவுள் கதைகள் கொஞ்ச நாளைக்கு. சரி, சுவாரசியமாக இருக்கிறதே என நினைத்தேன். கடவுள் விளம்பரங்கள் கொஞ்ச நாட்களுக்கு நடந்தது. என்னால் பொறுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் அடுத்தக் கட்டம்?


"நீங்கள் உங்கள் கடவுள்களை நம்பாதீர்கள்", என்றான். எனக்கு விவாதம் செய்யும் மனநிலை எப்போதும் இல்லை. அவன் ஒரு முடிவோடு வருகிறான், அவனிடம் பேசிப் பயனில்லை.


"நாம் வேறு பேசலாமா?"


"அவை சாத்தான்கள்"


"இருக்கட்டும் பரவாயில்லை"


"அப்போ அங்கேதான் கடைசி வரை இருப்பீர்களா"


"உங்களால் இங்கு வர முடியுமா", எனக் கேட்டேன்.


"ச்சே ச்சே! அது சாத்தியமே இல்லை."


"அதே போலத்தான், ச்சே ச்சே, எனக்கும் அது சாத்தியமே இல்லை.", முடிந்தது என நினைத்தேன்.


"நீங்க வேணா பாருங்க ரெண்டாயிரமாவது வருஷம் உலகத்துக்கு ஒரு பெரிய ஆபத்து வரப் போகுது. அதுக்கு அப்புறம் சாத்தான்களை நம்பறவங்க எல்லோரும் செத்துப் போயிடுவாங்க. எங்க மதத்தை நம்பறவங்க, எங்க கடவுளை ஏத்துக் கிட்டவங்க மட்டும்தான் உயிரோட இருப்பாங்க".


எனக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் அவனுக்குத் தப்புத் தப்பாய் கேன்வாசிங் வேலை சொல்லித் தந்த சேல்ஸ் மேனேஜர் மீது பரிதாபம் ஏற்பட்டது. 


"அந்தப் பக்கம் வந்து உயிரோட இருக்கறதை விட, இந்தப் பக்கம் இருந்து செத்துப் போயிடறேன். அந்தக் கவலை உங்களுக்கு வேணாம். இனிமே இந்த கேன்வாசிங் வேலை வெச்சுக்கிட்டு என்கிட்ட வந்தா அசிங்கமா திட்டுவேன் போயிடுங்க", என்றேன்.


அவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கத் தேவையில்லை என்றாலும் எனக்கு விவாதத்தை முடிக்க வேறு வழி தெரியவில்லை. அதன் பின் பாபு என்வழியில் கடைசிவரை வரவில்லை. அவன் சேல்ஸ் டார்கெட் புத்தகத்தில் என் பெயரை நீக்கியிருக்கக் கூடும்.


அவன் மதம் சார்ந்த ஒரு பெரியவரிடம் இது பற்றிக் கேட்டேன். அவர் பாபு சார்ந்த மதத்திலேயே வேறொரு உப பிரிவைச் சேர்ந்தவர். 


"_________ _________ _________ _________ _________ _________ _________ _________", அப்பா, அம்மா,  குல கோத்திரம் எல்லோரையும் அந்த இடத்திற்கு அழைத்து கெட்ட கெட்ட வார்த்தைகளில் வைதார். "இவனுங்கலாலதான் எங்க மதத்துக்கே கெட்ட பேரு சார், நீங்க அவங்களையெல்லாம் ஜஸ்ட் இக்னோர் பண்ணுங்க" என்றார். "அதைத்தான் நான் செய்தேன்", என்றுவிட்டு வந்தேன்.


பாபு சார்ந்த மதத்தின் அதே உபப் பிரிவு நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருக்கையில்,  "அது கண்டிப்பாக தவறுதான், கண்டிக்கத் தக்க செயல்தான். இன்னும் சொல்லப் போனால், கடவுள் பெயரை பொதுவில் சொல்லாதே, அப்படின்னே எங்க மதம் சொல்லுது. இருந்தும் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவங்க தனிரகம், ஜஸ்ட் இக்னோர் பண்ணுங்க", இங்கும் அதே கருத்து.


இவங்களை என்ன பண்ணலாம்? எந்த நம்பிக்கையில் இப்படி மடத்தனம் செய்கிறார்கள். எங்கள் மதத்தை இத்தனை பேர் தழுவுகிறார்கள் என்ற புள்ளியியல் விபரங்களால் இவர்களுக்கு என்ன பலன்?


யாரேனும் சொல்லுங்களேன்!
.
.
.

12 comments:

natbas said...

ரொம்ப கொத்திருச்சோ? இவ்வளவு நாள் கழிச்சு எழுதறீங்களே?

ஜாலியா போயிக்கிட்டிருந்த பதிவு திடீர்னு சீரியஸா ஆயிருச்சே...

நான் எப்போது கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவு கொடுப்பவன். திருவாளர் பாபு செய்ததில் தவறில்லை என்பது என் எண்ணம்.

கருத்து வேற்றுமைகளை விவாதம் மூலமாதான் தீத்துக்கணும், விரோதம் மூலமா இல்லை.

Giri Ramasubramanian said...

கருத்துக்கு நன்றி நட்பாஸ் சார்!

// ரொம்ப கொத்திருச்சோ? இவ்வளவு நாள் கழிச்சு எழுதறீங்களே?//

பலமுறை பலரிடம் பகிர்ந்து கொண்ட தகவல் இது. வலைப் பதிவில் பதிய இப்போதான் நேரம் கிட்டியது.

// ஜாலியா போயிக்கிட்டிருந்த பதிவு திடீர்னு சீரியஸா ஆயிருச்சே... //

ஒரு effect குடுக்க ட்ரை பண்ணினேன், வேறொண்ணுமில்லை.

// நான் எப்போது கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவு கொடுப்பவன். திருவாளர் பாபு செய்ததில் தவறில்லை என்பது என் எண்ணம். //

I appreciate your opinion / stand, but sorry for not standing along with you. I differ here.

//கருத்து வேற்றுமைகளை விவாதம் மூலமாதான் தீத்துக்கணும், விரோதம் மூலமா இல்லை.//

பாபு போன்றவர்களிடம் விவாதம் செய்வதில் பயனேதும் இல்லை என்பது என் கருத்து.

மேலும், நான் மதத் துவேஷத்தை இங்கே விதைக்கவில்லை. நான் என் மதத்தை மதிக்கிறேன். ஆனால் அது என் சொந்த விஷயம், என் தனிப்பட்ட நம்பிக்கை என முழுமையாக நம்புகிறேன்.

என்னுடன் பயணம் செய்ய வா என்று நான் யாரையும் கை பிடித்து இழுப்பதில்லை. என்னை அவர்கள் பக்கமாக வா என்பவர்களை, "நன்றி, வேண்டாம்" என நாசூக்காகச் சொல்கிறேன். ஆனால், வலுக்கட்டாயமாக அவர்கள் பக்கம் வரசொல்லி வலிப்பவர்களை "போடா டேய்", எனச் சொல்கிறேன். அது தவறுமில்லை என முழுமையாக நம்புகிறேன்.

Anandkrish said...

giri sir what u said was exactly right.
i also know one boy studying with me in 12th, he also do and speak like babu. but nobody listened him and just every body ignored him.

these type religion things makes a person to unsociable with the society. they dont mingle with the society.

Rams said...

rightly said Giri...people like Babu are the root cause of communal disharmony..

IKrishs said...

கிருஸ்தவ பள்ளியில் எனக்கும் சில அனுபவங்கள் உண்டு!
* சாத்தான் சாத்தான் என்று அநியாயத்திற்கு நெகடிவ் விசயங்களை முன் வைத்ததால் 6ம் வகுப்பிலிருந்தே எனக்கு அலர்ஜி![ஆனாலும் கொஞ்சம் colorful ஆக இருப்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பிடிக்கும் !]

*ஆசிரியர் ஒருவர் "புதிய ஏற்பாடு " ஒன்றில் ஒரு அதிகாரத்தின் வசனம் படித்து காட்ட சொல்லுவார் [கோவில் சென்று போட்டு வைத்து விட்ட வந்த மாணவனை ] - கல்லை கும்பிடுபவன் பற்றி ஏதோ அதில் சொல்லி இருந்தாக ஞாபகம் !

*மைதானத்தில் காலையில் ஜெபம் செய்யும் போது ஆசிரியை கேட்டார் "யாருக்கெல்லாம் தேவனோட ஆசிர்வாதம் வேணும் ?" கையை தூக்காமல் தெனாவெட்டாய் நின்றவர்களில் நானும் ஒருவன் .மீண்டும் அவர் அப்போ உங்களுக்கு "சாத்தானோட ஆசிர்வாதம் தான் வேணுமா ?" இப்போ நான் உட்பட எல்லோரும் கை தூக்கியாச்சு ! #பரப்புரை தந்திரிகள் அவர்கள் !

*இப்பவும் , குறிப்பிடத்தக்க கல்வி + மருத்துவ சேவைகள் செய்கிறவர்கள் அவர்கள் ,ஆனாலும் பரப்புரை தீவிரவாதத்தை குறைத்தால் நன்றாக இருக்கும் !

*உங்களை கோபப்படுத்திய நண்பரை பற்றி சொல்லியிருப்பதில் தவறேதும் இல்லை! வேறொரு பிரிவை சேர்ந்த நண்பரின் கருத்தையும் பதிவு செய்திருக்கிறீர்களே..
*அந்த முன் பாதி buildups மிகவும் சுவாரசியம்!

Yavana ruban said...

அன்புடன் ஜெமோவுக்கு,
கடந்த 135 வருடங்களாகவே கடவள் இல்லை, இல்லவே இல்லை என்று ப்ரஸ்தாபிக்கப்பட்டு வருகிற இ ந்தியாவில் எந்த‌
கடவுளர்களும் இல்லாமலேயே அரசாங்கமும் ஸ்தாபிக்கப்பட்டு குறிப்பாக‌
தமிழ் நாட்டில் ஈ.வெ.ரா.(சாத்தானா?) மற்றும் அவரது சீஷர்களான எம்.ஜி.ஆர்.மற்றும் அவரது சஹாக்களும்(பிஸாஸுகளா?) இன்றைய வரையில்
தமிழ் நாட்டின் மாற்றுக் கடவுளர்களாக மற்றும் ஏனைய மதக் கடவுளர்கள் (அல்லா,இயேசுகிறிஸ்து,புத்தா,ராமா,மஹாவீர்) எல்லோருக்கும் மாற்றாகவே ஒரு
சாத்தானின் ராஜ்யத்தை(?) ஸ்தாபித்து(முற்காலத்தில் கடவுள‌ின் ராஜ்யம் அல்லது தேவனுடைய ராஜ்யம் அல்லது ராமராஜ்யம் என்றெல்லாம் வானமென்னும் திரையின் கீழ் இருந்த ஸாம்ராஜ்யத்தை )ஒரு சினிமா திரையில் காட்டப்படும் சினிமா ஸாம்ராஜ்யமாக பொய்மான்கள் ஓடும் ஆரண்யமாக மாற்றிய இந்த‌
கலிகாலத்தில் 'யார் கடவுள்,யார் சாத்தான்' என்று 'கிரியும் ஜெமோவும்' தான் என்னைப் போன்ற கிறிஸ்துவர்கள் எல்லாருக்கும் தெளிவிக்க வேண்டும்!

அன்புடன்
யவன‌ரூபன்.

Yavanaruban said...

கடவுள் யார்?சாத்தான் யார்?

'கிரி மற்றும்ஜெமோ&கோ',
உங்க‌ளுக்கே நன்றாகத் தெரியும் கிறிஸ்துவர்களாகிய எங்களுக்கு கடவுளும் உண்டு! சாத்தான்,பேய் மற்றும் ஏனய பிஸாஸுகளும் (கிறிஸ்துவர்களாகிய எங்களுக்கும் உண்டு!)ஆகிய‌
ஈ.வெ.ரா.மற்றும் ஏனைய அவரது சஹாக்களும் அவர்களது கூட்டாளிகளும் ஸ்தாபித்த'கடவுள் இல்லை;இல்லவே இல்லை 'என்கிற ‌சாத்தானுடைய சாம்ராஜ்ய சிந்தனைகளும் எண்ணங்களும் ஏன் அவர்களது ஆவிகளும் கூட எங்கள் ரோமன் கத்தோலிக்கர்கள்,ப்ரொட்டஸ்டன்டுகள் ஆகியோரைப் பிடித்து ஆட்டிவிடக் கூடாதென்பதில் பென்டகொஸ்தேக் காரர்கள் கொஞ்சம் சற்று தீவிரமாய் உபவாஸித்து,இரவெல்லாம் கண் விழித்து,ஜெபித்து 'ஈ.வெ.ரா.&கோ 'வை

'தூரத் துரத்தி'விட்டுத்தான் தூங்குவது என்று முடிவு செய்து இருக்கிறோம்!

உங்களுக்கு வேண்டுமானால் 'சாத்தானுடன் மற்றும் அவனது ஸஹாக்களுடன்' சமரசம் மற்றும் உடன்படிக்கை ‌செய்து கொண்டு வாழ்வதில் விருப்பம் இருக்கலாம்!

ஆனால் 'பெந்தெகோஸ்தே'காரர்களுக் கு நிச்சயம் சாத்தானுடன் 'ஸமரஸம்'இல்லை;இல்லவே இல்லை!



இதனை 'கிரி மற்றும்ஜெமோ&கோ' அறியக் கடவ தாக!

Giri Ramasubramanian said...

@யவன ரூபன்
அறிந்து கொண்டோம். நன்றி!

ஜெமோ அவர்களுக்கு ஏதேனும் சொல்லவேணும் எனில் அவர் ஈ.மெயில் முகவரிக்கு எழுதவும். 'தகுந்த' பதில் கிடைக்கும்.

Yavanaruban said...

அன்புடையீர்,'(கிரி மற்றும்ஜெமோ)'
எனது'யார் கடவுள்,யார் சாத்தான்',என்ற கேள்விக்குப்'பதிலும் நானே கேள்வியும்நானே'என்கிற ரீதியிலான ‌எனது விளக்கம்,உங்களைப்
புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்!அன்பர்'ஜெமோ'அவர்களது' ப்ளாக்குக்கு' நானும் ஒரு சந்தாதாரன் தான்!தற்சமயம் என் ஜிமெயில் கடவுச் சொல் மற‌ந்த போனதால் என்னால் அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை!
ஆயின் எனது முக நூல் பதவில் (ரூபன் டேவிட் வில்லியம்)'கிறிஸ்துவத்தை பற்றி' என்ற தலைப்பில் போஸ்டிங் செய்துள்ள எனது தொடர் விளக்கத்தை காணும்படி அன்புடன் வேண்டுகிறேன்!

/யவனரூபன்!‌ு

Yavana ruban said...

கடவுள் யார்?சாத்தான் யார்?

'மேலும், சாத்தான் என்ற கருதுகோள் அவர்களை அனைத்தில் இருந்தும் விலக்குகிறது. அவர்களின் தரப்பு அல்லாத எதுவும் சாத்தானே. சாத்தான் தர்க்கத்தின் அதிபன். அழகிய வாதங்கள் கொண்டவன். ஆகவே அவர்களிடம் பிறர் விவாதிக்கமுடியாது. ஏனென்றால் நமது தரப்பு எந்த அளவுக்கு நியாயமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்கள் அதை சந்தேகப்படுவார்கள். சாத்தானுக்கு ஆயிரம் முகங்கள்!

சாத்தான் உணர்ச்சிகளை பயன்படுத்துபவன். மனதைக் கரைப்பவன். ஆகவே அவர்களிடம் நாம் கெஞ்ச முடியாது, மன்றாடமுடியாது. உணர்ச்சிகளை காட்டமுடியாது. தாயோ தகப்பனோ கணவனோ மகளோ பேச முடியாது. அவற்றையும் அவர்கள் சந்தேகப்படுவார்கள். ஆம், அவர்கள் சாத்தானின் குரலில் பேசுகிறார்கள்!

அவர்களிடம் அவர்களின் மதத்தைப்பற்றிக்கூட விவாதிக்கமுடியாது. ஏனென்றால் சாத்தானுக்குத்தான் பைபிள் மிக நன்றாக தெரியும். அவன் பைபிளைத் திரிப்பதில் நிபுணன். பைபிளைப்பற்றி வேறுஎவர் பேசினாலும் அவர்கள் சாத்தானே.'

ஜெமோ,அவரது மதமென்னும் வலையில்!


ஆனால் கிரி &கோ,

சாத்தானுக்கு பைபிள் தெரியுமோ எனனவோ,'ராமயாணம். மஹாபாரதம்' நல்லா தெரியும்! (உ-ம்- ஈ,வெ.ரா.&கோ)

இங்கு இந்து தேசத்தில் ம்றுக்கப்பட்ட,மறக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட கடவுள், 'ராமனோ,க்ருக்ஷ்ணனோ தான்!'

அவனைப் பற்றி உங்கள் 'ஹராம்' ஹிந்துக்களுக்கு விளக்கம் சொல்லி உங்கள் ஹிந்து ஹராம்களை ரட்சிககப் பாருங்கள்!

உங்கள் பார்ப்பன மானததையும் காப்பாற்றப் பாருங்கள்!

எங்களை ரட்சிக்க எங்கள் கிறிஸ்த்வ கடவுள் போதும்!

தெரிகிறதா?

Rathnavel Natarajan said...

நன்றி கிரி.
நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இரண்டு நாள் பேசி விட்டீர்கள் என்றால் உங்கள் கையில் ஒரு புத்தகத்தை கொடுத்து படித்து பாருங்கள் என்பார்கள். படித்து விட்டீர்கள் என்றால் சர்ச்சுக்கு வாங்க என்பார்கள். பிறகு ஞானஸ்நானம் வரை கொண்டு வந்து விடுவார்கள்.
நாம் முதலில் இந்து மதத்தை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எனது உறவினர்களும் நிறைய மாறியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்து மதத்தை பற்றியோ இந்து மதத்தை பற்றி தெரிந்து கொள்ள என்ன புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியோ இல்லை.
நீங்கள் கூடுமான வரை மத சம்பந்தமாகவோ அரசியல் சம்பந்தமாகவோ கூட்டங்களில் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.
வாழ்த்துக்கள் கிரி.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Related Posts Plugin for WordPress, Blogger...