Aug 15, 2010

சும்மா வரவில்லை சுதந்திரம்...


"நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை"

ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்கு வித்திட்ட மற்றும் முன்னின்று பிரிட்டின் படைகளைக் கொண்டு ஆயிரக் கணக்கான (பெண்கள், சிறுவர்கள் உட்பட) இந்தியர்களைக் கொன்று குவித்த ஜெனரல் டையர் (General Dyer) தந்த வாக்குமூலம் இது.



படிக்கும்போதே குலை நடுங்குகிறது. இத்தனை அதிர்ச்சி தரும் சம்பவங்கள், துயரங்கள் மற்றும் தியாகங்கள் தாண்டித்தான் போராடிச் சுதந்திரம் பெற்றோம் நாம்.  


ஆனால், இன்னொரு புறம் என்னுள் எழும் கேள்வி, "இத்தனை தைரியமும், தாய்நாட்டுக்கென உயிரையும் தரும் பண்பும் எங்கே போனது நம்மில்?"


எப்படியோ..... தன்னுயிர் தந்து நம்மை அடிமைத்தளையில் இருந்து விடுவித்த அத்தனை ஆத்மாக்களையும் இந்த சுதந்திரப் பொன்னாளில் வணங்கி மகிழ்கிறேன்.






ஜெய் ஹிந்த்...!!!

2 comments:

natbas said...

இன்றைக்குக் கூட இதை எல்லாம் நினைத்துப் பார்க்காவிட்டால் எப்படி...

சுதந்திரத்தின் பெருமை அது இல்லாத போதுதான் தெரியும் போலிருக்கிறது!

virutcham said...

Vote Maathiram
கொடியை கொஞ்சம் அலட்சியமாகப் பார்த்தால் இப்படித் தெரியும்

Related Posts Plugin for WordPress, Blogger...