முதலில் நண்பர் முரளியின் பார்வையில் நான்கே வரிகள் இப்படத்திற்கு விமரிசனம் எழுதியிருந்தேன். அப்போது இப்படத்தை நான் பார்த்திருக்கவில்லை. மிகத் தாமதமாகவே அலுவலக நண்பர்களுடன் சென்ற வாரம் மதராசப்பட்டினம் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.
வாவ்......!! என்ன படம் சார்!?
டைட்டானிக் ஸ்டைலில் துவங்கி இடையில் லகான் திரைத் தூவல்களுடன் தொடர்ந்து அங்கங்கே தொடர்ந்து டைட்டானிக்கை நினைவுறுத்திய வண்ணம் படம் சென்றாலும், "மதராசப்பட்டினம்" தமிழில் ஒரு முற்றிலும் மாறுபட்ட முயற்சி.
தேவையான அளவிற்கு மட்டும் ஹீரோயிசத்தைக் காட்டியிருக்கும் ஆர்யா கனகச்சிதமாக தன் ரோலைச் செய்துள்ளார். Nothing more Nothing less! அவருடைய கேரியரில் முக்கிய மைல் கல் மதராசப்பட்டினம்.
கதாநாயகி எமி'க்கு முன்னதாக நட்சத்திரப் பரிவாரத்தில் மின்னுபவர் ஹனீபா. மனிதர் மொழி பெயர்ப்பாளராக "நம்பி" ரோலில் வந்து பின்னியெடுக்கிறார். அவர் மரணத்திற்கு முன் கடைசியாய்ச் செய்த படம் இது. அவருடைய வழியனுப்புதலை நன்றாகவே செய்துள்ளது தமிழ்த்திரை. வாழ்த்துக்கள் விஜய் சார்.
"வெள்ளைநாயகி" எமி. க்யூட்'டாக இருக்கிறார். பாந்தமாக நடித்திருக்கிறார். கொடுத்த கேரக்டருக்கு முழுசாக மார்க் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். வெல்கம் டு இந்தியா மேடம். வெள்ளை நாயகியின் மூத்த கதாபாத்திரத்தைப் பற்றியும் இங்கே சொல்லியாக வேண்டும். அந்தப் பெண்மணியின் இறுக்கமான முக பாவங்களுடன் கூடிய நடிப்பு, 'சபாஷ்' போட வைக்கிறது.
அந்த வெள்ளைக்கார வில்லன் அபாரம். அவன் மூலமாக டைரக்டர் சொல்லியிருக்கும் ஆங்கிலேயக் காலத்து அராஜகச் செயல்பாடுகள் அதிர்ச்சி தருகின்றன. குறிப்பாக புரட்சி வீரன் ஒருவனைக் கொன்றுவிட்டு "பாரத் மாதா கி ஜே" என கெக்கலிப்பது குரூரம்.
நாசர், எம்.எஸ்.பாஸ்கர், பாலாசிங், "மிர்ச்சி" பாலாஜி, ஆர்யாவின் நண்பர்கள் குழாம், ஆர்யாவின் தங்கை ரோலில் வரும் அந்தச் சின்னப் பெண் என படத்தில் வரும் அத்தனை பேருமே அசத்தியிருக்கிறார்கள்.
படத்தின் முக்கிய ஹைலைட் "பூக்கள் பூக்கும் தருணம்" பாடல். ஜி.வி.பிரகாஷ் மெலடியில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். நா.முத்துக்குமார் எழுத்துக்களில் காதல் நம் ரத்த நாளங்களில் எல்லாம் புகுந்து படுத்தியெடுக்கிறது.
படத்தின் அதி முக்கிய ஹைலைட் "பழைய சென்னை". இங்கே கலை இயக்கம் செய்தவர்களும் கிராபிக் வேலை செய்தவர்களும் பெரும் பாராட்டிற்கு உரியவர்கள். படத்தை விட்டு அவற்றைத் தனிமைப்படுத்தாது, எங்கும் மிகைப் படுத்தாது படத்தினூடே அவை வரும் வண்ணம் செய்திருப்பது இயக்குனரின் பெரிய வெற்றி.
ஆரம்பப் பாடல், ஒரு காதல் தோல்விப்பாடல், நீண்ட நெடிய கிளைமாக்ஸ், "துரையம்மாள் டிரஸ்ட்" சம்பந்தப்பட்ட கொஞ்சம் மிகைக் காட்சிகள் என சில குறைகள் இருந்தாலும் அவை ஜனரஞ்சகத்திற்காக சேர்க்கப்பட்டவை என நாம் புரிந்து கொள்ளலாம்.
விடுதலைப் பின்னணியில் அழகழகாய் ஒரு காதல் கதை தந்தமைக்காக படத் தயாரிப்பாளர் "கல்பாத்தி" அவர்களுக்கும் படத்தை வெளியிட்ட ரெட் ஜயண்ட் குழுவினருக்கும் மிக முக்கியமாக இயக்குனர் விஜய் அவர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்.
6 comments:
//அந்த வெள்ளைக்கார வில்லன் அபாரம். அவன் மூலமாக டைரக்டர் சொல்லியிருக்கும் ஆங்கிலேயக் காலத்து அராஜகச் செயல்பாடுகள் அதிர்ச்சி தருகின்றன. குறிப்பாக புரட்சி வீரன் ஒருவனைக் கொன்றுவிட்டு "பாரத் மாதா கி ஜே" என கெக்கலிப்பது குரூரம்.
//
கப்பலோட்டிய தமிழன் ரேஞ்சுக்கு ஒரு தேசபக்திப் படத்தைப் பார்த்த உங்களுக்கு வீர சுதந்திர வீர வணக்கங்கள், மற்றும் கெக்கலித்த வெள்ளைக்கார வில்லன்களுக்கு என் கடும் கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.
ரொம்ப லேட்டாதான் பாத்திருக்கீங்க...இருந்தாலும் நல்ல படத்தை எப்ப பாத்தாலும் தப்பில்லை...
http://rameshspot.blogspot.com/2010/07/2010-madharasapattinam.html
இதுல இந்த படத்துக்கு நான் எழுதுனது இருக்கு..முடிஞ்சா படிங்க
ரொம்ப நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க.. எவ்வளவு ரசிச்சு பாத்திருக்கீங்கன்னு உங்களது வரிகள்ல தெரியுது.. நீங்க சொன்ன மாதிரி படமும் ரொம்ப அருமைதான்..
வாழ்த்துக்கள்..
@ நட்பாஸ்
உங்ககிட்ட எனக்குப் புடிச்ச விஷயமே, "அது கிண்டலா இல்லை சீரியசா"ன்னு எதிராளி புரிஞ்சிக்காத வண்ணம் எழுதறதுதான். எனிவே...நன்றி!
@ ரமேஷ்.
உங்க வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி. உங்க விமரிசனம் படிச்சேன். தெளிவா எழுதிருக்கீங்க.
பதிவு அருமை......வாழ்த்துகள்
@ RK Guru
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
இன்ட்லி'யில் உங்கள் தொடர் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களைப் போன்றோரின் ஊக்கத்தில்தான் என் போன்றோர் பதிவுகள் பலரைச் சென்றடைகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
Post a Comment