இப்படியொரு கவிதை மாமாங்கத்திற்கு ஒருமுறைதான் படிக்க முடிகிறது.....
"கூடு" நர்சிம்மின் அற்புதமான கவிதை!!
நண்பர்கள் மத்தியில் பாராட்டுதல்களுக்கு, "கொன்னுட்டடா மச்சான்" என முதுகில் ஓங்கி ஒரு அடி கொடுப்பார்கள். நர்சிம் ஒரு சீனியர் பதிவர், எழுத்தாளர்..... இருந்தும் இக்கவிதையைப் படித்தவுடன் ஓடிச்சென்று அவரை அன்பாய் முதுகில் ஓங்கியொரு சாத்து சாத்த வேண்டும் போலிருந்தது.
//கூடல் ஊடல்களின் பொருட்டல்லஆஹா.... இது போல் தமிழில் மட்டுமே எழுத இயலும், குறிப்பாக தேர்ந்த கைகளால்.
அது ஒரு பொருட்டல்ல//
//இருக்கிறது என்கிற எண்ணம்
இருக்கிறது இன்னும்//
யு-டர்ன் அடித்து வந்துத் திரும்பப் படிக்கும்போதுதான் விளங்குகின்றன சில அற்புத வரிகள்.
பின்நவீனத்துவப் புரியாக் கவிதைகளுக்கும், அருஞ்சொற்ப்பொருள் விளக்க மூன்றாம் தரக் கவிதைகளுக்கும் இடையே இப்படி வெளிவரும் "தெளிவான" கவிதைகள் "நச்" என இதயம் தொடுகின்றன.
4 comments:
சாமி, ஒரு நிமிஷம் நெஞ்சே நின்னுப் போச்சு சாமி! உங்களுக்கு என் இந்த கொலைவெறி!!!
மென்மையான கவிதைய எழுதினவருக்கு இவ்வளவு முரட்டுத்தனமான பாராட்டா?
இப்படியெல்லாம் தலைப்பு வெக்காதீங்க- உலகம் தாங்காது.
படிச்சவுடன் ஏற்பட்ட உணர்வு ஜி! அப்படியே வெளிப்படுத்திட்டேன், வேறொண்ணுமில்லை.
கிரி வலம் தொடங்கிட்டேன்.
மிக்க நன்றி ஜெரி சார்!
Post a Comment