உலகமே "நண்பர்கள் தினத்திற்கு" மாறி மாறி வாழ்த்துக்களை ஈமெயிலில், எஸ்.எம்.எஸ்'சில், அழைப்பில், நேரில், டுவீட்டில், பேஸ்புக்கில், ஆர்குட்டில் என வகை வகையாக பரிமாறிக் கொண்டிருக்க... நாமளும் அதையே பண்ணனுமா என்ன?
இந்த தாயார், தந்தையார், காதலர், அம்மத்தா, அப்பச்சன் தினங்கள் என அனைத்து நாட்களுக்கும், நண்பர்கள் தினத்திற்கும் கூட, நான் நண்பன் அல்லன். அப்படி ஒன்றும் எதிரியும் அல்லன். வாழ்த்து சொல்றியா தேங்க்ஸ்....வாங்கிக்கறேன். வாழ்த்து சொல்லணுமா இந்தா வாங்கிக்கோ வாழ்த்துக்கள். என்னவோ பண்ணிக்கோ போ என்று சொல்லும் ரகம்.
ஆனாலும் சில நேரங்களில் இவர்கள் பண்ணும் அலம்பல் தாங்காமல் "நிறுத்துங்கடா டேய்" என்று உச்சஸ்தாயியில் கத்தவேண்டும் போல வெறி வருகிறது. ஒரு நாள் எவனையாவது ஓங்கி உதைக்கத்தான் போகிறேன் போல.
இன்று என் நண்பன் (!) விஷால் அனுப்பின ஒரு குறுந்தகவலைப் பாருங்கள்...
1935'ஆம் வருடம் ஆகஸ்டு முதல் சனிக்கிழமை ஒன்றில் அமெரிக்க அரசு இளைஞன் ஒருவனைக் கொன்று போட்டது. மறுதினம் இறந்தவனின் உயிர் நண்பன் அதைத் தாங்க ஒண்ணாது தற்கொலை செய்துகொண்டு இறந்தான். அவன் நினைவாக அமெரிக்க அரசு (!!!), ஆகஸ்ட் முதல் ஞாயிறை "நண்பர்கள் தினமாக" அறிவித்துள்ளது (சொல்லவே இல்ல?). இந்த எழுபத்தைந்தாவது நண்பர்கள் தினத்திற்கு உன்னை அட்வான்ஸாக வாழ்த்துகிறேன்.
நானும் உயிரோட இருக்கேன், நீயும் உயிரோட இருக்க. "என்னோட போறாதகாலம்" நம்ம நட்பும் உயிரோட இருக்கு. இப்படி மொக்க போட்டு என்னோட வீக்-என்டை ஏண்டா பாழ் பண்ற நாசமாப் போனவனே என காரசாரமாக பதில் அனுப்பினேன்.
இதனால் இப்படி சக-சகாக்களை வகைதொகையில்லாமல் தாறுமாறாக லொள்ளு செய்யும் சகலமான/ணவர்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்.....
"உங்க எல்லோருக்கும் என் நண்பர்கள் தின வசவுகளை உரித்தாக்குகிறேன்...."
..
.
image couresy: angryzenmaster.com
2 comments:
ஒவ்வொரு தினத்திலும் ...வாழ்த்தோ வசவோ SMS பண்ணுங்கள் அது போதும் எங்களுக்கு..Airtel
அப்படியா? யார் சொல்கிறார்கள்? நீங்களா? ஏர்டெல்'லா?
Post a Comment