அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;- தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
இப்படியொரு கருநிறத்து அக்கினிக் குஞ்சொன்றைக் கண்ட அனுபவத்தையும் அந்த அக்கினிக்குஞ்சின் பேட்டியையும் கூட்டஞ்சோறு தளத்தில் படிக்கும் பாக்கியம் கிட்டியது.
கிரி டிரேடிங்'கில் பணி புரியும் இந்த எளிய பெண் "கலைவாணி"யின் வேலை மீதான சிரத்தையும், பக்தியும்; தான் கையாளும் பணி குறித்த ஆழ்ந்த ஞானமும், சிறந்த வாடிக்கையாளர் சேவையும் நம்மில் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.
இக்கட்டுரையில் இருந்து சில பத்திகள் இங்கே:
என்னையே குருகுருவெனப் பார்த்துக்கொண்டிருந்த அந்த எளிய பெண்ணை உதாசீனப்படுத்தி விட்டு, என் புத்தகத் தேடுதலைத் தீவிரமாக்கினேன்
“ஸார், உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா ?”
‘தத்வ போதா’ பற்றி இந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை என்ற அலட்சியத்துடன், நான்,
“ஆமாம். நான் ‘தத்வ போதா‘ என்ற புத்தகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.”
“சம்ஸக்ருதத்திலா அல்லது சம்ஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்திலா ?
கடவுளே, இந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்கிறது !!!
“சம்ஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில்”
“அப்படியானால், இதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.” , அவள் கையில் ‘தத்வ போதா‘ தமிழ்ப் புத்தகம்.
“இந்த எளிமையான அதே சமயம் அருமையான தமிழ்ப் பதிப்பை இந்து பதிப்பகத்துக்காக என். சிவராமன் என்பவர் எழுதியிருக்கிறார். உள்ளே சம்ஸ்கிருத சுலோகங்களும் உள்ளன.”
அடக் கடவுளே…. இந்த அறிவுஜீவிப் பெண்ணை எதனால் இவ்வளவு மட்டமாக எடை போட்டு விட்டேன் ? நான் ஒரு N.R.I என்ற ஆணவமா ? அல்லது இந்த கருப்பான கிராமத்துப் பெண் போன்ற தோற்றம் கொண்ட இந்தப் பெண்ணுக்கு ‘தத்வ போதா‘ பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற என் அவசர முன் முடிவா ?
இந்த அருமையான பெண்ணுக்கு முன் அடி முட்டாளாக உணர்ந்தேன். மிகுந்த பணிவுடனும், மரியாதையுடனும் அந்தப் பெண்ணிடம் பேச ஆரம்பித்தேன்.
“மேடம், உண்மையைச் சொல்லப் போனால் நேற்று வரை இந்த ‘தத்வ போதா‘ புத்தகத்தை எழுதியவர் யார் என்று கூட எனக்குத் தெரியாது. நேற்று நான் கேட்ட ஒரு உரை தான் இந்தப் புத்தகத்தைத் தேட என்னைத் தூண்டியது…..”
“நீங்கள் சென்றது பாரதீய வித்யா பவனில் கோதா வெங்கடேச சாஸ்திரி ஆற்றிய உரைக்கா ?”
வியப்பின் எல்லைக்கே சென்ற நான், “உங்களுக்கு எப்படித் தெரியும் ?”
“இந்தத் தலைப்பில் வழக்கமாக உரையாற்றுபவர் அவர். மேலும் இது போன்ற தலைப்புகளில் உரையாற்றுபவர்களில் மிகச் சிறந்தவர் அவர்.”
“உங்களுக்கு இது போன்ற விஷயங்களில் ஆர்வம் உண்டா ? “
“ஆமாம். நான் சுவாமி விவேகானந்தர் பற்றியும், ராமகிருஷ்ணர் பற்றியும் நிறையப் படித்துள்ளேன். உண்மையில், இந்த ‘தத்வ போதா‘ என் மனதிற்கு நெருக்கமான ஒன்று.”
“என்ன ! நீங்கள் இந்த ‘தத்வ போதா‘ ஏற்கனவே படித்திருக்கிறீர்களா ?”
“சிவராமன் எழுதிய இந்தப் புத்தகத்தை நான் முழுக்கப் படித்துள்ளேன். இதன் சிறப்பே, நீங்கள் படிக்க ஆரம்பித்தால், முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டீர்கள்.”
“அப்படியென்ன சிறப்பு இந்தப் புத்தகத்தில் ?”
“ஸார், நீங்கள் என்னுடன் விளையாடுகிறீர்கள் என்று எண்ணுகிறேன்.. உங்களுக்கு உண்மையிலேயே இந்த ‘தத்வ போதா‘ பற்றி ஒன்றும் தெரியாதா ?”
அந்தப் பெண்ணிடம் என் அறியாமைக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.
“ஸார், என்னைப் பொருத்த வரையில் இந்தப் புத்தகத்தைப் படித்தால் உங்களுக்குக் கிடைப்பது முழுமையான வேதாந்த சாரம். அஹங்காரம் உங்களிடமிருந்து முற்றிலும் மறைந்து, நீங்கள் மேலும் பணிவாக நடக்க ஆரம்பிப்பீர்கள்.”
“எளிமையான இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் இவ்வளவு பலன்களைப் பெற முடியுமா ?” என்று சிறிது அவநம்பிக்கையுடன் கேட்டேன்.
“நிச்சயமாக. ஆனால் நீங்கள் சிரத்தையுடனும், முழு நம்பிக்கையுடனும் இதைப் படித்தால் முழுப் பலன் கிடைக்கும்.”
கட்டுரையை முழுதும் வாசிக்க:
"கிரி ட்ரேடிங் கலைவாணியும் ஆதி சங்கரரின் தத்வ போதமும்…."
.
.
.
3 comments:
என்ன இது அநியாயம்- என்னை மாதிரி நீங்களும் சுட்டி கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்களே!!!
பேச்சோட பேச்சா நீங்க சந்தித்த இந்த மாதிரியான ஒரு வித்தியாசமான மனிதரைப் பாராட்டி எழுதியிருக்கக் கூடாதா?
எப்படியோ, அந்த அம்மையாரின் குடும்பம் நல்வாழ்வு காண எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்....
For latest updates on this
http://balhanuman.wordpress.com/about/
Thanks so much for your update. I think a separate post is required to update this in my blog.
Post a Comment