Sep 6, 2010

ஊட்டி சந்திப்பு......

ஊட்டி சந்திப்பு பற்றிய அறிவிப்பு ஜெயமோகன் தளத்தில் வந்தவுடனேயே சண்முகநாதனிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. "என்ன சார், நான் ரொம்ப ஆவலா ஆர்வமா இருக்கேன், கலந்துக்க இருக்கேன். நீங்க எப்படி?" என்றார்.

நான் இதுவரை எந்த இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொண்டவனில்லை. இந்த முறை கலந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. அகில் வருகை, மடிப்பாக்க மாற்றம், தனிக்குடித்தனக் கொள்முதல்கள் என நாட்கள் பரபரப்பாக இருந்ததால் ஒரு புறம் முடியுமா என யோசனையாய் இருந்தது.

கூட்டம் பற்றின ஏற்பாடுகள், எதிர்பார்ப்புகள் பற்றி ஜெயமோகன் தளத்தில் இரண்டாம் கடிதம் படித்ததும், "சரிதான், இது நமக்கில்லை! கடைசி நேர மாறுதல்களுக்கு உட்பட்டு எதற்கு வீணே கலந்து கொள்ள அனுமதி பெற வேண்டும்", என முடிவு செய்து சண்முகத்திடம், "இல்லைப்பா, நீ போயிட்டு வா" என்றேன்.



தான் சென்று வந்த, கலந்து கொண்ட, பெற்று மகிழ்ந்த அனுபவத்தை விழிகள் விரிய சண்முகம் விவரித்ததும் (தொலைபேசியில்தான்), அடடே மிஸ் பண்ணிட்டோமோ எனத் தோன்றியது. சரி அடுத்த வருஷம் பார்ப்போம் என முடிவு செய்து "ஒரு விருந்தினர் பதிவு நமக்காக எழுதறது", என சண்முகத்திடம் கேட்டுக் கொண்டேன்.

தந்திருக்கிறார்.

அது....நாளை!

1 comment:

natbas said...

:)

அதுதானே பார்த்தேன், நமக்கெல்லாம் குற்றாலம் கீழ்ப்பாக்கம்தானே சரிப்படும்!

அண்ணன் ஷண்முகநாதனின் அனுபவங்களைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்- இங்க அடிக்கடி பின்னூட்டம் இடாததில் இருந்தே அவர் வேற மாதிரின்னு தோணுது, பாக்கலாம் .

Related Posts Plugin for WordPress, Blogger...