Dec 3, 2010

ரத்த சரித்திரம் குறித்து....(மீள் பதிவு)

ரத்த சரித்திரம் வெளியாகும் நாளில் அந்த படம் குறித்து நான் எழுதிய முந்தைய பதிவுகள் இரண்டில் இருந்து சில பகுதிகளை இங்கு அளிக்கிறேன்.

படம் பார்க்கையில் எலெக்ட்ரிக் வயரைத் தொட்டாற்போல் இருக்கும் என்பது தெரிகிறது. நிஜ விமரிசனம் அடுத்த வாரம்...

இது முன்னோட்டம்...


_______________________


1 . சூர்யாவின் ரத்த சரித்திரம்....!!


இந்திய சினிமாவின் மேகிங் ஸ்டைலை மாற்றி அமைத்ததில் ராம் கோபால் வர்மாவின் பங்கு முக்கியமானது.  ஆனால் இந்த டிரைலரைப் பார்க்கையில், அந்த ஸ்டைல் அடுத்த அடுத்த கட்டங்களைத் தாண்டிச் செல்வதாய்ப் படுகிறது எனக்கு.

கூர்மையான வசனங்கள் உங்களைத் தைப்பதை இந்த வீடியோவைப்  பார்க்கையில் நீங்கள் உணரலாம். ரக்த சரித்ரா என ஹிந்தியில் வரவிருக்கும் இப்படம் நம்ம சூர்யாவுக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என நம்புவோம்.




___________________________________

2. ரத்த சரித்திரம் - மேலும்..




ரத்த சரித்திரம் அல்லது ரக்த சரித்ரா ஆந்திராவுல, குறிப்பா அனந்தபூர் ஜில்லாவுல நடந்த ஒரு உண்மை சம்பவமாம். பலமான எதிர்ப்புகளைக் கடந்துதான் இந்தப் படத் தயாரிப்பு நடந்து இருக்கு.

பரிடால ரவி அப்படிங்கற அரசியல்வாதியின் ரோலைத்தான் விவேக் ஓபராய் பண்ணறதாப் பேச்சு. பரிடால ரவி பத்தி விக்கிபீடியாவுல படிச்சி பாருங்க. ரத்தம் உறையுது.
மத்தெலசெருவு சூரி அப்படின்ற factionist ரவியைக் கொலை செஞ்சாருன்னு அவரு ஐந்து வருஷம் ஜெயில்ல இருந்துட்டு காங்கிரஸ் ஆதரவுல சமீபத்துல வெளி வந்ததாத் தெரியுது. இந்த ரெண்டு குடும்பத்துக்குமான பகை சுமார் இருபத்தி அஞ்சு வருஷத்துக்கும் மேல தொடர்றதுதான் ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. சூரி ரோலைத்தான் சூர்யா பண்றார்னு நாமே புரிஞ்சிக்கலாம்.

ரத்த சரித்திரம்....உண்மையிலேயே ரத்த சரித்திரம் சார்.


முந்தைய பதிவுகள்...

1 comment:

சிவராம்குமார் said...

படத்தை பற்றி நிறைய மாறுபட்ட கருத்துக்கள்!!!

Related Posts Plugin for WordPress, Blogger...