சூடிக் கொடுத்த சுடர்க் கொடி...
சக பதிவர் ஒருவர் தன் வலைப்பூவில் திருப்பாவையின் முதல் பாடலை மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் நேற்று வெளியிட்டிருந்தார். அங்கே இரண்டாவதாக அன்பர் ஒருவர் தந்த கமெண்ட்டைப் பாருங்கள்.
இந்துத்துவா அமைப்புகளுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி, அழைப்பு மணி அல்லது ஏதோ ஒரு மணி. தயவு செய்து உங்கள் மத மாற்றத்திற்கு எதிரான பிரச்சாரங்களின் வீரியங்களை சற்றே குறைத்துக் கொண்டு இங்கே இது போன்ற அடிப்படை விஷயங்களை நம் இந்து அன்பர்களுக்கு எப்படிக் கொண்டு செல்வது எனப் பாருங்கள்.
பாவை நோன்பின் இரண்டாம் பாடல் மற்றும் பாசுரச் சிறப்புகள் பற்றி வாசிக்க
ஃபேஸ்புக் எப்படி கூகுளை விழுங்க முடியும்?
இந்தப் படத்தை கிளிக் செய்து பார்க்கவும். வாஷிங்க்டன் போஸ்ட் எத்தனை இடங்களில் தன் ஒற்றைப் பக்கத்தில் ஃபேஸ்புக்கை துணைக்கு அழைக்கிறது எனத் தெரியும்.
ரசித்த கவிதை...
சிற்சில
துரோகங்கள்
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்
நண்பனொருவனின்
நயவஞ்சகம்
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை.
துரோகங்கள்
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்
நண்பனொருவனின்
நயவஞ்சகம்
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை.
(நன்றி: செல்வராஜ் ஜெகதீசன் - சொல்வனம் வழியே..
ரஜினியின் தில்லுமுல்லு....
டிசம்பர் ஆரம்பத்தில் நான் தந்த இரு வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நான் நிறைவு (எ) ஆரம்பம் செய்யவில்லை.
அதற்குப் பிராயச்சித்தமாக ரஜினியின் தலைசிறந்த படமொன்றின் தலைசிறந்த காட்சி ஒன்று இங்கே உங்களுக்கு...
மடிப்பாக்கம் குப்பை
ஒரு குப்பை பெறாத மேட்டர் சார்:
தீபாவளி சமயத்தில் பத்து ரூபாய் தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் தெருவில் குப்பை அள்ளும் பெண் ஒருவர் ஒன்றரை மாதமாக குப்பை வண்டியை எங்கள் தெருவினுள் திருப்பாமல் அஜிடேட் செய்து வருகிறார்.
உள்ளூர் அரசியல் அமைப்பில் பிரதிநிதியாக இருக்கும் ஒருவரைப் பார்த்துப் பேசினபோது....
"சார், அவங்க பெர்மனன்ட்டு நாங்கல்லாம் டெம்பரரிதான், பாத்து நீங்களே பத்தோ இருவதோ குடுத்துங்க சார்", என்றார்.
ஒன்றரை மாத காலமாக எங்கள் வீடுகள் நாறுகின்றன. அரசின் ஒரு நான்காம் நிலை கடைநிலை ஊழியை ஒரு தெருவின் குப்பை விதியை ஆள முடிகின்றது, எங்களால் ஒன்றையும் pluck'க்க முடியவில்லை என்றால்..... நீங்க என்னத்த ராஜா கிட்டயும் மு.க. கிட்டயும் ஒரு சனநாயக சட்ட முறைய வெச்சுக்கிட்டு பண்ணப் போறீங்களோ எசமான்களா?
6 comments:
இந்த பார்மட் நன்றாக இருக்கிறது சார். தொடருங்கள்.
//உள்ளூர் அரசியல் அமைப்பில் பிரதிநிதியாக இருக்கும் ஒருவரைப் பார்த்துப் பேசினபோது....
"சார், அவங்க பெர்மனன்ட்டு நாங்கல்லாம் டெம்பரரிதான், பாத்து நீங்களே பத்தோ இருவதோ குடுத்துங்க சார்", என்றார்.//
நல்ல ஜோக்.
வெள்ளிக் கதம்பம் நல்ல தொகுப்பு
@ Natbas
@ Nis
மிக்க நன்றி!
வெள்ளிக் கதம்பம் நல்ல தொகுப்பு
கவிதை ரசிக்க வைத்தது . பகிர்வுக்கு நன்றி
@ ஷங்கர்
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
Post a Comment