காயாத கானகம்
அடர் ரோஜா வனத்தினிடை
சீதைக்கு ஒரு கிளியாய்
பறந்து திரிந்திட்ட பொழுதுகளில்
வனமெங்கும் வண்ணம் சிந்திய
களைப்பினில்
முள்ளோ மலரோ பாராது
அமிழ்த்தும் நினைவுகளில்
அமர்ந்து வழிந்து சிவந்த
நாசிநுனியின் முத்தத்தில்
இன்னமும் காயாதது
என் குருதியும்.
நானா?
கருணைப் பெருங்கடலென்றான்
கையிருப்பைத் தந்தேன்
கண்ணீர் துடைக்கப் பிறந்தவனென்றான்
கைக்குட்டை தந்தேன்
கைகளைக் காலெனத் தொட்டான்
சரிதானென்றேன்
கடவுளே நீதானென்றான்
கையை விடப்பா என்றேன்.
ராசா ராசாவென அழைத்தான்
விட்டுவிடய்யா என்னை என்றேன்
No comments:
Post a Comment