Feb 24, 2011

உலகக்கோப்பை - நச்சுன்னு நாலு



போட்டிகள் தொடங்கி ஐந்து நாட்கள் ஆகியிருக்கின்றன. பங்களாதேஷ், கென்யா, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, கனடா போன்ற முக்கியத்துவம் இல்லாத அணிகளுடன் பந்தயக் குதிரை அணிகள் பங்கு பெற்ற ஆட்டங்கள் முடிந்திருக்கின்றன. இதுவரை அதிர்ச்சி முடிவுகள் ஏதுமில்லை.


கடந்த இரண்டு நாட்களில் நடந்த போட்டிகளில் இங்கிலாந்து - நெதர்லாந்து போட்டி நல்ல சுவாரசியம் சேர்த்த போட்டி. பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு எதிராக அனாயசமாக 292 ரன்களை நெதர்லாந்து குவித்தது அசத்தலாக இருந்தது. மயிரிழையில் இங்கிலாந்து தோல்வியைத் தவிர்த்தது. இந்திய அணிக்கு அடுத்த வாரம் நெதர்லாந்துடன் ஒரு போட்டி உள்ளது. இந்தியா எப்படி சமாளிக்கிறது எனப் பார்க்கவேண்டும்.

நான்னேஸ் என்ற வேகப் பந்து வீச்சாளரை நினைவிருக்கிறதா? ஐ.பி.எல். போட்டிகளில் டெல்லி டேர்டெவில் அணிக்கு பந்து வீசி அசத்தியவர். அவர் அடிப்படையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்று இப்போது அந்த அணிக்கு ஆடத் தொடங்கியுள்ளார். டுவென்டி டுவென்டி போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியில் அவர் பந்து வீசுவதைப் பார்க்கலாம்.

"நான்னேஸ் கண்டி இருந்திருந்தான், இங்கிலாந்து பசங்க பல்லப் பேத்திருக்கலாம்", என நேற்று ரயிலில் ஒருவர் பேசுவதைக் கேட்டேன்.

  

நேற்றைய பாகிஸ்தான் - கென்யா போட்டியில் ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் கொண்ட உத்தியை பாகிஸ்தான் அணியும் பயன்படுத்தியது. நிதானமாக ஆடத் தொடங்கி ஆட்டத்தின் பின்பாதியில் ரன் சேர்த்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சின்ன அணிகள் தரும் அதிர்ச்சி வைத்தியங்களிளிருந்து தப்பிப்பது எப்படி எனப் பாடம் எடுத்தார்கள். கென்யா வீரர்கள் பேட்டிங்கில் சென்னை போட்டியைப் போலவே சொதப்பியது "போங்கடா டேய், நீங்கள்லாம் எதுக்குடா ஆட வர்றீங்க?" எனக் கேட்கத் தோன்றியது.

நிஜமான போட்டி இன்றுதான் துவங்குகிறது எனலாம். இன்று தொடங்கி வரும்  ஞாயிறு வரை தொடர்ச்சியாக முக்கியத்துவம் வாய்ந்த எட்டு அணிகளும் பங்குபெறும் ஆட்டங்கள்.

தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் - இன்று
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து - நாளை
இலங்கை - பாகிஸ்தான் - சனிக்கிழமை
இந்தியா - இங்கிலாந்து - ஞாயிறு

இவற்றில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்க அணிகளின் ஆதிக்கம் இருக்கும் என நம்பலாம். சனி மற்றும் ஞாயிறு ஆட்டங்களில் நான்கு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் கொஞ்சம் கூடுதல் சுவாரசியத்தை எதிர்நோக்கலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்! விரிவாக விவாதிப்போம்!

4 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு. கிரிக்கெட் பற்றி நன்கு ரசித்து எழுதுகிறீர்கள். தொடர்ந்து படித்து வருகிறேன்.
வாழ்த்துக்கள்.

Giri Ramasubramanian said...

@ ரத்னவேல்

உங்கள் தொடர் வாசிப்பு, ஊக்குவிப்பு மற்றும் கருத்துப் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி.
உங்கள் வலைமனை இன்னும் இடுகைகள் ஏதும் இடப்படாமல் இருக்கிறதே. எழுத நேரம் ஒதுக்கலாமே சார்?

அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்! said...

நல்ல பதிவு

வாழ்த்துக்கள்.

புது கடைக்கு வரவேற்கிறேன்

http://gladiatorveeran.blogspot.com/

Giri Ramasubramanian said...

நன்றி வீரரே!

உங்கள் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

ஒரே அடிதடி குத்துவெட்டுன்னு இருக்கவே பயந்து வந்துட்டேன். ஹஹா தொடர்ந்து வாசிக்கிறேன். மீண்டும் நன்றிகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...