இளம் வயது எஸ்.ராஜம்
Image courtesy: sawf.org
இப்படியெல்லாம் நட்பாஸ் அவர்கள் எழுதுவதால்தான் அவரை நான் என் ஆசான் என்று விளிக்கிறேன். எஸ்.ராஜம் அவர்கள் நினைவு விழாவிற்கு திரு.லலிதாராம் அழைத்திருந்தார். போகாதது எத்தனை குற்றம் என நட்பாஸ் அவர்களின் இந்த இடுகையை வாசித்தபின் முற்றிலும் உணர்ந்தேன்.
அந்தக் கட்டுரையிலிருந்து சில பத்திகள்...
எஸ் ராஜம் நினைவு விழாவின் முடிவில் திரு எஸ் பி காந்தன் மற்றும் லலிதா ராம் ஆகியவர்கள் உருவாக்கிய ஆவணப்படத்தின் சில காட்சிகளைத் திரையிட்டார்கள்.......ஒரு வகையில் அந்த ஆவணப் படத்தை ஒரு கண் திறப்பு என்று சொல்ல வேண்டும். ஒரு கணத்தில்.....
......அந்தஆவணப் படத்தின் துவக்கத்தில் டைட்டில் போடும்போது ராஜம் அவர்களின் இள வயது புகைப்படங்களை ஸ்டாப் மோஷன் ஷாட்களாக அமைத்து பின்னணியில் அவர் பாடுவதைக் கேட்கையில் அந்தக் குரலின் வேகமும் கோர்வையும் அருவி போல் பாய்ந்தன.....
....நான் அந்த கணத்தில் புகைப்படங்கள் மற்றும் அவரது குரல், கானம் வாயிலாக ராஜம் அவர்களை அறிந்தேன்- ஒரு கம்பீரமான ரீங்காரமாக. உச்சி வெய்யில் வேளையில் சர்வமும் அசைவற்றுக் கிடக்கும்போது கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அரைத் தூக்கத்தில் இருக்கிறவனை திடீரென்று அறையுள் நுழைந்து ரீங்கரிக்கும் பொன் வண்டு போல் அந்தக் குரல் என்னை எழுப்பியது- மலர்ப்படுகைகள், வனம், ஆறு என்று அந்த வண்டின் ரீங்காரத்தூடே விரிந்து கொண்டே போகிறது அறைக்குள் இருக்கும் நம் உலகம்.....
....நாம் நம்மை மறந்து, நம் நினைவுகளை இழந்து காலப் பிரக்ஞையின்றி இந்த இசையின் லயத்துடன் ஒன்றும்போது நமக்கும் இந்த உன்னதம், நாம ரூபங்களுக்கு அப்பாற்பட்ட பிரம்மத்தின் சாந்நித்யம் ஒரு சிறு சன்னலின் ஊடாகத் தென்படுகிறது- இந்த லயிப்புக்கு வெளியே எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அவை லயிப்பின் அனுபவத்தை சுட்டலாமே அன்றி தொட்டு விட முடியாது......
நானே நேரில் கண்டிட்ட அனுபவம் தந்த என் ஆசானுக்கு நன்றி!
.
.
.
1 comment:
ஆசான்னு சொல்லாதீங்க சார், ப்ளீஸ்- முதல்ல சீரியஸா காமடி பண்றீங்கன்னு நினைச்சேன், இப்படி அடிக்கடி சொன்னா காமடியான சீரியஸா இருக்கு- நமக்கு அந்த ஒர்த் இல்லைங்கறது எல்லாருக்கும் தெரியும்.
நம்ம எல்லாருக்கும் எப்படி இறைவன் ஒருவனோ, அதே மாதிரி ஆசானும் ஒத்தர்தான்!
ஹி ஹி....
Post a Comment