திரை விமர்சனம் பண்ண யூ.டியூப்ல கம்பெனி ஆரம்பிச்சி நடத்தறாங்க டோய்!
கொஞ்சம் இருங்க! அந்தத் தம்பி
என்ன சொல்லுதுன்னு
முழுசாக் கேப்போம்!
உண்மைத்தமிழன், அதிஷா, ஹரன் பிரசன்னா, பாரா, கேபிள் ஷங்கர், மருதன் என எத்தனை பேர் எழுதிய விமர்சனங்கள். அப்பப்பா! ஒருவர் நல்ல படம் என்கிறார். ஒருவர் குப்பை என்கிறார். ஒருவர் தூக்கி வைத்து ஆடணும் என்கிறார், மற்றவர் தூக்கிப் போட்டு மிதிக்கணும் என்கிறார்.
படம் பாரு, பார்க்காதே என ஒவ்வொரு விமர்சனம் படித்த பின்னும் என் மனம் ஊஞ்சல் ஆடிக்கொண்டே இருந்தது. கடைசியில் போச்சுடா விடு விஜய் டி.வி.யில் உலகத் தொலைக் காட்ச்சியில் முதல் முறை திரையிடும்போது பார்த்தால் ஆச்சு என நினைத்துக் கொண்டேன்.
இன்றும் இணையத்தை மேய்ந்த போது கிடைத்தது இன்னும் ஒரு விமர்சனம். உள்ளதில் ஆகச் சிறந்தது என இதையே கொண்டாடுவேன் நான்.... பாரா'வை விட, பிரசன்னா'வை விட இவர் சிறந்த விமர்சகராக எனக்குத் தெரிகிறார்!
திரை விமர்சனம் எழுதுவது எப்படி என பாரா முதலானோர் பாடம் எடுக்கும் அவசியத்தைத் தகர்த்தெறிகிறார் இந்த இளம் விமர்சகர்.
1 comment:
Super Vimarsanam :)
Post a Comment