இன்று அலுவலகத்தில் ஒரு கான்பரன்ஸ் கால். கடந்த மூன்று மாதங்களில் செயல்பாடுகளில் சிறந்த அணி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த அணியை "சாம்பியன்" என அறிவித்து மலர்க்கிரீடம் சூட்டுவார்கள். யார் சாம்பியன் என்பதை நாங்கள் பேசி அடுக்கடுக்காய் அடுக்கும் பாயிண்டுகள் தீர்மானிக்கும்.
"நான் இப்படி" என ஒருவர் சொன்னால் "நான் அப்படி" என இன்னொருவர் சொல்லுவார். பேசிக்கொண்டிருக்கும்போதே "அது எப்படி" என குறுக்குக் கேள்விகள் வந்துவிழும். அத்தனையையும் சமாளித்து பேசிமுடித்துக் கவிழ்த்தால் பின்னொருநாளில் யார் சாம்பியன் என அறிவிப்பைத்தாங்கி மின்னஞ்சல் ஒன்று வரும். சாம்பியன்ஷிப் வாங்கின அணி எழுந்து நின்று ஆர்ப்பரிக்கும்.
இன்றைக்கு அந்த கான்காலுக்கு முன்னதாக நாங்கள் செய்து கொண்டிருந்த ஆயத்தங்களும், கான்காலின் போது எங்களைச் சூழ்ந்திருந்த அந்த சூழலின் அழுத்தமும் சொல்லி மாளாது.
இது இப்படி இருக்கையில், நம் இந்திய பாகிஸ்தான் அணிகளிடையேயான இன்றைய ஆட்டத்திற்கு இந்த பாரதமே ஆடுகிறது பாருங்கள் ஒரு ஆட்டம். அதிலும் குறிப்பாக நம் மீடியா செய்து கொண்டிருக்கும் நர்த்தனங்கள் பற்றி என்னத்த சொல்ல?
இத்தனை பிரஷர்'களுக்கு இடையே ஆடத் தயாராக இருக்கும் தோனி பாய்ஸ்'க்கு வாழ்த்துக்கள்!
இத்தனை பிரஷர்'களுக்கு இடையே ஆடத் தயாராக இருக்கும் தோனி பாய்ஸ்'க்கு வாழ்த்துக்கள்!
படங்கள் - நன்றி: ஜெய் ஹிந்த்
No comments:
Post a Comment