Dec 2, 2011

யு.எஸ். விசாவும் பின்னே ஞானும்



இடம்: வீனஸ் ஸ்டுடியோ, மடிப்பாக்கம்

ஸ்டுடியோ ரிசப்ஷனில்

”வாங்க சார்”

“பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுக்கணும்”

“எடுத்துடலாம் சார், எத்தனை காப்பி வேணும்?”

“எப்படி சார்ஜ் பண்றீங்க”

“எட்டு காப்பி அறுபது ரூபா”

“எக்ஸ்ட்ரா காப்பி வேணும்னா?”

“எக்ஸ்ட்ரா எட்டு காப்பி போட்டுக்கோங்க. மொத்தம் பதினாறு காப்பி ஹண்ட்ரட் ருபீஸ்”

“ஓகே! ஸிடி’ல காப்பி பண்ணித் தருவீங்களா?”

“அதுக்கு ஒரு 30 ரூபா எக்ஸ்ட்ரா சார்”

“ஸிடி முப்பதா?”

“ஆமாங்க”

“சரி போடுங்க”

“ஒன் தர்ட்டி குடுங்க சார். பாஸ்போர்ட் சைஸ்தானே? கரெக்டா, என்ன சைஸ்ல வேணும் சார்”

“சாரிங்க! தப்பா சொல்லிட்டேன்! இது யு.எஸ். விசாவுக்கு 2x2 இன்ச் சைஸ்ல”

”ஓ! யு.எஸ். விசாவுக்கா? அதுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் ஆகும் சார்”

“எப்படி சார்ஜ் பண்றீங்க”

“அது ஆறு காப்பி ஒன் ஃபார்ட்டி ஆகும்”

“நூத்தி நாற்பதா”

“ஆமாம் சார்”

“சிக்ஸ் காப்பீஸ்”

“யெஸ்”

“அது என்னங்க! பத்து காப்பி கம்மியாத் தர்றீங்க, ஆனா நாப்பது ரூபா எக்ஸ்ட்ரா?”

“அது வொய்ட் பேக்-க்ரவுண்ட் வரணும் சார். கொஞ்சம் ஃபோட்டோஷாப் வொர்க் எல்லாம் இருக்கும்”

“அதுக்குன்னு இவ்ளோ அதிகமா வாங்குவீங்க. ஹண்ட்ரட்’க்கு எட்டுன்னா கூட பரவால்லை. இது ஜாஸ்தியா இருக்கே”

“இல்லை சார். இதான் நாங்க சார்ஜ் பண்றது”

”சரி போடுங்க”

“ஒன் நைன்ட்டி குடுங்க சார்”

“எப்படிங்க ஒன் நைன்ட்டி?”

“நூத்தி நாப்பது ப்ளஸ் ஸிடி’க்கு ஒரு ஃபிஃப்ட்டி”

“ஸிடி முப்பதுன்னுதானே சொன்னீங்க”

“இல்லை இதுக்கு அம்பது ரூபா சார்”

”இதென்னங்க புதுக்கதை? அதே ஸிடிதானே?”

”இல்லை இதுக்கு கொஞ்சம் வொர்க் ஜாஸ்திங்கறதால அப்படி எக்ஸ்ட்ரா சார்.”

“என்னங்க சொல்றீங்க. இது அதே ஸிடி’தானே”

“இல்லை சார், நாங்க இப்படித்தான் சார்ஜ் பண்றது”

“சரியாப்போச்சு. போடுங்க போடுங்க!”



உள்ளே ஸ்டுடியோவில்


பின்னணியில் திரைச்சீலை கச்சா முச்சாவென ஏதோ நிறத்தில் இருக்க, இதை எப்படி வெண்மையாக்குவார்கள் என்ற யோசனையில் நான் இருக்க...

”தலையை நேரா வைங்க சார், இங்க பாருங்க, ஏன் சார் லைட் ஷேட்’ல ஷர்ட் போட்டீங்க அதுவும் வொயிட்டாத் தெரியும். கொஞ்சம் இருங்க”

அந்தத் திரைச்சீலையை எப்படி வெண்மை ஆக்குவார்கள் என்று நான் மேலும் ஆழ்ந்து யோசித்த அந்தக் கணத்தில்...

“ஒரு நிமிஷம் சார்”, என்று விட்டு ஃபோட்டோ எடுக்க நின்ற அந்தப் பெண் பின்னே சென்று “சரேல் சரேல்” என்று ஏதோ சத்தம் தந்தாள், திரும்பிப் பார்த்தால் பின்னணியில் சுவரின் நிறம் பால் வெண்மையில் பளிச் என்று இருந்தது. அதுதான் ஃபோட்டோஷாப் வொர்க் போலிருக்கிறது.

(தொடரும்)

12 comments:

Pulavar Tharumi said...

பாஸ்போர்ட்டிற்கு போட்டோசாப் தேவையற்றது. ரொம்ப போட்டோசாப் பண்ணினால், அந்த போட்டோக்களை தூதரகம் ஏற்காமல் போகவும் வாய்ப்பு உண்டு. நான் அமெரிக்க விசா சமர்ப்பிக்கும் போது இப்படி தான் சென்னையில் ஒரு ஸ்டூடியோவிற்கு சென்றேன். அவர்கள் எனது முகத்தில் இருக்கும் தழும்பு அது இதுவென்று அனைத்தையும் போட்டோசாப் மூலம் நீக்கிவிட்டு எனது போட்டோவை பத்திரிக்கைகளில் வரும் மாடல்களின் போட்டோவை போன்று பளீச்சென்று மாற்றி வைத்திருந்தனர்.

அதை தூதரகத்தில் கொடுத்தால் நிராகரித்து விடுவார்களோ என்ற பயத்தில், நான் வேறு ஒரு தரமான கடையில் சென்று புதிதாக போட்டோ எடுத்துக்கொண்டேன். அவர்கள் படத்தில் வெளிச்சத்தை மட்டுமே கூட்டினார்கள். விசா பாஸ்போர்ட் போட்டோக்களுக்கு எதையும் மாற்ற மாட்டோம் என்றும் சொன்னார்கள்.

natbas said...

வாழ்த்துகள் சார்.

எப்ப ப்ளைட்?

:)

Sameer said...

இதே தான் எனக்கு new zealand விசா போட்டோ எடுக்க அடையாறு Silver colour labல (near chennai corporation office) நடந்துது.

Giri Ramasubramanian said...

@ Pulavar Tharumi

ஹஹா! என் விசயத்தில் அவர்கள் ஒரு ஃபோட்டோஷாப் வேலையும் பார்க்கவில்லை என்பதுதான் காமெடி :)

Giri Ramasubramanian said...

@ நட்பாஸ்

அடுத்த அத்தியாயத்தில் சொல்றோம் அதை

Giri Ramasubramanian said...

@ சமீர்

நீங்களுமா? ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்ம் ஸேம் ப்ளட்!

ஜெயக்குமார் said...

வெளிநாட்டுக்குப் போய் லட்ச லட்சமா சம்பாதிக்கப் போறீங்கள்ள? அப்புறம் எவ்வளவு கேட்டாலும் குடுக்காமலா போயிறப்போறீங்கன்னு ஒரு நம்பிக்கை.. பாருங்க.. நீங்க கேட்ட பணத்தைக் குடுத்து போட்டோவும் வாங்கிட்டு வந்துட்டீங்க.. திரைச்சீலை மாத்துனதுலதான் அவரோட தெறமையே ஒளிஞ்சிருக்கு.. :-))

நல்ல பதிவு.

Giri Ramasubramanian said...

@ஜெயக்குமார்

//வெளிநாட்டுக்குப் போய் லட்ச லட்சமா சம்பாதிக்கப் போறீங்கள்ள?//

சரியாப்போச்சு போங்க

மல்லிகார்ஜுனன் said...

யூ.எஸ்? யூ மீன் உழவர் சந்தை?

எனி வே! காங்கிரஸ்! சாரி.. கங்க்ராட்ஸ்...

Giri Ramasubramanian said...

@ Vedhalam

உழவர் சந்தை? அதுக்கு டிக்கெட் கெடைக்குதா பாக்கேன் மொதல்ல! நன்றி

நடராஜன் said...

அப்படியே எனக்கும் ஒரு டிக்கெட் போடுங்க தல

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...