நன்றி: பாலிவுட்லைப்.காம்
1) மோகன்லால் ஒரு ராட்சசன். அவர் நடிப்புக்கு கால் தூசிக்கு வருவாரா கமல்ஹாசன்? எதுக்கு த்ரிஷ்யம் படத்தை எல்லாம் தமிழ்ல எடுக்கற வேலை அவருக்கு?
2) த்ரிஷ்யம் படத்துல மோகன்லாலுக்கு ஸ்கோப்பே இல்லாத ரோல். அதுல என்ன கிழிக்கப் போறாராம் கமல்ஹாசன்?
3) கிறுக்குப் பய புள்ள மாதிரி அது என்னய்யா பாபநாசம் படத்துல வர்ற காருக்கு மஞ்சள் கலர்?
4) ஒட்டு மீசை அசிங்கமா இருக்கு கமலுக்கு.
5) இப்போ என்னத்துக்கு கெளதமிக்கு ஹீரோயின் ரோல் குடுக்கறாரு, அதுவும் மீனா நடிச்ச ரோல்ல?
6) தி வெட்னெஸ்டே ரீமேக்ல நடிச்சாரே அதுவே மொக்கை, படம் பாக்கலை நான். என் ப்ரெண்டு சொன்னான்.
இதெல்லாம் சில குஞ்சுக்குளுவான்கள் பாபநாசம் பட பூஜை அறிவிப்பு வந்த நாள் முதல் எழுதிக் கிழித்துக் கொண்டிருக்கும் குப்பைகளின் சில சோற்றுப்பதம்.
மணிரத்னம் படமா? அது புட்டுக்கும். ரஹ்மான் ம்யுசிக்கா? அது நட்டுக்கும். என்று பட அறிவிப்புகள் வந்த உடனேயே கூவத் தொடங்குவோரைக் கண்டால் ஆயாசம்தான் மிகுகிறது.
எப்படியோ! பாபநாசம் இதோ இன்று ரிலீஸ் ஆகிறது (டச் வுட்)!
கமல் + ஜெமோ வசனம் + சுகா தந்த நெல்லைத் தமிழ்ப் பயிற்சியில் கமல் தரும் உச்சரிப்பு. ஆஹா! ஆஹா! இந்த வார இறுதிவரை எப்படியும் காத்திருக்க வேண்டும்.
ஒரிஜினல் பாபநாசத்தை விட டப்பிங் பாபநாசம் பத்து பதினைந்து நிமிடங்கள் கூடுதலாம்..... வாவ்!!!!
தில்லு முல்லு - தமிழின் தன்னிகரற்ற ஒரு காமெடி படம், அந்தப் படத்தைப் பற்றி எப்போது பேசவிழைந்தாலும், "தில்லுமுல்லு என்னங்க படம்ங்கறீங்க? அதோட ஒரிஜினல் வெர்ஷன் கோல்மால் பாக்கணும் நீங்க. அதுக்கு கால் தூசுக்குக் கூட பெறாது தில்லுமுல்லு" என்பார் என் முன்னாள் அலுவலகத் தோழி.
அந்த ஒரு கருத்திற்காகவே பழைய கோல்மால் படத்தை என் வாழ்நாளில் பார்த்துவிடக் கூடாது என்று தீர்மானித்திருக்கிறேன். முன்னாபாய் படத்தையும் நான் பார்த்ததில்லை. பார்க்கவும் மாட்டேன்.
Same thing goes with மலையாள த்ரிஷ்யம்.
அதனால் மலையாள த்ரிஷ்யத்திற்கு ஏதும் நஷ்டமில்லை என்பதையும் நானறிவேன்.
2 comments:
ஸார், இரண்டாம் நாளாக தொடர்ந்து பதிவிட்டு சமகால சாதனை செய்திருக்கிறீர்கள், வாழ்த்துகள். இனி வரும் பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி
:)))) எழுதறோம் ஜி. 2016'ல ஆலந்தூர் தொகுதியில நிக்கறோம், ஜெயிச்சு ஏழு மெட்ரோ வாங்கறோம். எல்லாம் நமக்குத்தேன்; நமக்கு மட்டுந்தேன் ஓடும்.
டாய்ய்ய்ய்! எட்றா வண்டியெ!
Post a Comment