நலம் தரும் திங்கள் - முன்னுரை வாசிக்க...
நலம் தரும் திங்கள் - ரத்த தானம்!
எப்படி என்கிறீர்களா? வாருங்கள்! ரத்த தானப் பலன்களையும், ரத்த தானம் குறித்த சில அடிப்படை விஷயங்களையும் பற்றி பார்ப்போம்.
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். கணக்கு பார்க்காமல் ஒரு பைசா செலவு பண்ண மாட்டார்.கணக்கு பண்ணிவிட்டு செலவு செய்வதற்கான தேவையே இல்லை என்று முடிவு பண்ணி விடுவார். ஆள் அந்த மாதிரி. கேரளாவில் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் அகலக்கால் வைத்து விட்டார் போல- காலையில் ஒரு டீ, அப்புறம் கிளம்புவதற்கு முன் கொஞ்சம் கஞ்சி. பதினோரு மணி அளவில் நாள் தவறாமல் அவருக்கு என் செலவில் ஒரு டீ கிடைக்கும். அந்த டீ அவரது நாவடக்கத்துக்கு நான் கொடுக்கும் காணிக்கை.
ஆனால் அவரிடம் ஒரு விசேஷம் என்னவென்றால் அடிக்கடி ரத்த தானம் செய்கிறார். ரொம்ப நாளாய்க் கேட்க வேண்டும் என்று நினைத்தேன், தொண்டையைத் தாண்டி நாக்கு வரை வந்து விட்டது கேள்வி. ஆனால் நாகரீகம் என்று ஒன்று இருக்கிறதில்லையா?
"நீங்கள் ஒவ்வொரு தடவையும் ரத்த தானம் செய்யும்போது எவ்வளவு காசு கிடைக்கும்?" என்று நான் கேட்க நினைத்த கேள்விக்கு அவரிடமிருந்து தானாகவே பதில் வந்தது ஒரு நாள்.
அன்று அவர் மிக சோகமாக இருந்தார். என்ன விஷயமென்று கேட்டேன்.
"எனக்கு அனீமியா இருக்காம், டாக்டர் சொன்னாங்க," என்றார்.
"நீங்க எதுக்காக சார், டாக்டர் கிட்ட போனீங்க? உடம்பு சரியில்லையோ?" என்று மேற்கொன்று விசாரித்தேன்.
"இல்லை பாஸ், ரத்தம் குடுக்கும்போது ஒரு வசதி என்னன்னா, அவங்களே நம்ம ரத்தத்தை நல்லா செக் பண்ணிடுவாங்க. ஆக்சுவல்லி நான் ரெகுலரா ப்ளட் டொனேட் பண்றதே அதுக்காகத்தான்!" என்றார் அவர்.
"அதுதானே பார்த்தேன்," என்று நான் சொல்லவில்லை. என்ன இருந்தாலும் அவர் என் நண்பர்.
ரத்த தானம் செய்பவர்களுக்கு அதனால் பலனில்லாமல் இல்லை, அதை சொல்ல வந்தேன்.
ரத்த தானம் செய்வதன் பயன்கள்-
ரத்த தானம் செய்வது என்பது படுத்துக்கொண்டே செய்கிற வேலை. மிஞ்சிப் போனால் ஒரு மணி நேரம் செலவாகும். ஆனால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று ரத்த தானம் செய்கிறவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு மூன்றுக்கு ஒரு பங்கு குறைகிறதாம். அதாவது எனக்கு இதய நோய் வரும் வாய்ப்பு தொண்ணூறு சதவிகிதம் இருக்கிறது என்று சொன்னால், ரத்த தானம் செய்கிற உங்களுக்கு முப்பது சதவிகிதம்தான் (சான்று- ரோட்டரி ரத்த வங்கி,CNN)
உடலில் புது ரத்தம் பாய்கிறது. அதாவது, ரத்த தானம் செய்த பின் புதிதாய் சிவப்பணுக்கள் உடலில் உற்பத்தி ஆகின்றன (விக்கிபீடியா)
முன் நான் சொன்ன மாதிரியான ரத்த சோதனைகள்- அனீமியா, ரத்த அழுத்தம், உடல் எடை, ஹெபாடிடிஸ் பி, ஹெபாடிடிஸ் சி, எய்ட்ஸ், பால்வினை வியாதிகள், மலேரியா- இவை உங்களுக்கு இருக்கின்றனவா என்று காசு வாங்காமலேயே சோதனை செய்து சொல்கிறார்கள். சொல்லுங்கள் நண்பர்களே, நீங்கள் ரத்த தானம் செய்யாதவர்களாய் இருந்தால் சொல்லுங்கள், நீங்கள் கடைசியாக உங்கள் ரத்தத்தை சோதித்துக் கொண்டது எப்போது?
ரத்த தானம் குறித்து சில கேள்விகள்:
ரத்த தானம் செய்வதால் உடல் நலம் கெடுமா?
கெடாது.மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். எந்த அபாயமும் இல்லை.
ஏறத்தாழ பதினொன்றில் ஒரு பங்கு ரத்தத்தை எந்த ஆபத்தும் இல்லாமல் எடுக்கலாம். உங்கள் உடல் எடுத்த ரத்தம் அத்தனையையும் இரண்டு நாட்களிலேயே திரும்பச் சுரந்து விடும்.
ரத்த தானம் கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும்?
அதிகபட்சம் ஒரு மணி நேரம். ரத்த தானம் செய்து விட்டு நேராக வேலைக்குப் போய் விடலாம். அச்சப்படத் தேவை இல்லை.
ரத்த தானம் செய்யும் முன் நான் என்ன செய்ய வேண்டும்?
நன்றாகத் தூங்குங்கள். காலையில் நன்றாக சாப்பிடுங்கள். ஜூஸ், பால் முதலான நீராகாரங்களைத் தேவையான அளவு உட்கொள்ளுங்கள். ரத்த தானம் செய்த பின் இட்லி, பிஸ்கட், ஜூஸ் போன்ற எதையாவது லைட்டாக சாப்பிடுங்கள்.
மேலும் தகவல்கள், ரத்த தானம் செய்ய அல்லது உங்களுக்குத் தேவையான ரத்த வகையினரை தேட இந்த தளத்தில் - India Blood.
தகவல்/ தொகுப்பு உதவி: நட்பாஸ்
.
.
.
11 comments:
good post
பயனுள்ள பதிவுங்க.
விவரங்களை அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள்., நன்றி.
பயனுள்ள பதிவு..
Fantastic and Useful Information.
Donate Blood and save the Lifes.
பயனுள்ள பதிவு.
2/3 ஹாட் அட்டாக் குறையும் என்கிற தகவல் எங்கே பெற்றீர்கள்(லிங் பாஸ் வோர்ட் கேட்கிறது).அது இன்னும் பூரணமாக நிரூபிக்கப்படவில்லை என்று நினைக்கின்றேன்.நிருபிக்கப்பட்டவைகள் blood donation govt website களில் உள்வாங்கிப்போட்டுவிடுவார்கள்.
ரத்தம் உயிர்காக்கும் மாத்திரமல்ல சில நோய்களில் உயிர் வாழ்வதற்கு வாழ்நாள் பூராவும் அடிக்கடி இரத்தம் ஏற்றிக்கொள்ளவேண்டியிருக்கிறது
நன்றி
இங்கே இருக்கு பாருங்க- http://www.sciencedaily.com/releases/1997/09/970901072035.htm
" Men who donate blood may reduce their risk of heart disease by up to 30 percent, according to a study led by David Meyers, M.D., professor of internal medicine and preventive medicine at the University of Kansas Medical Center.
The study, "Possible association of a reduction in vascular events with blood donation," is published in the August issue of the journal Heart."
நியாயமான கேள்வி எழுப்பியதற்கு நன்றி.
நன்றி,பாஸ்
அது preliminary study-1997.ஏன் பிறகு ஒன்றையும் காணவில்லை.cohort study ஆயின் முடிவு வர வாழ்நாள் எடுக்கும்.எங்களுக்கு பிரயோசனப்படாது அடுத்ததலைமுறைக்கு?
இதயநோய்கள் பல்காரணி நோய்-எல்லாக்காரணிகளையும் கட்டுப்படுத்தமுடியாது.பெரிய
சனத்தொகையில் நிகழத்தப்பட்டால் உண்டு
தற்போது ஒரு தொடக்கம்.Hypothesis is open.அது தவறென்றோ சரியென்றோ நிரூபிக்கப்படவில்லை.
அது நிரூபிக்கப்படுவதற்கு பல ஆய்வுகள்/பெரிய ஆய்வு பல மட்டத்தில் நிரூபிக்கப்படவேண்டும்.
மருந்துக்கம்பனிகள் முன்வராது?
அதே கட்டுரையில் கீழே இப்படிச்சொல்லி...
he observed reduction in vascular events can be explained in two ways, said Meyers. "Either iron depletion through blood donation truly affects atherosclerosis, or on the other hand, mainly healthy people who are at low risk of heart disease are blood donors."
இப்படி முடிக்கிறார்கள்
"Even if the iron hypothesis is proved incorrect, donating blood is still the right thing to do.
இன்றைய நிலையில் இப்படிச்சொல்லலாம்:
இரத்த தானம் இதய நோய்களைக்குறைக்கக்கூடும் என்று சில ஆய்வுகள் சொல்லுகின்றன...என்று
இரத்தம் கொடுப்பது இதயத்துக்கு நல்லதோ தெரியாது ஆனால் தீங்கில்லை நல்ல இதயம் உள்ளவர்கள் இரத்தம் கொடுத்து உதவி செய்யட்டும்.
நல்ல இதயம் உள்ள கிரியும் நீங்களும் இப்படி எழுதமுன்வந்ததற்கு நன்றிகள்
அன்புள்ள வரசித்தன் அவர்களுக்கு,
நல்ல கேள்விகளைக் கேட்கிறீர்கள். ஒருத்தர் சொல்கிறார் என்பதற்காக அதைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வது ரொம்ப நாளைக்கு உதவாது. சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் ரொம்ப நாளைக்கு உதவாது என்று ஒரு பழமொழி சொல்வார்கள். சந்தேகப்பட்டுத் தெளிவதே மனதில் நிற்கும். நீங்கள் செய்வது பெரிய உதவி. அதற்கு இன்னொரு நன்றி. :)
நான் நீங்கள் சொல்வது அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். இருந்தாலும் உதவக்கூடும் என்று ஒன்றிரண்டு சான்றுகள்-
இது 2002ல் வந்த ஆய்வு- http://onlinelibrary.wiley.com/doi/10.1046/j.1537-2995.2002.00186.x/abstract
"...vents were less frequent in female donors than in male donors and less frequent in subjects who had donated before 1988 than in those who had not donated before 1988.
CONCLUSION : Frequent and long-term whole blood donation is associated with a lower risk of cardiovascular events."
இது இந்த ஆண்டு வந்துள்ள ஆய்வு- http://www.springerlink.com/content/t31l8816253785q6/
ரத்தத்தில் இரும்புச் சத்து குறைவதற்கும் இதய ஆரோக்கியத்துக்கும் தொடர்பில்லை என்று தீர்மானிக்கிறது- "At present, the vast majority of the epidemiological data does not support the hypothesis that body iron stores are directly related to the risk of developing CHD."
ஆனால் இது அனைத்தையும் விட இந்த ஆண்டு வெளிவந்துள்ள இந்த ஆய்வறிக்கை எனக்கு மிக முக்கியமாகத் தெரிகிறது: இது குறித்து உங்களுக்கு அவகாசமிருந்தால் விபரமாக எழுதினால் தமிழ் கூறும் நல்லுலகம் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கும். சுட்டி இங்கே- http://www.utwente.nl/mb/htsr/publications/Transfusion_%202010_%20Atsma_%20Cardiovasc_%20Donor_%20Insight.pdf
இது ஆய்வின் தலைப்பு- "Cardiovascular and demographic characteristics in whole bloodand plasma donors: results from the Donor InSight study_2867 1.."
இது கவனிக்கத்தக்கது-
" This report focused on demographicand cardiovascular characteristics of Dutch donors. Incomparison to the general Dutch population, donors hada higher education and were more often married and ofDutch origin. Overall, donors appeared to have a morefavorable cardiovascular profile. Donors were more oftennonsmokers and moderate drinkers. They appeared to beless often obese, but slightly more often moderately over-weight. Donors were physically more active. Finally,donors had slightly less prevalent diabetes and high cholesterol"
எது எப்படி இருந்தாலும் ரத்த தானம் செய்கிறவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி கையைக் கழுவி விட்டு சாப்பிடுவது என்ற சிறிய நல்ல பழக்கம், வெவ்வேறு இடங்களில் பல வகையிலான ஆரோக்கிய நடவடிக்கைகளுக்குக் காரணமாக அமைகிறதோ, அது போல் ரத்த தானம் கொடுக்கும் பழக்கமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குத் தூண்டுகோலாய் அமையக் கூடும்.
அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளில் எதையும் சந்தேகம் வருகிற மாதிரிதான் முடிப்பார்கள். அதை அப்படியே நம்பினால் மருத்துவத்தில் எல்லா விஷயங்களிலும் சந்தேகம்தான் வரும்.
௧. மாத விடாய் பருவப் பெண்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது. அது நின்ற பின் மற்ற ஆண்களுக்கு உள்ள ஆபத்து நிலையை அவர்களும் எய்தி விடுகிறார்கள்.
௨. ரத்த தானம் செய்யும் ஆண்கள் மற்றவர்களை விட ஆரோக்கியமான இதயம் உடையவர்களாகவே இருக்கிறார்கள்.
இந்த இரண்டு விஷயத்தையும் எந்த ஆய்வு அறிக்கையும் மறுப்பதாகத் தெரியவில்லை.
ஏன் இப்படி, என்ன காரணம் என்பதில்தான் சந்தேகம் இருக்கிறது.
correlation நம்பத்தகுந்ததல்ல. ஆய்வுகளின் அடிப்படையில் என்ன நடக்கிறது என்ற causation கண்டு பிடிக்கப்பட்டால்தான் முழு மனதுடன் ஏற்க முடியும். பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என்று.
மிக்க நன்றி.
ஆய்வுகள் நடக்கட்டும்.
இப்போதைக்கு மருத்துவராய்ச்சொன்னால் ‘இரத்ததானம் இதய நோய்களைக்குறைக்கலாம்.குறைக்காதும் விடலாம்’’ இரத்தங்கொடுக்கவேண்டிய நன்மைக்காரணியாக அது இன்னும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை;
இரத்த தானம் சுற்றிவந்து எங்களுக்கு மீண்டும் உதவும்.ஏனென்றால் இரத்தம் தானம் செய்யப்பட்டு இரத்தவங்கியில் தான் வைக்கப்படுகிறது.அண்மையில் விபத்துக்குட்பட்ட ஒருவருக்கு பத்து பைந்து இரத்தத்துக்கு மேல் ஏற்றினார்கள்.அந்த நிலை யாருக்கும் வரலாம்.
@ நட்பாஸ் @ டாக்டர்
இருவருக்கும் மெத்த நன்றி. இனிய விவாதம்.
இறுதியாக டாக்டர் சொன்னாற்போல் இப்படி எடுத்துக் கொள்கிறேன்
"இரத்த தானம் இதய நோய்களைக்குறைக்கக்கூடும் என்று சில ஆய்வுகள் சொல்லுகின்றன"
இருவர்க்கும் மீண்டும் நன்றிகள்!
"இப்போதைக்கு மருத்துவராய்ச் சொன்னால் ‘இரத்த தானம் இதய நோய்களைக் குறைக்கலாம், குறைக்காதும் விடலாம்’"
இன்றைக்கு இந்த விஷயத்தில் மருத்துவத் துறையில் உள்ள நிலைப்பாட்டைத் தெளிவாக்கியதற்கு நன்றி டாக்டர். நல்ல விஷயமாக இருந்தாலும் அதில் மூட நம்பிக்கை இருக்கக் கூடாது என்ற உங்கள் நிலைப்பாடு எங்களுக்கெல்லாம் ஒரு பாடம்.
ரத்தத் தானம் கொடுக்க முன்வருமளவுக்கு நல்ல இதயம் உள்ளவர்களுக்கு இதய நோய் வருமா என்ன?
இதற்கெல்லாம் மருத்துவ ஆய்வுகளே தேவை இல்லை!!!
இருந்தாலும் ஒண்ணு ரெண்டு கண்ணில் படும்போது அதைக் கொண்டாடாமல் இருக்க முடியவில்லை. ரத்தம் கொடுக்கிற அளவுக்கு நல்ல உள்ளம் இருக்கிறவர்களை கடவுள் காப்பாற்றுவான்!
எல்லாரும் ரத்தம் குடுங்க- ரத்தம் குடுக்கறவங்க ஏதோ ஒரு காரணத்தால மத்தவங்களை விட நல்லா இருக்காங்களாம்-
ரத்தம் குடுக்கறவங்களை வெச்சு ஆய்வுகள் செஞ்சதில் இது நிரூபணம் ஆகி இருக்கு, ஆனா அதுக்கு ரத்த தானம்தான் காரணம்னு சொல்ல முடியாது.
அவங்களோட நல்ல இதயம் காரணமா இருக்கலாம், ரத்தம் குடுக்கறதால கிடைக்கற புண்ணியம் காரணமா இருக்கலாம், இல்ல ரத்தம் கிடைத்து உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளின் நன்றி காரணமாய் இருக்கலாம்.
எது எப்படியோ, உங்களைப் போன்ற நல்லவங்களுக்கு நல்லது செய்ய ஒரு காரணம் தேவை இல்லை, என்ன சரிதானே!
நல்ல ஒரு பதிவைத் தந்ததற்கு நன்றி, கிரி. இதைப் படிச்சுட்டு யாராவாது ரத்தம் குடுத்தா அதனால் உயிர் பிழைத்த இதயங்களின் வாழ்த்துகளில் உங்களுக்கு பங்கு கிடைக்கும்!
மீண்டும் வரசித்தன் அவர்களுக்கு என் நன்றி. நம்மை மாதிரி செண்டிமெண்ட் பேசி எதையும் சாதிக்கலாம், ஆனா கறாரா உண்மையான ரிசல்ட் என்னன்னு விசாரிக்கற அவரைப் போன்ற டாக்டர்கள்தான் நம் உயிரைக் காப்பாற்ற முடியும். அவர் பல சாதனைகள் படைக்க என் வாழ்த்துகள்!
Post a Comment