தமிழ்நாட்டின் ஒவ்வொரு சினிமா ரசிகனையும் போல நானும் மூன்று வருடங்கள் எந்திரனுக்காகக் காத்திருந்தவன். இத்தனை நாள் காத்திருந்தேன். ஆனால் இனி ஒரே ஒரு நாள் கூட எந்திரனைக் காணாது இருக்க இயலாது.
நமக்கு இந்த முறை ப்ரிவியு ஷோ காணும் பாக்கியம் வாய்க்கவில்லை எனினும் முதல் நாள் முதல் ஷோ ஆரவாரமான ரஜினி ரசிகர்களுடன் அடையாரின் ஒரு தியேட்டரில் காணும் வாய்ப்பு அமைந்தது.
எந்திரன் கதையை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் இது "ஷங்கரின் அவதார்". சயின்ஸ் பிக்ஷன், காதல், ரொமான்ஸ் என்று கொண்ட கலவையாக எந்திரன். வழக்கமாக நான் ரசித்து ருசிக்கும் ரஜினியின் பஞ்ச் டயலாகுகள், சூப்பர் ஸ்டாரின் கரிஸ்மாடிக் ஒபெநிங் சாங் ஆகியவை எந்திரனில் மிஸ்ஸிங். இருந்தால் என்ன? ஒரு டை ஹார்ட் ரஜினி ரசிகனை எப்படி முழுமையான நிறைவுடன் படம் பார்க்க வைக்க வேண்டும் என சங்கருக்குத் தெரிந்திருக்கிறது.
பொதுவாக ஸ்டைலில் கவனம் செலுத்தும் ரஜினி இங்கே நடிப்பில் சற்றே கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார். குறிப்பாக அந்த வில்லன் ரோல் தமிழ் வில்லன்களுக்கு ஒரு பெஞ்ச்மார்க்கையே உருவாக்கித் தந்திருக்கிறது என்றால் அது மிகை ஆகாது.
சிவாஜிக்குப் பின்னர் ஷங்கர் - ரஜினி என்னும் மாஜிகல் காம்பினேஷன் மீண்டும் இணைந்து எந்திரனாய் அட்டகாசம் செய்திருக்கிறார்கள். கிராபிக்சில் இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு மைல் கல் எனலாம். அந்தக் குழந்தை டெலிவரி காட்சியை கிராபிக்சில் காணும்போது தியேட்டரே எழுந்து நின்று ஆர்ப்பரிக்கிறது.
கடைசி முப்பது நிமிடங்களில்தான் படத்தின் ஹைலைட்டே. டெக்னாலஜியில் ஹாலிவுட்டுக்குப் பின் கோலிவுட்தான் என ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறது எந்திரன் டீம்.
சூப்பர் ஸ்டாரின் அட்டகாச நடனங்கள், ரஹ்மானின் பாடல்கள் இவற்றைக் காண, கேட்க ஆயிரம் கண்களும் காதுகளும் வேண்டும்.
படத்தின் மைனஸ் என்று எதையேனும் குறிப்பிடவேண்டும் என்றால் அந்த மஸ்கிடோ அனிமேஷனை சொல்லலாம். ஆனால் அந்தக் காட்சி சற்றே கிட்டிஷ் ஆக இருப்பதால் குழந்தைகள் ரசிக்க வாய்ப்புண்டு.
On the whole it was an awesome, splendid & fantabulous family entertainment worth watching again.
கமல்குமார், அடையார்
(பேரு கமலு...ஆனா அதி தீவிர ரஜினி விசிறிங்கோ)
10 comments:
ஷங்கர் த க்ரேட்?
thats what Kamal is saying. am yet to explore.
கமல் சாரே சொல்லிட்டாரா?! அப்புறம் யோசிக்கரதுக்கு என்ன இருக்கு!? சங்கத்துல சேந்துற வேண்டியதுதானே!!
கமல் பார்வை எண்டதும் நான் எதோ தரமான கமல் எங்கடா இந்த படத்துக்கு நல்ல படம்னு சொலீடாரோ எண்டு பார்த்தன் ..பயந்துட்டான் .. அப்பாட ,அது நீங்க ..
veldan அருமையான விமர்சனம்..ரஜினி மாஸ்.சிட்டி பாஸ்
super not enthiran but kamal
//டெக்னாலஜியில் ஹாலிவுட்டுக்குப் பின் கோலிவுட்தான் என ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறது எந்திரன் டீம்.//படம் பாக்கிறதுக்கு நல்லாத்தான் இருக்கு, அதுக்காக ஓவர் பில்ட் அப் குடுக்கக் கூடாது. கிராபிக்ஸ் பண்ணினவன் என்ன நம்மூர்க்காரனா? ஹாலிவுட் காரன்கிட்ட காச குடுத்து அவன் பண்ணிக் குடுத்ததை படத்தில் போட்டுக் கொண்டு, ஹாலிவுட்டுக்கு இனையாவர்கள் நாங்கள்தான், அவர்களுக்கே நாங்கள் சவால் விடுவோம் என்பதெல்லாம் உமக்கே கொஞ்சம் ஓவராகத் தெரியலையா?. அப்படியே படமெடுத்து என்ன கதையை சொல்ல வருகிறார்கள்? ஒரு பொட்டச்சிக்கு ரெண்டு பேர் அடிச்சிக்கிற அதே புளிச்ச கதை. கஷ்டப் பட்டு கண்டு பிடிச்ச ரோபோ, ஆம்லெட் போட்டு, வீட்டை பெருக்கிவிட்டு, கொசு பிடிக்கப் போகுது, அடுத்த நாள் பரீஷைக்கு பிட்டு கிழிச்சுப் போடுற வேலை பண்ணுது, வந்து கல்யாண வீட்டுல பொம்பிளைகள் கைகளுக்கு மருதாணி போடுது. இதுதான் டெக்னாலஜியை பயன்படுத்துற விதமா?
//கமல்குமார், அடையார்
(பேரு கமலு...ஆனா அதி தீவிர ரஜினி விசிறிங்கோ)//
இப்படி கூடவா விமர்சனம் பண்ணுறீங்க ..!!
நடத்துங்க ..!!
யோவ் விடுங்கய்யா, எந்திரனும் எந்திரிக்காதவனும்னு போட்டு
அறுக்காதீங்க, நாராயணா, இந்த கொசுத் தொல்லை தாங்க முடியப்பா....
@ செல்வகுமார்
ஹி ஹி ஹி :)
@ நாஞ்சில் மனோ
இது ரொம்ப பழைய பதிவுங்க. முன்னமே இன்ட்லியில பகிர்ந்தேன். இப்போ புதுசா யாரோ ஒரு நல்லவர் சிட்டி'ன்னு ஒருத்தர் மறு பகிர்வு செஞ்சிருக்கார் (அதை இன்ட்லி எப்படி அனுமதிச்கிதுன்னது எனக்கு புரியாத புதிர்).
Post a Comment