அன்பு நண்பர்களுக்கு
"பேசுகிறேன்" தளத்தில் "நலம் தரும் திங்கள்" என்னும் மருத்துவத் தகவல் தொடரைத் துவங்குகிறோம்.
பல நேரங்களில் திரைப் பிரபலங்கள் இந்த வசனம் பேசக் கேட்டிருப்பீர்கள். "தமிழ் சினிமா ரசிகர்களை புரிஞ்சிக்கவே முடியாது. எந்த படத்தை தாங்குவாங்க, எந்த படத்தை வாங்கு வாங்குன்னு வாங்குவாங்கன்னு சொல்லவே முடியறது இல்லை".
அதே மனநிலை தமிழ் இணைய வாசகர்கள் குறித்து எனக்கும் உண்டு. சூப்பர்ஸ்டார் பற்றி எழுதி சீந்தப்படாமல் போன பதிவுகளும் உண்டு. மொக்கைப் பதிவுகளுக்கு முன்னூறு பேர் வந்து சென்ற அனுபவங்களும் உண்டு.
இப்படித்தான், ஏதும் எழுத வேண்டுமே என்று தலையை நான் சொறிந்து யோசித்த வேளையில் "சரி எழுதலாம்" என்று "ரத்த சரித்திரம் - நிஜமான" என ரத்த சம்பந்த தகவல்களை எழுதினேன்.
அந்தப் பதிவிற்குக் கிடைத்த வரவேற்பு, அந்தப் பதிவின் வாயிலாக நிகழ்ந்த விவாதங்கள், பின்னூட்ட ஊக்குவிப்புகள் இவற்றைக் கண்ட பின் மருத்துவ சம்பந்தமான தகவல்களுக்கு நம் ஊரில் உள்ள மாறாத மவுசைப் புரிந்து கொண்டேன்.
என் இணைய உலக துரோணாச்சாரியார் "நட்பாஸ்" அவர்கள் தந்த ஊக்கம், தகவல் மற்றும் தொகுப்பு உதவிகள் இவற்றை பலமாகக் கொண்டு "நலம் தரும் திங்கள்" என்னும் இந்த மருத்துவத் தகவல் தொடரைத் தொடங்குகிறேன்.
திங்கட்கிழமை தோறும் ஒரு மருத்துவத் தகவலை வெளியிட வேண்டும் என்பது எங்கள் இருவரின் அவா.
உங்கள் அனைவரின் வரவேற்பினை இத்தொடர் நிச்சயம் பெரும் எனும் நம்பிக்கையுடன் முதல் அத்தியாயத்தை நாளை தொடங்குகிறோம்...
மருத்துவத் தகவல்களுடன் நாளை சந்திப்போம்....
.
.
.
3 comments:
உங்க போஸ்ட் படிச்சா தலை வின்னுன்னு வலிக்குது. அதுக்கு என்ன பண்றது அப்படின்க்ராதுல இருந்து ஆரம்பிங்க :)
மேல காமெடி பண்றேன் கிரி. தப்பா எடுத்துக்க வேணாம்.
புது முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
இன்னொரு டாக்டரா!!!
ஐயோ ரத்த சரித்திரமா... அருமைங்க...
Post a Comment