நன்றி: தினமலர் நாளிதழ்
இறந்தவரின் சடலத்தோடு எரிந்தது மூன்று லட்ச ரூபாய்
சென்னிமலை:சுடுகாட்டில் இறந்தவரின் மெத்தையில் இருந்த மூன்று லட்ச ரூபாய், தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிழக்கு வீதியைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர் ஒருவரின் தந்தை, இரண்டு மாதத்துக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடலை சென்னிமலை உப்பிலிபாளையம் ரோட்டில் உள்ள மணிமலைகரடு மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.இறந்தவர் பயன்படுத்திய மெத்தை, தலையணையை, உடல் புதைத்த இடத்தில் குடும்பத்தினர் போட்டு விட்டு வந்து விட்டனர்.
சுடுகாட்டில் போதிய இடவசதி இல்லாததால், அந்த இடத்தை சென்னிமலை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், கடந்த 15ம் தேதி தீ வைத்து எரித்தனர். அங்கிருந்த மெத்தை, தலையணையையும் அவர்கள் எரித்தனர்.இறந்தவரின் வீட்டில், ஆயுத பூஜைக்காக சுத்தம் செய்த போது அவரது டைரி கிடைத்தது. அதில் யாருக்கு எல்லாம் பணம் கடன் கொடுத்துள்ளார்; வட்டி வரவு வந்தது; பணம் வரவேண்டியது; எங்கெங்கு பணம் வைத்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.
தான் படுத்திருந்த மெத்தையின் உள்ளே 500 ரூபாய் நோட்டு தாளாக மூன்று லட்சம் ரொக்கத்தை வைத்துள்ளதாக அதில் எழுதியிருந்தார். உடனடியாக குடும்பத்தினர் மயானத்துக்கு ஓடிச் சென்று தேடினர். அங்கு மெத்தை எரிக்கப்பட்டு சாம்பலாகி கிடந்தது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.மூன்று லட்ச ரூபாய் ரொக்கம் மூன்று மாதமாக சுடுகாட்டில் அனாதையாக கிடந்தும், அது யாருக்கும் கிடைக்காமல் தீயில் எரிந்து நாசமானது, சென்னிமலை பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. சென்னிமலை பகுதியில் இச்சம்பவத்தால் சுடுகாட்டில் உள்ள மற்ற மெத்தை, தலையணைகளை சிலர் கிழித்து பார்த்து வருகின்றனர்.
7 comments:
இதை நினைச்சு சிரிக்கரத இல்ல அழுகறத தான தெரியல
இதுக்கு பேர்தான் செத்தும் கெடுத்தான ?
@ Breeze
well said...exactly....
இதுக்கு ஏன் புஸ்ஸூ படம் போட்டீங்க னு தான் தெரியல...
ச்....சே!!!!
பணம் ஒண்ணும் வீணாகிப்போகல்லே. பெரியவர் செலவுக்காக சொர்க்கத்திற்கு போயிருக்கும்!
நான் சொர்க்கத்திற்கு (யாரு கண்டா, நரகமாக்கூட ஒருக்கலாம்) போகும்போது கொஞ்சம் பணம் கொண்டு போனா நல்லா இருக்குமேன்னு யோசிச்சதுண்டு. வழி தெரியாம இத்தனை நாளும் முளிச்சுட்டு இருந்தேன். இப்ப வளி தெரிஞ்சுடிச்சு. இனி நானும் கொஞ்சம் பணத்தை மெத்தையில வச்சு தைச்சர்றேன்.
ஆனா கவனமா சொல்லிப்போடோணும். என்னை எரிக்கறப்போ மெத்தையையும் என்னோட சேத்து எரிக்கோணும் அப்படீன்னு ஒரு உயில் எழுதி எல்லார் கிட்டயும் ஒவ்வொரு காப்பி குடுத்து வச்சுடனும்.
@ பிரபாகர்
வருகைக்கு நன்றி. ச்சும்மா...ஒரு அதிர்ச்சியை வெளிக்காட்ட அவரைக் காட்டினேன். வேறொன்னுமில்லை.
@ நானானி
நன்றி....என்ன பண்ண சொல்லுங்க... சில சமயம் இப்பிடி ஆகிடுது...
@ கந்தசாமி ஐயா
தங்கள் மறு வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. உங்கள் கருத்து மூன்றாம் கோணம். நன்றி.
அங்கன மட்டும்தான் பணம் வேணாம்னு நெனச்சோம். அங்கயும் தேவைன்னு இப்போதான் புரியுது.
Post a Comment