புதிதாக தமிழ் வலை வெளிக்குள் வருபவர்களுக்கு என உடனடி வழித்துணையாக இருக்க தமிழ்ப் பதிவர்களின் திரட்டு ஒன்றை ஓர் நிரந்தரப் பதிவாக வெளியிட நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். ஒரு வழியாக (வழக்கம்போல் நண்பர் பரிதியின் உதவியோடு) இதோ இங்கே உங்களுக்காக....
+ - + = + - + = +
நீங்கள் எந்த எந்த வலைத்தளங்களைப் படிக்கிறீர்கள் என்றுத் தெரியவில்லை. இருந்தாலும் நான் படிப்பதில் இவை சுவாரசியமாக இருக்கின்றன-
எஸ் ராமக்ருஷ்ணனைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை: கட்டாயம் படிக்கப்பட வேண்டியவர். மொழி நடையை வளர்த்துக் கொள்ள உதவக் கூடும்! :) http://sramakrishnan.com/
வசவசன்று பதிவிடுகிறார்- ஆனால் சுஜாதா, காஞ்சி ஸ்வாமிகள் இருவரைப் பற்றிய அறிய விஷயங்களை எங்கெங்கிருந்தோ தேடிக் கொண்டு வந்துக் கொடுக்கிறார். நான் விரும்பி வாசிப்பது http://balhanuman.wordpress.com/
ஜெயமோகனுக்குப் பிடித்தவர்- கண்ணதாசன் மரபுக் கவிதை உரைகள்- மொழி ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை இருந்தால் கட்டாயம் படிக்க வேண்டும் http://marabinmaindanmuthiah.blogspot.com/
இங்கே சில சமயம் நல்ல கட்டுரைகள் வருகின்றன - இதையும் வேண்டாமென்றால் விட்டு விடலாம் http://www.tamiloviam.com/site
போட்டோ காப்ஷன் எழுதி கலாட்டா பண்ணுவது இவரது சிறப்பு. இப்போதெல்லாம் உரைநடையும் அதிகமாகி விட்டது http://valaimanai.blogspot.com/
முக்கியமானவர். பொறுமையாய்ப் படித்தால் மொழி வளம் கூடும் (அப்படி சொன்னால், கத்தி போடுவார், தலையை அசைக்காமல் இருந்தால், நல்ல மேக்கிங்கோடு வெளியே வரலாம் என்று அர்த்தம்!) http://ramasamywritings.blogspot.com/
சீரியசான இலக்கியம், மாற்றுமொழி பார்வை, இப்போதெல்லாம் பதிவுகள் போடுவதில்லை http://angumingum.wordpress.com/
எதைப் படித்தாலும் படிக்காவிட்டாலும், இதைப் படிப்பதற்கென்று தினம் கால் மணி நேரம் ஒதுக்க வேண்டும்- மொழி ஆளுமை கூடும். நல்ல இலக்கியத்தின் முகவரி. http://azhiyasudargal.blogspot.com/
அகரம் அமுதா- இவர்களெல்லாம் பண்டை இலக்கியத் தீவிரவாதிகள். தெரிந்து வைத்துக் கொண்டால் தப்பில்லை http://ilakkiya-inbam.blogspot.com/
உண்மையான ஈழ உணர்வுள்ள தமிழர்கள். சிங்களக் கவிதைகளைக்கூட மொழிபெயர்த்து இடுகிறார்கள். என் தூர தேசத்து அலுவலக நண்பர் கான பிரபாவின் பதிவுகளும் அவ்வப்போது இங்கே வருகின்றன. http://eelamlife.blogspot.com/
உண்மைத்தமிழன் வினவு-நர்சிம் விவகாரத்துக்கு அப்புறம் என் ஹீரோ! http://truetamilans.blogspot.com/
புத்திசாலி. டிவிட்டரில் நிச்சயம் தொடரவேண்டும். http://www.sridharblogs.com/
கர்நாடக சங்கீதத்தில் உங்களுக்கு இருக்கிற ஊக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள இந்தத் தளத்தில் விஷயம் இருக்கிறது http://carnaticmusicreview.wordpress.com/ அண்மையில் ஷாஜி விவகாரத்தில் ஜெமொவிடம் மோதினார்
காஞ்சி ரகுராம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். எளிய, சரளமான நடை. கணிப்பொறித்துறையில் பெரிய ஆள் என்று நினைக்கிறேன் http://kanchiraghuram.blogspot.com/
இஷ்டப்படி எழுதுகிறார்- என்னைப் போன்றவர்களின் மனப்போக்குக்கு ஏற்றவர் என்றுத் தோன்றுகிறது :) http://selventhiran.blogspot.com/
இவருக்கு அறிமுகம் தேவையில்லை http://www.gnanakoothan.com/
தமிழ் ஹிந்து. பிடிக்கிறதோ பிடிக்கலையோ, படிக்க வேண்டிய விஷயங்கள். www.tamilhindu.com
நாஞ்சில் நாடன் http://nanjilnadan.wordpress.com/
பாலகுமாரன் http://balakumaranpesukirar.blogspot.com/
ஜெமோவின் நண்பர் சிறில் http://cyrilalex.com/
ஜெமோவை குரு என்று சொல்லிக் கொள்கிறார், கர்நாடக இசை குறித்து தெளிவாக எழுதுபவர் http://ramachandras.wordpress.com/
இவரும் இசை குறித்து எழுதுகிறார்- பெரும்பாலும் மேற்கத்திய இசை http://beyondwords.typepad.com/beyond-words/
தமிழ்ப் பதிப்பகத்துறையின் புதிய முகவரி இவர்தான்- பத்ரி http://thoughtsintamil.blogspot.com/
இந்த அம்மணியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். பயம் என்பதே கிடையாது. வினவை இவர் போல் கேலி செய்பவர் யாரும் இல்லை. புதுமைப் பெண் என்றால் இப்படி இருக்க வேண்டும் http://kavithavinpaarvaiyil.blogspot.com/
வாரம் ஒருவர் தனக்குப் பிடித்த பதிவு மனைகளை அறிமுகம் செய்கிறார். உங்கள் ரீடரில் கட்டாயம் இருக்கவேண்டிய ஒன்று. http://blogintamil.blogspot.com/
டெக்னிகல் தகவல்களைத் தமிழில் அள்ளித்தரும் இவர்கள் தமிழ் டெக்னோ உலகின் முடி சூடா மன்னர்கள்.
http://www.gouthaminfotech.com
http://www.gouthaminfotech.com
இங்கே அதி முக்கியமாக:
சிலிகான் ஷெல்ப் வெளியிட்ட எழுத்தாளர்களின் வலைமனைகளுக்கான சுட்டி இங்கே முக்கிய இடம் பெறுகிறது அது இங்கே
கடைசியாக.... இந்த லிஸ்டில் இலவச இணைப்பாக என்னையும் சேர்த்துக் கொள்கிறேன்....
(நல்ல தளமுங்க..நம்பிப் படிக்கலாம்)
+ - + = + - + = +
டிஸ்க்ளைமர்: யோவ் இன்னாய்யா என்னோட பதிவைக் காணோம் / எங்க தலீவர் வலைமனைய இருட்டடிப்பு செஞ்சிட்டன்னு கேட்பவர்களுக்கு: மிஸ்ஸிங் வலைப் பதிவு விவரங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். எனக்கு ஒப்புதல் உள்ளவற்றை இணைத்துவிடுகிறேன்.
.
.
.
9 comments:
நல்ல தகவல். எனது இன்றைய பதிவு. ப்லோக்கரின் Add CSS வசதி - http://tamilfa.blogspot.com/2010/10/add-css.html
இது முக்கியமான பக்கம் சார்- இதுக்கும் உங்க பதிவுக்கு உள்ள ஒரு இணைப்பு குடுங்க. பதிவும் பின்னூட்டங்களும் கலக்கல்.
எழுத்தாளர் வலைத்தளங்கள்
சார் என்னோடதும் ஏதோ எழுதறே படிச்சிருப்பிங்கனு நினைக்கிறேன் முடிந்தால் சேர்க்கலாமே.
http://www.gouthaminfotech.com
@ நட்பாஸ்
தேங்க்ஸ்... சேத்துடறேன்....
@ வடிவேலன் சார்..
நம்ம தி.நகர் சந்திப்பை மறக்க முடியுமா. ஏஜிங் எபெக்ட். மறந்துட்டேன். சேர்த்துடறேன்...
கிரி சார், நானும் வடிவேலன் அவர்கள் சொல்வதை வழி மொழிகிறேன். அவரது தளம் ஒரு இணைய கை அகராதி என்று சொல்லலாம். அவ்வளவு விஷயம் இருக்கிறது அதில். நான் எவ்வளவோ விஷயத்தைத் தெரிந்து கொண்டது அவரது தளம் மூலம்தான்.
தயவு செய்து உடனே அவர் தளத்தை சேருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@ நட்பாஸ்
இந்தப் பதிவு இன்ட்லியில் பிரபலமாக்கப்பாட்டு தமிழ் கூறும் நல்லுலகம் முழுக்க சென்றடைந்து எல்லா பரிந்துரைகளும் வந்த அப்புறம் அத்தனை "மறு சேர்க்கை"களையும் செய்து முடிக்கலாம்னு நெனச்சேன்.
பாப்போம்...
சகோதரா நம்மட ஓடையையும் சும்மா ஒருக்கால் பாருங்க.. தங்களது முயற்சி மிகவும் சிறந்தது...
mathisutha.blogspot.com
joined my saamakodai.blogspot.com-vidyashankar
Post a Comment