May 8, 2010

மூன்றே ஸ்வரங்களில் ஒரு பாடல்..



ஸ...ரி....க.... 


இந்த மூன்றே ஸ்வரங்களைக் கொண்டு ஒரு இசைப் பிரவாகத்தையே கொணர்கிறான் இந்த பண்ணையபுரத்தில் பிறந்த பட்டிக்காட்டான்.




"Guys! we have limited resources, but we need to do miracles" என்னும் மேலாளர்களின் குரல்கள் ஒலிக்கின்றன என் காதுகளில்.

எத்தனையோ பாடங்களைக் கற்கலாம் ராஜாவின் இந்த கம்போசிஷனில். என்ன இயலில் பாடம் படிக்கணும்...இந்த யுடியூப் இணைப்பைப் பாருங்கள்.

ஸ்ரேயா கோஷலின் அழகான உச்சரிப்பில் இந்தத் தெலுகுப் பாடல் காதுகளில் தேனூற்றுகிறது என்றால்  ராஜாவின் இன்ஸ்டன்ட் தமிழ் வரிகள் அவர் பெருமை பாடினாலும் அழகாய்த்தான் இருக்கிறது. 

இறுதியில் பாடல் உச்சத்தை அடையும் நிலையில் ரசிகர் கூட்டம் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கிறது. நம் கண்கள் நனைகின்றன.




20 comments:

natbas said...

இசையப் பத்தி ஒன்னும் தெரியாத எனக்கே தெரியும், இளையராஜா ஒரு மேதைன்னு. அப்ப அவரு எவ்வளவு பெரிய மேதையா இருக்கணும்...

அவரோட சாதனைகளே அவரை அழுத்தற சுமையா போயிருச்சு போல. இப்போதான் முதல்முதலா இசை அமைக்கறோம்னு நினைச்சுக்கிட்டு "எவனோ என்னமோ சொல்லிட்டு போங்கடா..."ன்னு ம்யூசிக் போட்டா இன்னுக்கும் அவரை அடிச்சிக்க ஆள் கிடையாதுன்னு நினைக்கிறேன்.

நல்ல பதிவு. இசை பத்தி இன்னும் நிறைய எழுதுங்க, நானும் தெரிஞ்சிக்கறேன்.

Giri Ramasubramanian said...

@ நட்பாஸ்

நன்றி. இளையராஜா இசைக்கு முன்னால எல்லாருமே சமம். நான் விவரம் தெரிஞ்சவன் நீங்க இசை தெரியாதவர்னு ஒன்னும் கிடையாது. இறைவன் முன்னே அப்படிங்கறது போல. என்னால அவர் பத்தி எழுதி சிலாகிக்க மட்டும்தான் முடியும். அதைத்தான் நான் பண்ணினேன்.

நிஜமா சொல்லனும்னா எனக்கு ரொம்ப புடிச்ச ராகமான சஹானா பத்தி ஒரு பதிவு எழுதிட்டு இருந்தேன். மேற்கோள் காட்ட சில பாடல்களைத் தேடும்போது இந்த வீடியோவைப் பார்த்து அப்படியே வாயடைச்சுப் போயிட்டேன். அப்படி பிறந்ததுதான் என் இந்தப் பதிவு. உண்மையிலேயே அந்தப் பாட்டு முடியும்போது, மக்கள் கரகோஷம் எழுப்பும்போது....ஏன்...இப்போ இதை எழுதும்போது கூட என் கண்களில் நீர்.....

அவன் வித்தைக்காரன் சார்....

vinu135 said...

yes boss very true even I saw that program (Even jaya TV did a gr8 job in re-recording). His music create profound happiness in everyone..... Raja is an ultimate legend...if you analyse deeply... Even singers shined well in his period. I mean he gave more importance for singers which has more sync with his music. Good write up boss to bring something about Raja.. May be I will be very happy if you write something about a song "Madai thirandhu paadum nadhi alai naan"........should be some gr8 story behind that :-)

Giri Ramasubramanian said...

@ வினு
ரொம்ப நன்றி. உங்க நேரத்தை செலவு செஞ்சு பின்னூட்டமிட்டதற்கு.

உங்க மனச பாதிச்ச ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி இதுன்னு எனக்கு தெரியும். அதனாலதான் உங்ககிட்ட வேண்டி விரும்பிக் கேட்டேன்.

மடை திறந்து எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டுத்தான். நல்லா கேட்டுட்டு ஏதேனும் எழுதப் பார்க்கிறேன்.

ஆனா பாருங்க, சில சமயங்கள்ல சில வேண்டுகோள்களுக்கு இணங்க ஏதேனும் எழுதிட்டு பின்னால, அடடா நான் உங்ககிட்ட ரொம்ப எதிர்பார்த்தேன் பாஸ்...அப்டின்னு கமென்ட் வருது, நீங்க அதுபோல செய்ய மாட்டீங்கன்னு நெனைக்கறேன்.

நட்பாஸ் மன்னிப்பாராக! ஹஹ்ஹஹ்ஹா.....

Anonymous said...

Hi Giri,

I'm not that much good in Music, I love good sound.. this composition is a small petal in Maestro's Crown..
I didn't saw this program when it was go air in JTV.. this is great composition and @ the same time I wish to admire the audience's response for this great composition and last I'm really likes SPB sir's appearance.. what a look sir? thank you for sharing this info to me.

Entharo Mahaanoo Baavaloo Antharikki EEee Prakashnii Vandhanamulu sir...

Anonymous said...

Hi Giri,

I'm not that much good in Music, I love good sound.. this composition is a small petal in Maestro's Crown..
I didn't saw this program when it was go air in JTV.. this is great composition and @ the same time I wish to admire the audience's response for this great composition and last I'm really likes SPB sir's appearance.. what a look sir? thank you for sharing this info to me.

Entharo Mahaanoo Baavaloo Antharikki EEee Prakashnii Vandhanamulu sir...

Prakash Babu A

Giri Ramasubramanian said...

@ Prakash

We need no knowledge to like good music. I know your taste, it is better than mine. Mine is very limited I know and I very well know the way you enjoy all sorts of music. That is more than enough than having knowledge in one particular music.

Thanks for sharing your thoughts here...

natbas said...

மன்னிக்கறதுக்கு என்ன இருக்கு, இனிமே எதையுமே எதிர்பாக்கறதில்லேன்னு முடிவு பண்ணிட்ட அப்புறமா!

மடை திறந்து அள்ளி வீசுங்க. எதுத்து ஒரு வார்த்த பேச மாட்டேனே!

Giri Ramasubramanian said...

@ நட்பாஸ்

இது போல வேண்டுகோள், விண்ணப்பம் இல்லைன்னா ஏதாவது எடக்கு மடக்கு கேள்வி...அதை வெச்சு பதில் இல்லைன்னா இடுகை, இது போல எழுதி/பேசி பல நேரங்கள்ல என்னைப் போல பிரபலங்கள் (!!) - ஜெயமோகன், தலைவர் கலைஞர் உட்பட பல பேரு - பிரச்னைல சிக்கிக்கறது உண்டு.

அந்த வருத்தத்தைப் பத்தி ஒரு தனிப் பதிவு போடணும்னு ரெம்ப நாளா நெனச்சுட்டு இருந்தேன். ஒரு வழியா என் ஆற்றாமையைக் கொட்ட ஒரு வாய்ப்ப வினு குடுத்தாரு. விட்டேனா பாருன்னு அடிச்சேன்.

ஆனா உங்க பதில்...ஆஹா...நல்லா சொன்னேள் போங்கோ!

பை தி வே...உங்க வேண்டுகோள் விருப்ப விண்ணப்பங்கள் தொடரட்டும்...வழக்கம் போல என் லிமிடேஷனுக்குத் தகுந்தாப் போல நான் எழுதறேன். இது போலவும் கதைக்க எப்போதான் வாய்ப்பு கெடைக்கறது.

jaithejoy said...

Dear Giri,

Do u want me , as a Paamaran to write a comments about this living genius and his music...? Rely a big salute to this music genius.

Today at patna, I shared watching this youtube clip with our patna tamil friends, you heared their comments by phone.

Very good one, thanks for sharing with us...!

jai

Giri Ramasubramanian said...

@ ஜெய்
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி. நீங்க சொன்னது போல இந்த வாழும் ஜீனியஸ் பத்தி நானெல்லாம் பெரிசா ஒண்ணும் எழுதிட முடியாது. அதனாலதான் நான் அடக்கி வாசிச்சிட்டு அவர் இசையை பேச விட்டேன்.

Unknown said...

Oooops... my god... superb anna. i ve got ur msg at the rite time... Really nice anna... Asusual i admired in ur lines as well in raja's...

Giri Ramasubramanian said...

@ Guru

நீங்க உற்சாகப்படுத்தியது ரொம்ப சந்தோஷம் தருது. நன்றி...

Shanmuganathan said...
This comment has been removed by a blog administrator.
Shanmuganathan said...

அன்புள்ள கிரிக்கு,
மன்னிக்கணும் கிரி உங்களது முந்தய பதிவுகள் எதற்குமே நான் ரெஸ்பான்ஸ் பண்ணாததற்கு.காரணங்கள் என்று சொன்னால் சில என் கவனப்பற்றாக்குறை மற்றும் என்னை ஒரு அளவுக்கு மேல் தூண்டவில்லை என்று கூட சொல்லலாம். ஆனால் இந்தப்பதிவுக்கு எனது கருத்தை சொல்லியே ஆகவேண்டும். ஏனென்றால் எனது அனுபவம் அப்படி. உங்களது இந்தபதிவைப்பற்றி தகவல் எனக்கு சனிகிழமை சாயங்காலம்தான் கிடைத்தது. ஆனால் அப்பொழுது நான் பார்க்கும் நிலையில் இல்லை. சண்டே காலையில்தான் என்னால் பார்க்க முடிந்தது. அதுவும் அதிகாலை 5 மணிக்கு. 4 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன் தண்ணீர் குடிப்பதற்காக பின்பு தூங்கவில்லை. உடனே சிஸ்டத்தை ஆன் செய்து பார்க்க தொடங்கினேன். எனக்கு இன்னும் புல்லரித்துகொன்டுதான் இருக்கிறது. என்ன ஒரு இசை சார். அந்த மூன்று எழுத்துகளில் நம்மை மூச்சு வாங்க வைக்கிறார் சார். அதுவும் அந்த இனிய காலையில் அப்படி ஒரு அனுபவம் சார். அறையில் எல்லோரும் எழுந்துவிட்டார்கள். எல்லோருக்குமே அரித்ததாகதான் சொன்னார்கள். ஒரு நான்குதடவை திரும்ப திரும்ப கேட்டிருப்போம். பின்பு பணியிருந்தமையால் கிளம்பிவிட்டோம். எனக்கும் இளையராஜாவை ரொம்பவே பிடிக்கும் சார். (யாருக்குத்தான் பிடிக்காது சொல்ல முடியாது நாய்க்கும் பூனைக்கும் கூடபிடிச்சிருக்கும் ) . உங்களுக்கு ஒரு சிறப்பான நன்றி. இப்படி நீண்ட கடிதத்திற்க்குத்தான் காலையில் எழுத வில்லை. இதுபோல் இன்னும் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் இலக்கியத்தில், இசையில், அனுபவத்தில். அறிவியலில் மற்றும் இத்யாதிகள். பூர்த்தி செய்வீர்கள் என்று நம்பும் ஒரு வாசகன்.

சண்முகநாதன்

விஜய் said...

The Great Genius

Vijay

Heam said...

wow.. wat a coincidence .. just now in my lunch break , i saw this event DVD and for the surprise this piece was playing in the time . i came back with some kinda wat to say ? hmmm.. ecstasy filled in me and here i saw the post of the same programme . Thanks a lot buddy for the write up

natbas said...

அண்ணா, எனக்கும் கூட புல்லரிக்குதுங்ணா... இந்த மாதிரி ஒரு கமெண்ட்டை நான் எங்கியுமே படிச்ச்சதில்லீங்ணா...

நண்பர் சண்முகநாதனுக்கு நன்றி- அவரைப் பாத்தா பொறாமையா இருக்கு. எவ்வளவு விசையா உணர்ச்சிவசப்படுறாரு...

நமக்கெல்லாம் வாழ்க்கை மேகங்கள் கடக்கும் பாலைவனம் மாதிரி இருக்கு... ஏதோ அங்க இங்க நிழல் கிடைச்சா கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கலாம் என்கிற அளவில்.

நல்ல இசையையும் எழுத்தையும் உற்சாகத்தோடு ரசிக்கிற நண்பர் சண்முகநாதன் இருக்கிற இடமே சிரிப்பும் சந்தோஷமும் நிறைஞ்ச சோலையா இருக்குமென்று நினைக்கிறேன்...

நிறைய எழுதுங்க நண்பரே... இங்க அப்பப்ப கோக்குமாக்கா நாம எழுதறத கண்டுக்காதீங்க.

Shanmuganathan said...

@natbas
hello sir, thank you so much.. I will write

Giri Ramasubramanian said...

@ விஜய், சண்முகம், Heam
உங்கள் ரசனைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தங்கள் ஊக்கங்கள் என்னை மேன்மேலும் எழுதத் தூண்டுகின்றன.

Heam , குறிப்பாய் உங்கள் நாளில் ஒரு கோ-இன்சிடேன்ட்டை தந்தது மிக்க மகிழ்ச்சி.

சண்முகம், ரொம்ப நன்றிப்பா...!!

Related Posts Plugin for WordPress, Blogger...