சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் ஸ்டில்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் வந்த போது, ஆஹா என்ன ஒரு கெட்டப் நம்ம சூர்யாவுக்கு என எண்ணினேன். அப்படி மிரட்டும்படி இருந்தன படங்கள்.
இன்று நண்பர் பரிதியிடமிருந்து வந்த இந்த டிரைலரைப் பார்த்த போது, மிரட்டலாக மட்டும் அல்லாமல், சற்றே நடுக்கமாகவும் இருந்தது. இந்திய சினிமாவின் மேகிங் ஸ்டைலை மாற்றி அமைத்ததில் ராம் கோபால் வர்மாவின் பங்கு முக்கியமானது. ஆனால் இந்த டிரைலரைப் பார்க்கையில், அந்த ஸ்டைல் அடுத்த அடுத்த கட்டங்களைத் தாண்டிச் செல்வதாய்ப் படுகிறது எனக்கு.
கூர்மையான வசனங்கள் உங்களைத் தைப்பதை இந்த வீடியோவைப் பார்க்கையில் நீங்கள் உணரலாம். ரக்த சரித்ரா என ஹிந்தியில் வரவிருக்கும் இப்படம் நம்ம சூர்யாவுக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என நம்புவோம்.
4 comments:
ஆமாம், அதிரடியா இருக்கு- தமிழில டப் செஞ்சு வெளியிடராங்களா? எல்லாரும் வடக்கத்திக்காரங்களா இருக்காங்களே?
ஹலோ கிரி,
உங்கள் 'ரத்த சரித்திர' trailor பார்த்தேன், இந்த மாதிரி படங்களெல்லாம் நீங்கள் encourage பண்றத நான் விரும்பல சார், தயவுசெய்து தவிர்ப்பீங்கனு நினைக்கிறேன் சார். Making ஸ்டைலுக்காக எந்த மாதிரி படங்களையும் பார்க்க முடியாது சார். பருத்தி வீரன் படத்தை பார்த்து நானும் பிரமித்தது உண்மைதான். ஆனால் அதன் பாதிப்பு தவறானது சார். எல்லோருக்கும் அந்த 14 ரீல் தன மனசில் இருக்கும், 15th ரீல் அல்ல. நான் உணர ஆரம்ப்பித்திருக்கிறேன். இது என் தாழ்வான கருத்து பிழையிருந்தால் மன்னிக்கவும்.
நன்றி,
சண்முகநாதன்
@ நண்பர் சண்முகநாதன்,
தயவு செஞ்சு உங்க கருத்துகளை வெளிப்படையா சொல்லுங்க (என்னாலதான் திட்ட முடியல, நீங்களாவது திட்டுங்கன்னு நான் சொல்றதா என் மனசாட்சி குத்தம் சாட்டுது.... இது வேற நேரம் கெட்ட நேரத்துல)
உண்மைய சொல்லணும்னா, பல பதிவுகள் உங்களை மாதிரி கமெண்ட் செய்யறவங்களால்தான் சிறப்பிக்கப்படுது (இப்போகூட மனசாட்சி ஏதோ முணுமுணுக்குது- அது நமக்கு வேண்டாம்).
ரொம்ப பெரிய விஷயங்கள எழுதறார நண்பர் கிரி- அங்க போய் நாம அல்ப விஷயங்களை வம்பு பேசறாமாதிரி பேசலாமான்னு நீங்க நினைக்கிறீங்க போல. புரியுது. ஆனா, சொல்லுங்க சார், நானும் அப்படி நினைச்சா இங்க (இங்க என்ன இங்க, எங்கியுமே) வாயைத் திறக்க முடியாது.
அதனால நம்ம கிரி 144 போடற வரைக்கும் இங்க யாரும் என்ன வேணாம் சொல்லலாம்னு வெச்சிக்குவோம்.
---
பருத்தி வீரன் பத்தி நீங்க சொன்னது ரொம்ப சரி.
ரத்த சரித்திரம் வருவதற்கு முன்னமேயே அதுக்கு சிவப்புக் கம்பளம் விரிசசிருக்காரு நம்ம கிரி- உங்க கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறாருன்னு தெரியல. அனேகமா அவரு ரூம் போட்டு யோசிக்க வேண்டி இருக்கும்னு நினைக்கிறேன்.
http://www.facebook.com/#!/group.php?gid=105886656124740
Post a Comment