May 11, 2010

ராவணன் - இசை இம்சை?

ராவணா குறித்த "ராவண் என்கிற அசோகவனம் - இசை வரவு" பதிவை சில தினங்களுக்கு முன் எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து ஹிந்தியிலும் பின்னர் ஒரு வார இடைவெளியில் தமிழிலும் பாடல்களைக் கேட்டேன். கேட்டுக் கேட்டுப் பார்த்தேன். எனக்கு இன்னமும் ஒன்றும் பிடிபடவில்லை.

சில பாடல்களில் பழைய ஒலி இசைப்பதை ரஹ்மானே மறுப்பேதுமில்லாமல் ஒப்புக்கொள்வார். ஆனால் மணிரத்னத்தின் ஒரு லைப் டைம் மூவிக்கு இப்படியா ஏனோ தானோவென்று இசையமைப்பார் ரஹ்மான்? இருக்காது, பொறுத்திருந்து கேட்போம். முதல் சுற்று கேட்டபின் விமரிசனம் எழுதுதல் சரியாகாது என நான் காத்திருக்கையில் நண்பர் சாம்சன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். நண்பரின் அனுமதியுடன் அக்கடிதத்தில் அங்குமிங்கும் சில திருத்தங்களைச் செய்து வெளியிடுகிறேன். 
______________________________________________________________________




கிரி,

நீங்கள் ராவணன் பட இசைப் பேழை வெளிவரப் போகிறது என்ற செய்தியை வெளியிட்டீர்கள் பாடல்களைக் கேட்டீர்களா? ஏன் அது குறித்து இன்னும் எழுதவில்லை? இன்று வரும் நாளை வரும் என்று தினமும் காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம்.

 வீரா வீரா வீரா- என்ற விஜய் பிரகாஷ் பாடிய பாடலில் ஏதோ ஒன்று இருக்கிறது- அது என்ன என்று தெரியவில்லை. நான் இதுவரை இருபது தடவை கேட்டிருப்பேன்- ஏதோ ஒன்று நிறைவு பெறாத மாதிரி இருக்கிறது. Equaliserஇல் Bass , Treble , Vocal என்று மாற்றி மாற்றி settingsஐ மாற்றி அதன் சாத்தியக் கூறுகளைக் கற்றேனே தவிர, ஹிப்னடிகாக இருக்குற அந்த பாடல் பிடிபட மறுக்கிறது (tone deafஆக இருப்பதில் இது ஒரு இம்சை)- பரத்வாஜ் ரங்கன் தன் ராவண் இசை விமரிசனத்தில், ரகுமானின் இசை இதயத்தைக் கவ்வாமல் மூளைக்கு ஓவர்டைம் வேலை தருகிறது என்று சொன்னது இது குறித்துதானோ? கிரி, அந்தப் பதிவையும் அதன் பின்னூடங்களையும், அந்தப் பின்னூட்டங்களுக்குப் பதிலான பரத்வாஜ் ரங்கனின் இந்தப் பதிவையும் அதைத் தொடர்நத காரசாரமான விவாதங்களையும் படித்தீர்களா?
ராவணன் இசையின் சிக்கல்களை நீங்கள் உங்கள் பார்வையில் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை.

இனி என் எண்ணங்கள்:

"உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டே நீ கொஞ்சம் சுழிக்கையிலே.." என்று கார்த்திக் பாடுவது ஏதோ ஒரு வகையில் பிரசாந்த் படப்பாடலை நினைவுபடுத்துகிறது.

"கோடு போட்டா" பாடலில் "நேத்து வரைக்கும் உங்க சட்டம் இன்னியிலேருந்து எங்க சட்டம்" என்ற refrain ரொம்ப நன்றாக இருக்கிறது. ஏற்ற இறக்கங்களுடன் பென்னி தயால் அற்புதமாகப் பாடியிருக்கிறார்- அதுவும் அந்த ஒற்றை வாத்தியம் நீட்டி முழக்குற இனிமை!

அனுராதா ஸ்ரீராம் - ஷங்கர் மகாதேவன் பாடிய "காட்டுச் சிறுக்கி" கள்ளிக்காட்டு பாட்டை ஏதோ ஒரு வகையில் நினைவூட்டுகிறது.

ஸ்ரேயா கோசல் பாடிய "கள்வரே கள்வரே" - இனிய குரல். கேட்கக் கேட்கப் பழகிப் போகுமென்று நினைக்கிறேன்.

பென்னி தயால் மற்றும் குழுவினர் பாடிய "கெடா கறி" பற்றி என்ன சொவதென்றே தெரியவில்லை. டம் டம் என்ற முழக்கம் எனக்கு உப்பு, அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், மசாலாப் பொடி எல்லாவற்றையும் ஒரு பெரிய அண்டாவில் கொதிக்க வைத்து அதில் ஒரு மனிதனை இறக்கிவிட்டு காட்டுவாசிகள் நெருப்பை சுற்றி சுற்றி பாடுவார்களில்லையா, அப்படி ஒரு காட்சியை கண்முன் விரிக்கிறது. அவர் ஏன்தான் அந்த ஆப்பிரிக்கக் கொட்டைச் சேர்த்தாரோ!

நீங்கள் எதுவும் எழுதாத காரணத்தால் நானே என் எண்ணங்களை சொல்லிவிட்டேன். இது பின்னூடாக வந்திருக்க வேண்டியது, உங்கள் மௌனத்தால் மெயில் வடிவத்தில் வருகிறது.

உங்கள் ராவண இசை அனுபவத்தை ஒரு பதிவாக எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,

சாம்சன் ஜெயபால், ஆரணி. 

___________________________________________________________


நான் பாடல்களை இன்னமும் சரிவரக் கேட்காததால், இதை என் நண்பரின் கருத்து எனவே கொள்ளவும். 

என் கருத்து என ஏதேனுமிருந்தால் அதனைத் தனியே எழுதுகிறேன்.

3 comments:

natbas said...

நண்பர் சாம்சனுடன் சற்றே வேறுபடுகிறேன். ரகுமானின் பாடல்கள் கேட்க கேட்கத்தான் பிடித்துப் போகும்- இப்போதுகூட காடு சிரிக்கி பாடலுக்கு தாளம் போட்டுக் கொண்டேதான் இதை டைப் பண்ணுகிறேன்.

அருமையான பாடல்கள்.

Er. said...

Please, for God sake, add a translator to your blog page!

Giri Ramasubramanian said...

@ Virgin Author

Sure will try and get it if available. Thanks very much for the suggestion.

Related Posts Plugin for WordPress, Blogger...