தீவிரவாதத்தின் எல்லா கோரத் தாண்டவங்களுக்குப் பின்னாலும் அப்பாவி ஜீவன்களின் உயிர் சிதைக்கப்படும் பயங்கரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நேற்று மேற்குவங்க ரயில் விபத்தில் இறந்த நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களிலும் இப்படிப்பட்ட கதைகள் பல அடங்கியிருக்கின்றன. அவற்றில் எல்லாவற்றுக்கும் உச்சமான கண்ணீர்க் கதை ஷிரின் மற்றும் ஷர்மின் என்ற இரட்டைப் பெண் குழந்தைகளின் மரணம்.
மும்பையில் இருக்கும் பெரியம்மாவைப் பார்க்கவும் கோடை விடுமுறையை களிப்புடன் கொண்டாடவும் சென்ற இக்குழந்தைகளின் கனவு நள்ளிரவில் சிதைந்தது கொடூரமானது. இதற்குமேல் எனக்கு எழுத வரவில்லை.
உள்நாட்டுக் குழப்பங்களை அடக்க இயலாமல் தவிக்கும் நம் ஜனநாய ஆட்சி முறையை எண்ணி அடக்க மாட்டாமல் நெஞ்சு விம்முகிறது. சிவப்பு சித்தாந்தத்தை தவறு தவறாக போதித்தவாரும், இப்படிப்பட்ட கோரமுகம் கொண்ட பயங்கரவாத மாவோக்களை ஆதரித்துக் கொண்டும் இருக்கும் அருந்ததி ராய் மற்றும் இதர அதிமேதாவிகள் இதற்கு என்ன சப்பைக்கட்டு சொல்லப் போகிறார்கள்?