நண்பர் ஒருவரின் ரத்த பந்தத்தின் கவிதை ஒன்றை நான் விமரிசனம் செய்திருந்தேன். அது கடல் தாண்டி அவர் இருந்தாலும், பிட்ஸ்பர்கிலிருந்து பீட்ஸா தின்றபடி கண்டபடி அவர் பின்னூட்டங்கள் இட்டிருந்தார். அவர் உணர்வுகளை நான் மதிக்கிறேன். மேலும் என் தளத்தை விமரிசித்து ஒரு கடிதமும் எனக்கு எழுதியிருந்தார் ஆனந்தமாக.
அட, நான் ஏதேதோ எழுதினாலும் இரண்டு வருடங்களாக எழுபத்து மூன்று நாடுகளில் ஏழாயிரத்து ஐநூறு பேர் என்னைப் படித்திருப்பதை திரும்பிப் பார்க்கும் வாய்ப்பை தந்தது அவர் கடிதம்.
அன்பு நண்பர் ஆ.வி.கி'க்கு,
உங்கள் கோபம் புரிகிறது- உங்கள் பின்னணியிலிருந்து பார்த்தால் அது நியாயமானதும் கூட. உங்களை உசுப்பேத்திய என் விமரிசனங்கள் உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு வருந்துகிறேன். விமரிசனத்தை அப்படியே விடுத்து, உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் சொற்களை நீக்கியிருக்கிறேன். இப்போது இந்த விமரிசனத்தை ஒரு கிரிட்டிசிசம் ஆக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கும் என எண்ணுகிறேன்.
நீங்கள் எழுதியது எது குறித்தும் எனக்கு வருத்தமோ கோபமோ இல்லை- பொது வாழ்க்கையில் இது போன்ற வசவுகள் எல்லாம் சகஜம். என் தளத்தை உஷார்ப் படுத்திக் காக்கும் AVG ஆன்டி வைரஸ் மென்பொருளாகவே உங்களை நான் காண்கிறேன். (அட....நீங்களும் AVG தானே?)
பின் குறிப்பு: நானும் ஒரு புத்தகத்தை வெளியிடத்தான் போகிறேன். அது குறித்த பதிவு இந்த ஆண்டு கட்டாயம் வரும். நீங்கள் சொன்னது அனைத்தும் எனக்கு கூடுதால் ஊக்கம் தரவே செய்கிறது. நன்றி. புத்தக வெளியீட்டு விழாவிற்கு நிச்சயம் உங்கள் ஆனந்த mailbox'ற்கு அழைப்பு வரும். விமான டிக்கெட்டிற்கு சொல்லி வையுங்கள்.
மேலும் பின் குறிப்பு: அட எனக்கும் உங்களுக்கும் 19 ராசியான நம்பர் சார். உங்க linkedin contacts பத்தி சொல்றேன் நான்.
11 comments:
என்னமோ பூடகமா எழுதியிருக்கீங்க, எனக்கு ஒண்ணும் புரியல. ஆனா ஒண்ணு புரியுது- நீங்க நட்புக்கு மரியாதை குடுக்கறீங்கன்னு.
எங்க, ரெண்டு பெரும் தோளில கை போட்டுக்கிட்டு சிரிச்சிக்கிட்டே ஒரு போஸ் குடுங்க, ஜோரா கை தட்டுறோம்.
வாழ்த்துக்கள் கிரி !!
பாருங்கள், உங்கள் புத்தகத்தை வெளிக்கொணர என்னவெல்லாம் நேரடியாகவும்,மறைமுகமாகவும் சொல்ல வேண்டியிருக்கிறது. வைய வைய வைரக்கல் !!
நிச்சயம் உங்கள் புத்தக வெளியிட்டிற்கு வருகிறேன் , நீங்கள் அழைப்பு அனுப்பா விடினும்.
@Natbas : உங்கள் பொறுமையான பதில்கள் நிச்சயம் என்னை என் செயலுக்காக வருந்த செய்தது.சற்று அதிகமாகவே உணர்ச்சிவசபட்டுவிட்டேன். தந்தையை பழித்தவரை கண்டவுடன் உணர்வுகள் கட்டுபடுவதில்லை.மன்னிக்கவும்.
clap! clap!
@ஆனந்த்,
நீங்கள் இந்த ஒற்றை வார்த்தையில் மிக உயர்ந்து விட்டீர்கள்- எனக்கு நானே என்னை சிறுமைப்படுத்திக்கொண்ட உணர்வு ஏற்படுகிறது. தயவு செய்து என்னையும் மன்னித்து விடுங்கள். உங்களைப் போன்ற இளைஞர்களிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
@கிரி,
நானெல்லாம் என்ன! நண்பர் ஆனந்த்தான் உண்மையான பொக்கிஷம். எத்தனை பண்பாக எழுதி இருக்கிறார் பாருங்கள்.
இப்போது கொஞ்சம் பின்னணி புரிகிற மாதிரி இருக்கிறது. ஆனந்த் பண்பாளர்- அனானி பின்னூட்டமிட்டு தன் கோபத்தைத் தனித்துக் கொண்டுள்ளார். நானாக இருந்தால் உங்கள் துடுக்குத்தனத்துக்கு கூலிப் படையை அமர்த்தி உங்கள் கட்டை விரலை ஒடித்திருப்பேன். ஒரு தந்தைக்காக மகன் இது கூட செய்யவில்லை என்றால் எப்படி?
@ ஆனந்த்
தாங்கள் என் பதிலைப் புரிந்து கொண்டமை என்னை மிகவும் மகிழ்ச்சியுறச் செய்கிறது. மிக்க நன்றி. வாங்க பழகலாம்!
ஒன்றைப் புரிந்து கொண்டேன். criticism தவறில்லை, ஆனால் அதனை எழுதும் முறையில் கவனம் செலுத்துதல் மிக முக்கியம். வைய வைய வைரக்கல்லாக ஆகாவிடினும், ஒரு வாழைத்தாராகவாவது ஆக வேண்டும்.
@ நட்பாஸ்
என்னக் கொடும சார்!?
@giri and anand
http://i534.photobucket.com/albums/ee345/krlovett/clap.gif
innikku fullaa clap atikkaraen. paatthukkitte irunga rentu perum. :)
சற்றே நீண்ட பின்னோட்டம். படிக்க நேரம் இருக்கும் என்று நம்புகிறேன்.
இணைய வலைபூக்களில் கிரி,நட்பாஸ் இவர்களின் பாங்கு சற்று அரிதானது. சகட்டு மேனிக்கு திட்டுவதும்,பதிலுக்கு கூச்சல் போடுவதுமே பெரும்பான்மை பாங்கு.
ஒரு கவிதையை ஒருவர் எனக்கு கோபம் வரும் அளவு சாடுகிறார் என்றால் (தந்தையின் கவிதை என்பதால் கூடுதல் ரௌத்திரம் :-)), எனது நோக்கம் அவர் கருத்தை மாற்றுவதாக,தவறு என உணர செய்வதாக மட்டுமே இருந்திருக்கவேண்டும்.
சரி,அதற்காக இப்பொழுது என் தந்தை எத்தனை புத்தகங்கள் எழுதியுள்ளார்,எத்தனை பத்திரிகைகளில் அவர் கவிதை வந்துள்ளது என்ற தகவல் அறிக்கையை தர போவதும் இல்லை, அது உங்கள் கருத்தை மாற்ற உதவாது என்றும் நம்புகிறேன்.
நம் அனைவர்க்கும் உள்ள ஒரு ஒற்றுமை - எழுத்தாளர் சுஜாதா -வின் எழுத்து மீது நமக்கு உள்ள காதல். 2003'ம் வருடம்,ஜூலை மாதம்,'கற்றதும் பெற்றதும்' தொடரில் அவர் என் தந்தை - சொல்கேளான் ஏ.வி.கிரி - கவிதையை மேற்கோள் காட்டி எழுதியது இது :
"'இலக்கிய வீதி'யின் வெள்ளிவிழா நிறைவாக சொல்கேளான் (ஏ.வி. கிரி) கவிதைகள் நூல் வெளியீட்டின் அழைப்பிதழ் வந்தது. வரவேற்பில் இனிப்பு மிட்டாய்க்கு பதில் இஞ்சி மிட்டாய், அரங்கில் தேநீருக்கு பதில் சுக்குக்காபி, சிறப்பு விருந்தினர்களுக்கு பொக்கேக்களுக்கு பதிலாக புதினாக் கீரைக்கட்டு, முதல் நூல் பெற பார்வையற்ற சகோதரி சுப்புலட்சுமி போன்ற புதுமைகள் இருப்பதாகத் தெரிந்தது.
சொல்கேளான் அழைப்பிதழில் அச்சிட்டிருந்த கவிதைகளில் ஒன்று என்னைக் கவர்ந்தது.
அழகான நெற்றியில்
கலையாத சந்தனப் பொட்டு
சட்டைப்பையில்
நான்காக மடித்த காகிதத்தில்
விபூதி குங்குமம்...
கையிலும் கழுத்திலும்
இடுப்பிலும்
வளம் தரவும் நலம்பெறவும்
மகான்கள் மந்திரித்துத் தந்த
கயிறுகள்... தாயத்துகள்
முகவரி மட்டும் இல்லை
பொது மருத்துவமனையில்
சவக்கிடங்கில்
அநாதையாக
இந்தக் கவிதையின் எட்டாவது ஒன்பதாவது வரிகளை நீக்கிப் படித்துப் பார்த்தால் சிறப்பு கூடுகிறது என்று சொல்பவர்கள் எல்லாம் ஓ போடுங்கள்!"
முழு கட்டுரை :
http://sujatha-kape.blogspot.com/2003/07/blog-post_13.html
பூ,நிலா,வானம்,காதல் எவை பற்றி கவிதை எழுதும் பலர் மத்தியில் சமூகத்திற்காக எழுதும் என் தந்தையை போன்றவர்களை பாதுகாக்கவேண்டும்.
புதுக்கவிதை என்பது அதன் நடைக்காக அன்றி,அதன் கருத்திற்கும்,நோக்கத்திற்கும் தான் விமர்சிக்கப்படவேண்டும்.
இது பற்றி உங்களுக்கு இன்னமும் மாற்று கருத்து இருந்தால் அதற்காக ஆரோகியமான விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
@நட்பாஸ்: உங்கள் பண்பு சற்று ஆச்சர்யமானது. என்னை பாராட்டியதால் இதை சொல்லவில்லை. எனக்குள் தூங்கும் அந்த மனிதன் உங்களுக்குள் விழித்திருக்கிறான் :-) .
@ஆனந்த்,
எனது தந்தையும் கவிதை எழுதுகிறார்- ஆனால் நமக்குள் என்ன ஒரு வேறுபாடு என்றால், நானே அவரது கவிதைகளைக் கடுமையாக விமரிசிக்கிறேன். கவிஞர் கண்ணதாசனுடன் இளம் வயதில் ஓரளவு பழகி இருக்கிறார். எங்கள் வீட்டு வரவேற்பறையில் ரொம்ப நாட்களாக அவரும் கவிஞரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கிற புகைப்படம் தொங்கிக் கொண்டிருந்தது.
கவிஞர் ஒரு மாபெரும் மேதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது திரை உலக வெற்றி, தமிழில் தரமான கவிஞர்களுக்கு தவறான அடையாளத்தைத் தந்து விட்டது என்று நினைக்கிறேன். காரணம், நல்ல கவிஞனாக இருந்தால் அவன் திரைப்பாடல்கள் மூலம் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டது- இதுவும் கூட கவிஞரின் குற்றமல்ல. எனது தந்தையும் அந்தக் கவர்ச்சியில் தனது தனித்துவத்தை இழந்தவர் என்பது எனது விமரிசனம். கவிஞரின் ஆளுமை தமிழ் கவிதை உலகை ஆட்டிப்படைத்ததை சுஜாதா "கனவுத் தொழிற்சாலை" நாவலில் நன்றாக பதிவு செய்திருக்கிறார் (என்னைப் பொறுத்தவரை, அவர் எழுதியதிலேயே சிறந்த நாவல் இதுதான்- நானே, கவிஞர் அருமைநாயகம்- அதுதானே அவர் பெயர்?-, அவருக்காக வருத்தப்பட்டிருக்கிறேன், கண்ணீர் கூட விட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்).
இதை ஏன் சொல்கிறேன் என்றால், இதனால்தான் என்னால் உங்கள் உணர்வைப் புரிந்து கொள்ள முடிகிறது. மற்றபடி நானும் உங்களைப் போலவும், நண்பர் கிரியைப் போலவும் உணர்ச்சிவசப்படுபவன்தான். என்னிடம் சிறப்பாக எந்த நற்குணமும் கிடையாது.
உண்மையை சொன்னால், நான் மூன்றாம் மனிதன்- ஆனால் விவாதத்தில் பாதிக்கப்பட்ட நீங்கள் இருவரும், மிக எளிமையாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு- மன்னிக்கவும் மாற்றிக் கொள்ளவும் கூச்சப்படாமல்- வெளிப்படையாக தவறுகளை திருத்திக்கொண்டு நட்பு பாராட்டுவது எனக்கு நிஜமாகவே உங்கள் இருவர் மீதும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. முன்னமேயே சொன்ன மாதிரி, இந்த இளைய தலைமுறை ஒன்றுபட்டு நிற்கும், சாதித்துக் காட்டும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
நீங்களிருவருமே நயத்தக்கோர்- உங்கள் உயர்ந்த குணத்தைத் தாண்டி நீங்கள் கவிதை குறித்து கதைத்து என்ன ஆகப் போகிறது என்று தோன்றுகிறது.
நன்றி.
கிரி உங்களுக்கு எல்லாம் கவிதையின் அரிச்சுவடி கூட புரியாது. விமர்சனம் என்ற பெயரில் பேத்துகிறீர்கள். என்ன கேவலம். ஒரு பொருட்படுத்தத் தக்க அவதானிப்பு கூட உங்கள் தளத்தில் இல்லையே! முதலில் வாசிப்பு மற்றும் எழுத்துப் பயிற்சியை அடைந்த பின், ஏதாவது அவதானிப்புக்ள் உண்டென்றால் எழுத வாருங்கள். இணையம் திறந்த வெளி என்பதால் உங்களைப் போன்ற அரைவேக்காடுகள் அல்லது அரைநிஜார்கள் எல்லாம் இரைச்சலிட்ட படி அலைகிறீர்கள்.
மாதவிக்கு,
மீண்டும் கோடானுகோடி நன்றிகள். தங்கள் விமரிசனங்களையும் கருத்துக்களையும் ஏற்கிறேன். பின்பற்ற முயற்சிக்கிறேன்.
@ anonymous
மாதவிக்கு உங்கள் பதிலை வெளியிட இயலாமைக்கு வருந்துகிறேன். ஒரு மூன்றாம் தரத்திற்கு அதே வகையிலான பதில் பதிலாகாது. பகைமை உணர்ச்சியை வளர்த்துவிட நான் விரும்பவில்லை. என் தளத்தை அதற்கு உபயோகிக்கவும் நான் விரும்பவில்லை. மன்னிக்கவும்.
Post a Comment