May 9, 2010

ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம்

இன்று தினமலர் நாளிதழில் வந்த செய்தி ஒன்றை அப்படியே இங்கு தந்திருக்கிறேன். தயவு செய்து படியுங்கள். படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், "நிற்க அதற்குத் தக".......

நன்றி: தினமலர்



ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம்: பஸ்சில் மோதி உயிர் பிழைத்த வாலிபர் சொல்வதை கேளுங்கள்!
மே 08,2010,23:54  IST
Human Intrest detail news 
சென்னை : ''ஹெல்மெட் அணிவது எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது தான் உணர்ந்தேன். ஹெல்மெட் அணிந்திருந்ததால் தான் இவ்வளவு பெரிய விபத்து நடந்தும், சிறு காயத்துடன் உயிர் பிழைத்தேன்,'' என ஆவடி அருகே நின்றிருந்த பஸ்சின் பின் பகுதியில், பைக்கில் மோதி விபத்துக்குள்ளான வாலிபர் மெய்சிலிர்த்தபடி கூறினார்.

சென்னை நகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கேற்ப, விபத் துக்களும் அதிகமாக நடக்கிறது. 'விபத்துக் களை தவிர்க்க போக்குவரத்து விதிமுறைகளை கடைப் பிடியுங்கள்; காரில் செல்லும் போது 'சீட் பெல்ட்' அணியுங் கள். பைக்கில் செல்பவர்கள் கட் டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்' என போக்குவரத்து போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். நாளொன்றுக்கு குறைந்தது 10 விபத்துக்களாவது நடக்கின்றன. வாரத்தில் நான்கைந்து பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்.

கடந்த 5ம் தேதி, சென்னையில் இருந்து ஆவடி நோக்கிச் சென்ற பைக் ஒன்று, தனியார் பாலிடெக்னிக் எதிரே, நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சின் பின்பகுதியில் மோதி விபத்துக் குள்ளானது. இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் அனைவரும், பைக்கில் சென்றவர் கட்டாயம் உயிரிழந்திருப்பார் என்றே நினைத்தனர். ஆனால், விபத்தில் சிக்கிய பைக் ஓட்டி, அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இக்காட்சியை பார்த்தவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். நடந்த சம்பவத்தை, விபத்தில் சிக்கிய வாலிபரே விளக்கி கூறுகிறார்.

எனது பெயர் கதிர்வேல் (21). எனது அப்பா பெயர் பழனிசாமி. நான், ஆவடி, காந்திநகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வருகிறேன். தவணை முறையில் துணி விற்பனை செய்து வருகிறேன். பைக்கில் எங்கு சென்றாலும் தலையில் ஹெல்மெட் அணிந்து தான் செல்வேன். கடந்த 5ம் தேதியும் ஹெல்மெட் அணிந்து, பைக்கில் சென்னை, சேத்துப் பட்டுக்கு ஒரு வேலையாக சென்றேன். வேலையை முடித்து விட்டு, வீட்டிற்கு திரும்பினேன். மதியம் 11.30 மணியளவில் ஆவடி, தனியார் பாலிடெக்னிக் எதிரே வந்தபோது, கடும் வெயில் காரணமாக, கண்கள் இருட்டி, மயக்கம் வருவது போல் இருந்தது. அப்புறம், என்ன நடந்தது என்பதே எனக்குத் தெரியவில்லை. எனது பைக், சாலையோரம் நின்றிருந்த ஒரு பஸ்சின் பின்பகுதியில் மோதியிருந்தது. நான் பைக் அருகே சாலையோரம் விழுந்து கிடந்தேன். அவ்வழியாக சென்றவர்கள் என்னை அருகில் இருந்த மரத்தடியில் அமர்த்தி, தண்ணீர் கொடுத்தனர். ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் காயம் எதுவும் இல்லை. மூக்கில் இருந்து சிறிது ரத்தம் வந்தது. உடலில் சிறு வலி ஏற்பட்டது. உடலில் வேறெங் கும் காயம் இல்லை.

பின்னர், அங்கு வரவழைக்கப் பட்ட 108 ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி, அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் எனக்கு ஸ்கேனிங் உட்பட முழு உடல் பரிசோதனை செய்தனர். இதில், இடது கையில் எலும்பு முறிவும், இடது நடுவிரலில் சிறு காயம், வலது காலில் 'சைலன்சர்' சுட்டதால் ஏற்பட்ட தீக்காயம், வலது தோள்பட்டையில் வலி ஆகியவை இருந்தது. உடலில் பெரிய காயமோ, தலையில் பலத்த அடியோ இல்லை என டாக்டர்கள் கூறினர். நான் அணிந்திருந்த ஹெல் மெட் தான், தலையில் காயமில் லாமலும், உடலில் சிறு காயத்துடனும் தப்பியதற்கு காரணம். ஹெல்மெட் அணிவது எவ் வளவு முக்கியம் என்பதை அன்று தான் உணர்ந்தேன். இனிமேலும், நான் ஹெல் மெட் அணிந்து தான் பைக்கில் செல்வேன். இவ்வாறு கதிர்வேல் கூறினார்.

4 comments:

jaithejoy said...

good one giri. Keep on posting such a useful one.

jai

Giri Ramasubramanian said...

@ ஜெய்
மிக்க நன்றி! உங்க ஊக்கம் இருந்த நிச்சயம் நிறைய எழுதுவேன்.

natbas said...

உபயோகமான பதிவு- ஆனா ஒரு சந்தேகம்.

கழுத்து வலி, தலையில் முடி கொட்டுதல், தலை வலி வருதல் போன்ற உண்மையான காரணங்களுக்காக என் நண்பர்கள் சிலர் தலைக் கவசம் அணிவதைத் தவிர்க்கிறார்கள்- இவர்களுக்கு இதை வலியுறுத்தக் கூடாது.

இல்லை எல்லாரும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தப்பு- அப்படி செய்தால் ஒரு குழந்தை பெற்றவர்கள் எல்லாரும் கட்டாயமாக காண்டம் அணிய வேண்டும் என்று ஒரு சட்டம் நாளைக்கு வரும், அதையும் சில பேர் நியாயப்படுத்துவார்கள் (என்ன இது, இங்க வந்தாலே சாரு எபக்ட் வருது!)

Giri Ramasubramanian said...

@ natbas

யாரையும் விடக்கூடாது. பாம்பே டு தானே முதல் முதலா ரயில் விட்டப்போ கிராம மக்கள் வெள்ளைக்காரன் கிட்ட போயி கம்பிளயிண்டு குடுத்தாங்களாம்.

"சார், ரயிலை நிறுத்துங்க."
"எதுக்குப்பா?"
"அந்த ரயில் ஓடற சத்தத்துல எங்க மாடுங்க பால் கறக்க மாட்டேங்குது"

இதெப்டி இருக்கு. இப்படித்தான் தல/கழுத்து/பல்லு வலியெல்லாம். கொஞ்ச நாள் போனா சரியாயிடும்.

சில நல்ல விஷயங்களை எல்லாம் கடுமையான சட்டம் மூலமாத்தான் மாத்த முடியும்.

Related Posts Plugin for WordPress, Blogger...