May 25, 2010

அஞ்சலீனா ஜோலிக்கு அல்வா

முன்குறிப்பு: இது ஒரு கிண்டல் பதிவு. கிண்டல் செய்து வரையப்படும் பின்னூட்டங்கள் வெளியிடப்படும். என் வேலை, ஜாதி, தகுதி சம்பந்தப்பட்ட வெட்டுக்குத்துப் பின்னூட்டங்கள் சைபர் கிழிப்பு செய்யப்பட்டு தூக்கி எறியப்படும்.

ரொம்ப நாட்களாக எனக்கு ஒரு ஏக்கம் உண்டு. நாற்பது வருடங்களாக எழுத்துலகில் கோலோச்சிவரும் என் மனதிற்கினிய எழுத்தாளர் சாருவிற்கு மட்டும் நிறைய பெண் வாசகிகள் இருக்கிறார்களே. தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேவல் ஒலியுடன் தொலைபேசியை சாத்துகிறார்களே. அவர் எழுத்தைப் படித்தவாறே காரோட்டிச் சென்று விபத்துகள் ஏற்படுத்துகிறார்களே. நாமும் நாற்பது மாதங்களாக எழுதுகிறோம், ஒரு ராக்காயி மூக்காயி கூட நமக்கு ஒரு மடல் கூட எழுதவில்லையே என்பதே அந்த ஏக்கம். 


பதிவர் பாஸ்கருக்கு நான் எழுதிய பச்சடிப் பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டம் என்னை ஜென்ம சாபல்யம் அடைய வைத்தது. மடல் எழுதியிருந்தது நம்ம பிராட் பிட் சம்சாரம் ஏஞ்செலினா ஜோலி. 







ஏன்ஜெலினா ஜோலி said...






கிரி, உங்களது இந்த பதிவு எனது வலியை அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் மீது எனக்கிருக்கிற எனது நேசத்தையும், அதற்காக நான் என் கணவரை விவாக ரத்து செய்து விட்டு வரத் தயாராய் இருக்கிறேன் என்ற செய்தியையும் பல முறை சொல்லியும் உங்கள் பக்கத்திலிருந்து மௌனம்தான் பதிலாக வருகிறது, 

இதை நான் படிக்கும்போது கோல்டன் கேட் பாலத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். கோங்குரா பச்சடியை நீங்கள் சமைத்துப் பரிமாற நான் சாப்பிட முடியாமலிருக்கிற அவலத்தை நினைத்தபோது எனக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது: அப்படியே ஒரு வேன்குருவியைப் போல கோல்டன் கேட் பாலத்திலிருந்து கீழ்நோக்கி பறந்து விடலாமா என்று தோன்றியது. என்ன சொல்கிறீர்கள் கிரி? இனிப்பான செய்தி வருமா, அல்லது அடுத்ததாக அல்வா தருவீர்களா?






கிரி said...






@ அஞ்சலீனா ஜோலி

தற்சமயம் தங்களுக்கு உதவும் நிலையில் நானில்லை.

அல்வாப்பதிவை எதிர்பாருங்கள்.
.
.
.

2 comments:

natbas said...

இது எனக்கான பதிவு அல்ல என்று தெரிகிறது. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். வரட்டா? (அம்மா... அம்மா... ஏ அயோடக்ஸ் கொண்டாப்பா!)

Giri Ramasubramanian said...

சார், எல்லாருக்கும் எல்லாத்துக்கும் பயந்துக்கிட்டே இருந்தா ஒண்ணும் எழுதவே முடியாது. கடையை சாத்திட்டு (இன்னும் அவங்க பாஷைல சொல்லனும்னா - போத்திக்கிட்டு - முதல் எழுத்தை குறில் ஆக்கிக்கங்க) வெளங்காத வேலையை மட்டும் பார்க்க வேண்டியதுதான்.

காரமா எழுதினதுக்கு மன்னிக்கணும்.

Related Posts Plugin for WordPress, Blogger...