சுமாராய் மூன்று மாதங்கள் முன்பு, அலெக்சா தரவரிசையில் எழுபது லட்சத்தில் இருந்த என் தளத் தரவரிசை மதிப்பு இப்போது ஆறு லட்சம் எனும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
பெருமை கொள்ளத்தக்க உயர்வுதான்.
இண்டி பிளாக்கரில் அப்போது நூற்றுக்கு ஐம்பதாக இருந்த மதிப்பெண் எழுபத்து ஆறாக உயர்ந்துள்ளது.
இதுவும் காலரை உயர்த்திக்கொள்ள வேண்டிய விஷயம்தான்.
ஆனால்..... இந்த மூன்று மாதங்களில் இந்த இடத்தை(யே) அடைய நான் அடித்த குட்டிக்கரணங்கள் சிரிப்பை வரவழைக்கிறது. இந்த விளம்பர இடைவேளையில் நான் எழுதிய ஐம்பத்து சொச்ச பதிவுகளில் சுமார் இருபது பதிவுகள் மட்டுமே நேர்மையானவை.
மீதம்....?? பரபரப்பான கிரிக்கெட் பற்றியும், சாருவை சீண்டியும், விஜயின் சுறா பற்றி பரபரப்பாகவும், ஜெயமோகன் அபிலாஷ் லடாயை என் தளத்தின் ஹிட்டுகளுக்கு சாதகமாக்கிக் கொள்ளவும், மேலும் சில சினிமா சிப்ஸ்களை கொரிக்கத் தந்தவாரும் என எழுதியிருக்கிறேன்.
இடையே ஒரு பதிவர்கள் கூட்டத்திற்குச் சென்றிருந்த போது அங்கே வந்திருந்த சக பதிவர்களில் மிகச்சிலர் தவிர்த்து பலர், தமது வலைமனையின் தரவரிசை இப்படி, தினசரி வாசகர் வரவு இத்தனை என புள்ளியியல்களைத் தந்த வண்ணம் இருந்தனர். தாம் என்ன எழுதுகிறோம் என்பது பற்றிய தகவல்களை ஒரு சிலரே தந்தனர். மூன்று மாதங்கள் கழித்து இன்று யோசித்துப் பார்த்தால் நானும் அந்த மந்தையில் சேரும் நிலையில்தான் கிட்டத்தட்ட இருக்கிறேன்.
இதில் வருத்தம் கொள்ள ஏதுமில்லை என்றாலும், திரும்பிப் பார்க்கையில் கிடைக்கும் திருப்தி கிடைக்கவில்லை.
சரி, அடுத்த மூன்று மாதங்களுக்கு என்ன திட்டம்....??
முடிந்த மட்டில் நேர்மையின் அருகிலேயே நிற்க ஆவலுறுகிறேன். பார்க்கலாம் எந்தப் பக்கம் சாய்கிறேன் என்று.
3 comments:
மேலே... மேலே... மேலே... கலக்குங்க!
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நீங்கள் மக்களின் நாடியை பிடிச்சு அவங்களுக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு கண்டு பிடிச்சிருக்கீங்க. நல்ல ஆய்வுதான். இனிமேல் ஆரோக்கியமான விஷயங்களை விரும்புற வகையிலே பதிவு பண்ணுவீங்கன்னு நம்பிக்கை எனக்கு இருக்கு.
என்ன ஒரு கேவலமான பிழைப்பு அன்பரே. இதற்கு ... வேண்டாம் நான் என் நாகரிகத்தை கடைபிடிக்கிறேன்.
இப்பிடி கும்மி அடிப்பதற்கு பால்டால் விழுங்கலாமே! யாரு அது நட்பாஸ். நட் கழன்றவரோ? ஈனாம்பேச்சிக்கு மரப்பாச்சி நட்பு.
Post a Comment