Showing posts with label மரபுக்கவிதை அல்ல. Show all posts
Showing posts with label மரபுக்கவிதை அல்ல. Show all posts

Sep 25, 2015

உன்னுதும் என்னுது

திருப்பதி கோயிலு
முருகன் கோயிலா
இருந்துச்சுதாம்.
தாஜ்மஹால் உள்ற
சிவங்கோயில்
உண்டாமாம்.
ஒகேனக்கலு பரிசலெல்லாம்
கர்நாடக கவுடாவுதாம்.
கோயமுத்தூரு ரயில்வண்டி
பாலக்காட்டுக்கு பாத்தியதையாம்.
மாலத்தீவு சிங்களனுதாம்;
காஷ்மீரு கராச்சிக்காம்...

என்ன நியாயத்துல
சேர்த்தி மச்சின்னு
இத்தையெல்லாம்
லிஸ்ட்டு போடுறான்
ஹாஸ்டலு தோஸ்த்து
ஹரிஹர சொப்ரமணி.

"மச்சி! என் ஜட்டியை
நீ மாத்திப்
போட்டுங்குறியா பாருடா"
பாத்ரூம்லர்ந்துனு
கொரலுட்றான் பால்டு பளநி.

Related Posts Plugin for WordPress, Blogger...