சமீபத்தில் நண்பர் ஒருவர் ஜெயமோகனின் பழைய கோப்பிலிருந்து ஒரு இடுகையை எனக்குப் படிக்க இணைப்பை அனுப்பியிருந்தார். அதன் தலைப்பு....
நீங்களும் புதுக்கவிதை எழுதலாம்
ஜெயமோகனை விமரிசிக்குமளவு எனக்கு பப்பு இல்லாவிடினும், சமீபத்தில் படித்த ஒரு புதுக்கவிதையைப் பற்றி....
படித்தது தினமலர் வாரமலரில்.
பின்னால்!
* பரிதாபமாக இருக்கிறது...
லஞ்ச ஊழல் செய்து,
தலை குனிந்து,
முகம் மூடி...
* காவலர் துணையுடன்
அழைத்துச் செல்லப்படும்
அரசு அதிகாரிகளைக்
காணும்போது...
* கட்டுக் கட்டாகப் பணம்
நகை நட்டுக்கள்...
சொத்து சுகம்,
பங்கு பத்திரங்கள்,
வாகனங்கள்...
* மனைவிக்குத் தெரியாமல்
இத்தனையையும்
பதுக்கி வைத்திருக்க முடியாது
வீட்டிற்குள்...
* பேராசை... ஆடம்பரம்
ஆணவம்... துணிவு
இவைகளால் ஆடவரைத்
தூண்டுவதும் பெண்கள்தான்...
* ஆண்களின் வெற்றிக்குப்
பின்னால் பல பெண்கள்...
தோல்விகளுக்குப்
பின்னாலும் சில
பெண்கள்!
இந்தக் கவிதைக்கு (!!!) சிறப்புப் பதிவாக அங்கீகாரம் தரப்பட்டு ருபாய் 1250 பரிசு வேறு. என்ன கொடுமை ஆண்டவா...!!! பெண்ணினக் காவலராக தன்னை வரித்துக் கொள்ளும் அந்துமணி சார்....உங்க மேற்பார்வைல வர்ற வாரமலருக்கு இது தேவையா?