Showing posts with label Techno. Show all posts
Showing posts with label Techno. Show all posts

Mar 17, 2010

உபயோகம் கொள்(ளை)






டெக்னோ உலகில் உங்களுக்கு என்ன தகவல் வேண்டும்?

இணைய மென்பொருள்கள்? - உண்டு
விண்டோஸ் பற்றிய புதுப் புது தகவல்கள்? - இருக்கு
ஆன்லைன் ஆப்லைன் கேமிங் குறித்த தகவல்கள்? - இருக்கு சார்!
போட்டோஷோப் உபயோகிக்க டிப்ஸ்? - தருகிறார்கள்.
ட்விட்டர் / பேஸ்புக் உபயோகக் குறிப்புகள் - நிறைய உண்டு
MAC ./ Linux தகவல்கள்? - படிக்கலாம் அய்யா!
மொபைல் மென்பொருட்கள் பற்றி? - விரிவான தகவல்கள் தரப்படும்

எல்லாம் எங்கேன்னு கேட்கிறீர்களா? makeuseof இணையதளத்திற்கு சென்று பாருங்கள்.

இன்னும் வேறு என்ன வேண்டும் உங்களுக்கு...  இணையம், மென்பொருட்கள், கம்பயூட்டர் சம்பந்தப்பட்ட தகவல்கள்?

இணைய தகவல் தொழில்நுட்பத்தில் என்ன புதுசு, டெக்னோ உலகில் சுடச்சுட என்ன செய்தி உலவுகிறது, புதியதாய் என்ன சாப்ட்வேர் அல்லது அப்ளிகேஷன் வந்துள்ளது அதன் மதிப்பு மரியாதை என்ன என அக்குவேறு ஆணிவேராக அலசலாம்.

தினமும் குறைந்தது ஐந்து டெக்னோ இணையதள அறிமுகங்கள் கிடைக்கின்றன. கல்வி சம்பந்தப்பட்ட தளங்கள் குறித்த பரிந்துரைகள் தருகிறார்கள், அப்பாவுக்கு கிரீட்டிங் கார்டு செலக்ட் செய்ய சிறந்த தளங்களைப் பட்டியல் இடுகிறார்கள், சிறப்பாகப் புகைப்படம் எடுக்க டிப்ஸ் தருகிறார்கள், எக்ஸ்செல்லில் கிராப் போடும் முறை குறித்து விரிவாக விளக்குகிறார்கள்....இப்படி பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

இத்தளத்தைத் தொடர்ந்து படித்து வருவதால் சில டெக்னோ புலிகளிடமே சவடால் விடுமளவு நமக்கு அறிவு வளர்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

என் பரிந்துரை: இந்த தளத்தை google reader போன்ற RSS feed reader மூலம் தொடர்ந்து வருதல் நலம்.

இணையதள முகவரி: http://www.makeuseof.com/
RSS இணைப்பு: http://feedproxy.google.com/Makeuseof

Mar 15, 2010

இந்த வார டெக்னோ டிப்ஸ்

WiFi தொழில்நுட்பம் பற்றி......


Courtesy: http://mytamilpeople.blogspot.com


தற்காலத்தில் Wireless Network மிகவும் பிரபலமடைந்து வருகிறது, Laptops, PDA Phone போன்றவற்றிலும், அலுவலகங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. பழைய முறையான Wired Network-கை காட்டிலும் இது சுலபமான முறையாகும். Installation and Configuration போன்றவை மிகவும் சுலபமாக செய்யலாம்.

இந்த Wireless Network - WiFi அல்லது 802.11 Network என அழைக்கப்படுகிறது. கீழ்கண்ட படம் ஒரு WiFi Network - ஐ விளக்குகிறது,




Wireless Network-ஆனது, TV, Radio மற்றும் Cell Phones போல Radio Waves எனப்படும் ரேடியோ அலைகளை பயன்படுத்தி வேலை செய்கிறது. இதை தொழில்நுட்ப சொல்லில் Two Way Radio Communication என அழைக்கலாம். இதன் தகவல் எல்லை 100 Meters வரை இருக்கும்.

ஒரு கம்ப்யூட்டரில் உள்ள Wireless Network Adapter அருகில் உள்ள Wireless Access Point- உடன் எப்பொதும் தொடர்பில் இருக்கும், அது Computer Signal-களை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக Wireless Access Point அல்லது Router-க்கு அனுப்பி வைக்கிறது, பின்னர் Router ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) பின் internet-உடன் தொடர்பு கொள்கிறது. அதேபோல், Internet- இல் இருந்து தகவல்களை பெற்றபின் அதை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக கம்ப்யூட்டரின் Wireless Network Adapter-க்கு அனுப்பிவைக்கிறது. Wireless Network Adapter ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) திரையில் நமக்கு காண்பிக்கப்படுகிறது.

இந்த Radio Signal, மற்ற Radio Signal-களைவிட முற்றிலும் வேறுபட்டது, இதன் அலைவரிசை 2.4 GHz - 5 GHz ஆகும், இது மற்றவற்றைவிட கூடுதல் ஆகும், இந்த கூடுதல் அலைவரிசை அதிகபடியான தகவல்களை Transmit செய்ய உதவுகிறது. கீழ்கண்டவை 802.11 Network Standard-ன் வகைகள் ஆகும் ;

802.11a - இதன் அலைவரிசை 5 GHz வரை, வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது. இது orthogonal frequency-division multiplexing
(OFDM)  என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Radio Signal-களை பல Sub-Signal-களாக பிரித்து கையாளுவதால் தகவல் இழப்பின்றியும் நல்ல வேகத்துடனும் இயங்குகிறது.

802.11b - இதன் அலைவரிசை 2.4 GHz வரை, வினாடிக்கு 11 Mbps வரை மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இது complementary code keying
(CCK) modulation என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

802.11g - இதன் அலைவரிசை 2.4 GHz வரை, ஆனால் வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இதுவும் orthogonal frequency-division
multiplexing (OFDM) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.

802.11n - இதுவும் 802.11g Network போலேதான், ஆனால் இதன் வேகம் 802.11g - ஐ விட மூன்று மடங்கு அதிகம், தோராயமாக 140 Mbps. இது Multiple Input, Multiple Output
(MIMO) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.

பொதுவாக நாம் பயன்படுத்தும் Wireless Network - க்கு ஒரு பெயர் உண்டு, அதை - SSID (service set identifier ) எனபர். பொதுவாக இது Wireless Router - இன் தயாரிப்பாளரின் பெயரிலேயே இருக்கும், வேண்டுமானால் இதை நாம் மாற்றி கொள்ளலாம். ஒவ்வரு Wireless Router-க்கும் ஒரு Channel இருக்கும், இந்த Channel - ன் அடிபடையிலேயே தகவல் பறிமாற்றம் நடைபெறும். ஒருவேளை நாம் இரண்டு Wireless Router-களை பயன்படுத்தினால் இரண்டிற்கும் வேறு வேறு Channel-களை பயன்படுத்தவேண்டும், இல்லையென்றால் தகவல் பறிமாற்றத்தில் சில குறைபடுகள் ஏற்படும்.

மற்றும், நம்முடைய Wireless Router - களை Secure Mode - லேயே Configure செய்து வைக்கவேண்டும், இல்லையென்றால் வெளியார்கள் நம்முடைய Network-ஐ தவறாக உபயோகிக்கக்கூடும்.

WiFi Protected Access - WPA, Wired Equivalency Privacy - WEP போன்றவை Wireless Security -ன் சில வகைகள் ஆகும்.


You may follow the author's (Ravindar) Tech blog in English @ http://technologynewscorner.blogspot.com/

Feb 1, 2010

இந்த வார டெக்னோ டிப்ஸ்

டெக்னோ டிப்ஸ் நிறைய படிக்கிறேன். அவற்றில் தேர்ந்தெடுத்து உங்களுடன் அவ்வப்போது பகிர்ந்துகொள்கிறேன். இப்போ சாம்பிளுக்கு ஒண்ணு:

YouTube-ல் டவுன்லோட் செய்ய எளிய வழி:

எந்த யு–ட்யூப் தளத்திலிருந்து வீடியோ படம் வேண்டுமோ அங்கு செல்லவும். இயக்கிப் பார்த்து அது தான் உங்களுக்குத் தேவையா என உறுதி செய்து கொள்ளவும்.

Jan 22, 2010

facebook - RSS feed வழியாக


உங்க ஆபீஸ்ல facebook உபயோகிக்க தடா'வா? அப்போ நீங்க feed வழியா facebook அப்டேட் எல்லாம் படிக்கலாம்.

எப்படி? கீழே குடுத்திருக்கறதை படிங்க....அப்படி....!!



You have to subscribe to three or four different feeds.
  1. Posts: Find the Posts feed by going to http://www.facebook.com/posted.php. On the upper right of the page is a gray box, and at the bottom of that box is a link entitled "My Friends' Links" with the RSS logo next to it. Copy that URL. Subscribe to it in your feed reader. This is the RSS URL for any links and (external) images that your friends post.
  2. Notes: Find the Notes feed by going to http://www.facebook.com/notes.php and repeating the above. This is the RSS URL for things that your friends post via the "Notes" app, which is (I guess) the more blog-like way of posting long things to Facebook.
  3. Notifications: Find the Notifications feed by going to http://www.facebook.com/notifications.phpand repeating the above. This is the RSS URL for things like "so-and-so commented on your status". You might not care to subscribe to this one because you can get all of these kind of notifications in email.
  4. Status Updates: This is the RSS URL for the "What are you doing?" Twitter-like part of Facebook. This is the one you probably care about, and it is trickier, because Facebook no longer links to the feed URL! Nice one guys. You have to construct this URL by editing one of the above URLs. E.g., take the "Notes" URL and change the part of the URL that says"friends_notes" to "friends_status". Keep the parts of the URL before and after that, including the magic numbers at the end.


நன்றி: http://jwz.livejournal.com/1144527.html

Jan 5, 2010

ninite.com - ஒரே பொட்டலம்

நன்றி:  http://pkp.blogspot.com

புதுக் கணிணி அல்லது மடிக்கணிணி வந்ததும் அதில் அடிக்கடி தேவைப்படும் அத்தியாவசியமான இலவச மென்பொருள்களை நிறுவுவது ஒரு தனி வேலை. அடோபி பி.டி.எப் ரீடர் முதல் பயர்பாக்ஸ், VLC பிளயர் என பல ஒன்றன் பின் ஒன்றாக நிறுவ வேண்டியிருக்கும். இந்த மென்பொருள்களையெல்லாம் ஒரே பொட்டலமாக்கி தரும் வேலையை http://ninite.com/செய்கின்றது. இங்கு போய் உங்களுக்கு பிடித்தமான மென்பொருள்களை தேர்வு செய்து ஒரு பொட்டலமாக்கி வைத்துக்கொண்டால் அடுத்த புதுக்கணிணியில் இந்த அபிமான மென்பொருள்களையெல்லாம் ஒரே சொடுக்கில் நிறுவிவிடலாம். அடிக்கடி ஃபார்மேட் செய்பவர்களுக்கும் அல்லது புதுக்கணிணிகளை தினம் தினம் கையாள்பவர்களுக்கும் இம்மென்பொருள் உதவலாம். ஏற்கனவே புதுக்கண்ணியோடு வரும் குப்பை மென்பொருள்களையெல்லாம் ஒரே சுடுக்கில் நீக்க PC Decrapifier எனும் மெனும்பொருளை பற்றி "புதுக் கணிணிகளுடன் வரும் குப்பைகள்" எனும் பதிவில் பேசியது நினைவிருக்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...