Jan 5, 2010
ninite.com - ஒரே பொட்டலம்
நன்றி: http://pkp.blogspot.com
புதுக் கணிணி அல்லது மடிக்கணிணி வந்ததும் அதில் அடிக்கடி தேவைப்படும் அத்தியாவசியமான இலவச மென்பொருள்களை நிறுவுவது ஒரு தனி வேலை. அடோபி பி.டி.எப் ரீடர் முதல் பயர்பாக்ஸ், VLC பிளயர் என பல ஒன்றன் பின் ஒன்றாக நிறுவ வேண்டியிருக்கும். இந்த மென்பொருள்களையெல்லாம் ஒரே பொட்டலமாக்கி தரும் வேலையை http://ninite.com/செய்கின்றது. இங்கு போய் உங்களுக்கு பிடித்தமான மென்பொருள்களை தேர்வு செய்து ஒரு பொட்டலமாக்கி வைத்துக்கொண்டால் அடுத்த புதுக்கணிணியில் இந்த அபிமான மென்பொருள்களையெல்லாம் ஒரே சொடுக்கில் நிறுவிவிடலாம். அடிக்கடி ஃபார்மேட் செய்பவர்களுக்கும் அல்லது புதுக்கணிணிகளை தினம் தினம் கையாள்பவர்களுக்கும் இம்மென்பொருள் உதவலாம். ஏற்கனவே புதுக்கண்ணியோடு வரும் குப்பை மென்பொருள்களையெல்லாம் ஒரே சுடுக்கில் நீக்க PC Decrapifier எனும் மெனும்பொருளை பற்றி "புதுக் கணிணிகளுடன் வரும் குப்பைகள்" எனும் பதிவில் பேசியது நினைவிருக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
useful information. Invaluable, actually.
thank you.
I mailed this to some friends.
Post a Comment