ஆப்கானிஸ்தானிய அம்மாவுக்கும் பாகிஸ்தானிய அப்பாவுக்கும் பிறந்து, இந்தியரில் ஒருவர்களாய் தம்மை ஒப்புக்கொள்ள மறுக்கும் MNS, சிவசேனா புகழ் மும்பையில் வளர்ந்த குஷ்புவிடம் நாம் அவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும். இருந்தாலும் குஷ்புவின் இந்திய வரலாற்று ஞானம் கண்டிக்கத்தக்கது.
எனினும் என் ஆதர்ச நாயகி இல்லை என்றாலும், எனக்குப் பிடித்த ஒரு நடிகை குஷ்பு. எனக்கு அவரைப் பிடித்ததற்கு, அவர் நடிப்போ அல்லது என் பள்ளிப் பருவத்தில் ஒரு "never before never after" சூப்பர் ஸ்டார் கதாநாயகியாக அவர் வலம் வந்ததோ காரணம் அல்ல. அவர் எந்த விஷயத்தையும் நேரிடையாக கையாள்வதை நான் கண்டிருக்கிறேன். அவர் வயது குறித்து கேட்டால், "ஆமாம் எனக்கு இப்போ 23 வயசு" என அவர் நடிப்பின் உச்சியில் இருக்கையில் வெளிப்படையாக தெரிவித்தவர் அவர், அந்தப் பொழுதுகளில் யாரும் செய்யாதது இது. மேலும் பின்னாட்களில், அவர் சுந்தர்.சியை மணந்த பிறகு, பிரபுவுடனான சின்னத்தம்பி காலத்தைய உறவு பற்றிய கேள்விக்கு, "அது ஒரு வயசு, அந்த வயசுல வர்ற தடுமாற்றம் சகஜம்தானே", என வெளிப்படையாக பேசியவர் குஷ்பு. இந்த உலகம் இப்படித்தான் இயங்குகிறது, அதை வெளிப்படையாய்ச் சொல்பவர்கள்தான் சிலர்.
தமிழ் தெரிந்த பெண்களே ஏதோ வடநாட்டில் பிறந்து, வெளிநாட்டில் வளர்ந்தது போல பேசுகையில், நான் மேற்சொன்ன வம்சாவளியில் வந்த குஷ்பு அட்சர சுத்தத்திற்கு சற்று அருகே தமிழ் பேசுவது, எனக்கு அவரைப் பிடித்ததற்கான முக்கியமான காரணம்.
எனினும் அவர் ஜாக்கெட்... அயம் சாரி... ஜாக்பாட் நிகழ்ச்சிக்காக அணிந்துவரும் ஜாக்கெட்டுகள் கொஞ்சம் ஓவருங்கோ!
அப்பூ எப்பூ குஷ்பூ.... - வாலியின் புகழாரத்தில் உதிர்ந்த பூக்கள்
.
.
.
அப்பூ எப்பூ குஷ்பூ.... - வாலியின் புகழாரத்தில் உதிர்ந்த பூக்கள்
.
.
.
2 comments:
குஷ்புவும் கற்பும்
----------------------
ஏன் சார், குஷ்பு வெளிப்படையாய் பேசிகிறார் என்ற நீங்க குஷ்பு கற்பை பற்றி சொன்னதை பத்தி பதிவில பெரிசாஒண்ணும் எழுதவில்லையே ...
ஏன் ?
@ Subu,
உங்கள் வருகைக்கு நன்றி. கருத்துப் பகிர்விற்கு மிக்க நன்றி.
கற்பில் சிறந்தவள் கண்ணகியா அல்லது மாதவியா என்ற வேலையற்ற பட்டிமன்றம் நடத்தும் ஊரில் கற்பு பற்றிப் பேசுவது சரியில்லை என்ற என் முதல் எண்ணம், மேலும் அது பா.ம.க. உள்ளிட்ட உட்டாலக்கடி உதிரிக் கட்சிகள் நடத்திய cheap publikutty நாடகம் என்பது முக்கியக் காரணம்.
Post a Comment