Jan 16, 2010
சீனாவும் கூகுளும்
உலகமே இந்த விஷயத்தப்பத்திக் கதைக்கும் போது, நான் மட்டும் எதுக்கு சும்மா இருக்கணும்? இதோ என் பங்குக்கு.....
சீனாவின் (அல்லது சைனாவின்) கூகிள் விஷய அலம்பல்கள் குறித்த விவாதங்கள், கேள்விகள், விசாரிப்புகள் உலகெங்கும் பலவண்ணமாய் இருக்கிறது. அமெரிக்கா கிடைத்த வாய்ப்பை சரியாய்ப் பயன்படுத்தும் விதமாய் எகிறுகிறது. கம்யூனிசத்தின் எதிர் வீட்டுக்காரர்கள் ஏதோ கூகிள் சீனாவை விட்டு வெளியேறினால் அடுத்த நொடி சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும், சீனாவின் முன்னேற்றம் எல்லா அளவிலும் தடைப்பட்டு அது ஒரு அடங்கின ஒடுங்கின நாடாகிவிடும் என்கிற அளவிற்கு கற்பனா விவாதங்கள் புரிந்த வண்ணம் இருக்கின்றனர்.
இதில் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் ஒன்றே ஒன்றுதான். கூகுளுக்கு முன்னாலும் சீனா இருந்தது, கூகிள் வந்த பின்னும் இருந்தது, கூகிள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினாலும் சரி, மண்ணோடு மண்ணாகி மட்கிப் போனாலும் சரி சீனா இருக்கும். மாமியார் ஒடச்சா மண்குடம், மருமக ஒடச்சா பொன்குடம் என்ற கதையாய், தனக்கு கொஞ்சமும் ஒத்து வராத நாட்டிலிருந்துதான் கூகிள் வெளிவரப் பார்க்கிறது. இதே போன்றதொரு விஷயம் இந்திய விஷயத்தில் நடந்திருந்தால் அதில் அவர்களின் நடவடிக்கையை நாம் பார்த்திருக்க வேண்டும்.
சரி சரி... நான் இதுக்கு மேலே எழுத விரும்பலை. சீனா போற வாய்ப்பு நமக்கு இல்லாம போனாலும், நாளபின்ன கூகிள்-ல வேலை செய்ய வேண்டிய தேவை இருக்கலாம். இத்தோட நிறுத்திக்கறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment