வடசென்னை மனிதர்கள் வெளிப்பார்வைக்கும் அவர்களது செய்கைக்கும் பார்த்தால், பொதுவாக ஒருமாதிரி முரட்டுத்தனமானவர்கள். ஆனால் பழகிய பின்தான் புரியும் அவர்கள் எந்த சூழலிலும் உங்களை விட்டுக்கொடுக்காது உங்களுக்கு உதவ வரும் மிகமிக இளகிய மனது கொண்டவர்கள். அதற்குமுன் நான் விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் வளர்ந்தவன். விழுப்புர சுற்று வட்டாரங்களில் பேசப்படும் தமிழ் எனக்குத் தெரிந்த வரையில் எந்தக் கலப்பும் இல்லாத, வட்டாரமயமாகாத ஒரு பொதுத்தமிழ். வந்த புதிதில் சென்னைத் தமிழை உள்வாங்க நான் சற்றே மூச்சு வாங்கினேன்.
சென்னை வந்தபின் தெரிந்து கொண்ட தமிழில் சில வார்த்தைகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். நீங்கள் சென்னைக்கு வருகையில் இப்பட்டியல் உதவலாம்.
அப்பாலிகா, குந்து, கீசிடுவேன், துன்னுட்டியா, கீது, கீறேன், இஸ்கூல் போன்ற வார்த்தைகளை நம் சினிமாக்கள் முன்னமே பிரபலம் செய்திருப்பதால் நான் அவற்றைத் தவிர்த்திருக்கிறேன்.
வார்த்தை | அர்த்தம் | உப தகவல் |
ஈத்து / இஸ்து | இழுத்து | இஸ்து கட்டுபா |
தொண்டி | ஓட்டை | மண்டைல தொண்டி போட்டுடுவேன் |
ஜில்லி | சின்ன ஓட்டை | |
ஜிம்பு / ஜிம்புதல் | குதித்தல் / திமிருதல் | சொம்மா ஜிம்பராம்பா |
கோட்டுவா | கொட்டாவி | |
காராமணி | தட்டைப்பயிறு | |
பெங்களூர் கத்திரிக்கா | சௌ சௌ | |
கருணைக்கிழங்கு | சேனைக்கிழங்கு | |
பிடி கருணை | கருணைக்கிழங்கு | |
சேம்பு | சேப்பங்கிழங்கு | |
ஆல் வள்ளிக்கிழங்கு | சக்கரை வள்ளிக்கிழங்கு | |
ஊறுகா | துவையல் | ஊறுகாயும் ஊறுகாயே |
கோய்ந்தோ | கோவிந்தோ | |
குமுறு | அடி பின்னுதல் | நல்லா குமுறு குமுறுன்னு குமுறிட்டாங்கடா |
போதுமா? மேலும் தகவலுக்கு http://en.wikipedia.org/wiki/Madras_Tamil (அங்கே கொஞ்சம் பச்ச பச்சையா சில விஷயங்கள் இருக்கும். தணிக்கை பண்ணி படிங்க)
5 comments:
chennai senthamizh la evalavu nalla nalla vaarthai irukku - sOmaari, bEmaani, kaidhey, kasmaalam, biskOthu, bajaaru, nijaaru, dagilu, dhandaa, usaaru nnu adhu vittu puttu, kathirikka, koda molagaa nnu list pottu vechirukkaan.... podaaaaaaaaaaaan..... appaalikka un kaila micha ketta vaarthaya solren.... :-)
I avoided them as....அப்பாலிகா, குந்து, கீசிடுவேன், துன்னுட்டியா, கீது, கீறேன், இஸ்கூல் போன்ற வார்த்தைகளை நம் சினிமாக்கள் முன்னமே பிரபலம் செய்திருப்பதால் நான் அவற்றைத் தவிர்த்திருக்கிறேன்.
http://en.wikipedia.org/wiki/Madras_bashai
Laadu labbaku dhas or Laadu langotta , Used to refer some who thinks that they are always right.here Laadu refers to 'Lord'.
ஹஹ்ஹா
நன்றி ராம்ஜி!
Post a Comment