Jan 1, 2010

வெறுங்கை வேடன் - Some rare facts about Tirumala Balaji




சமீபத்தில் திருமலை வேங்கடாசலபதி குறித்த சில அறிய தகவல்களை ஒரு வலைப்பதிவில்  படித்தேன். தகவல்கள் பலவும் அரியவகை எனினும், அவற்றில் குறிப்பிட்ட சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.



ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
If you want to offer Oblations to Lord, you have to wait for three years after paying the money. 

திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.
The paintings in the temple are 300 years old.

சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது.
On sivarathri day a festival called "Kshethra paalikaa" is observed. The silver idol which is meant to take to procession, is decorated with diamond sacred ash, and taken out in procession around the temple.

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு
வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத
மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர்,
மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது
பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார். Arunagiri Naadhar who sang "Thiruppugazh" has visited Thiruppathi, He is a contemporary of Annamayya. Muthuswamy Dhikshiter, one of the Music Trinity, who practiced "Sri Vidhya" had composed hundreds of songs on many deities, and his "Seshachala Naadham" in "Varaali" raaga is on this Lord.

ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.
The temple tree of Lord Venkateswara is tamarind tree.

எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில்
ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.
Any God's statue with grace and tranquility will also have at least one weapon. But, in the statue of Lord Venkateswara you will not find any weapon. He is considered "devoid of any weapon" That is why he was praised in our olden days literatures, as a "hunter with empty hand"

1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில்
முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை
பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம்
நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கி றார்.
In the year 1781 the British Cannon army was camping in a place called "Thakkolam". One Mr. Levellian, who belonged to 33rd wing was injured very badly. He prayed to Lord for his cure and after he got well he sent his offering through a Hindu soldier.

திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த
ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.
Considering the divinity of Thirumalai, No English man went to Thirupathi from 1759 to 1874. Some christian preists wanted to place a cross in the mountain, But, even British Commanders did not give permission for the same. They wanted the oblation and poojas should be performed in the temple. They believed and feared, if not, their ruling will be affected.

திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.
The skirt to Alarmel mangai is made of cotton at a place called Gadwaal. The weavers of this dress are from a community called Chenchu with lot of devotion. Since this dress is in direct touch with the deity's idol, the weavers will not consume meat or alcohol and they bathe thrice a day. To perform the oblations on Friday, all scented ingredients are ground on the previous night in a special room meant for this purpose. Saffron is also added for oblations. The devotees from abroad send regularly scented materials worth of Rs.50000?- per week

ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள்
விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று
வந்துள்ளது.
Lord Venkateswara is treated as "Ambaal" for four days, Vishnu for two days and as Lord Siva for a day in a week, for the purpose of Pooja.

ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.
The water from oblation of Lord,is led by pipes into the temple tank. Since it is considered holy water, the devotees are required to take bath by standing in the water. and take the water in both the hands and leave it back into the tank. This is considered as the special worship.


திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள்
திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ
ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.
The garlands worn by Sri Aandaal from Thiruvilliputhtur temple are brought to Thirupathi and placed on the God. Sri Aandaal worshipped Balaji with devoton as her deity.

திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன்(பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.
There are 1180 carvings on stone. In this 236 belong to Pallava, Chola and Pandiyas, 169 to chaalukyaas. 229 toKrishna Dhevaroyar, 251 to Achudha royar, 147 to Sadasivaroyar and 135 to Kondai veedu kings. During the period between Nandh varma Pallava of 830 A.D and 1909, there are only 50 engravings are of Telugu and Kannada language and the rest of 1130 carvings are only in தமிழ்

2 comments:

natbas said...

Great.

I don't know if you are already aware of this, but there is an interesting description about how the sanctum is cleaned: it is in Deivathin Kural.

what they basically do is, take finer and finer clothes to wipe the dirt, till the cloth itself looks unblemished.

Please look it up.

It is interesting.

Bhaski said...

Thanks for adding the English Translation as well.... otherwise it takes me days to read the tamil contents.....

Related Posts Plugin for WordPress, Blogger...