ஓரிரவில் ஒரு பாட்டில் குவாட்டரைத் தேடி சிவாவும் எஸ்.பி.சரணும் இடையில் சேரும் லேகாவும் அலைந்து திரிவதுதான் சினிமாவின் ஒன் லைனர்.
இந்தப் படத்தைப் பற்றி சத்திய சத்தியமாக எந்த நேர்மறை விமரிசனங்களும் தமிழ் இணைய உலகத்தில் உலா வர வாய்ப்பே இல்லை என்று தெளிவாகத் தெரிவதால், படத்தில் நான் கண்டுணர்ந்த சில ப்ளஸ்களை இங்கே பட்டியலிடுகிறேன். பின்னர் இன்னபிற விமரிசனங்களையும் வாசித்து விட்டு நீங்க ரிஸ்க் எடுக்கவும்.
படத்தை முற்றிலும் புதிய பரிமாணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் புஷ்கர்-காயத்ரி. ஓரிரவுக் கதை, ஒன்றுமில்லாத கதை. தங்கள் முயற்சியில் அவர்களுக்கு வெற்றியா என தமிழ் கூறும் நல்லுலகம்தான் சொல்ல வேண்டும்.
நான்கே கதாபாத்திரங்கள், இவர்களை வைத்து வழி நெடுக துணைப் பாத்திர சப்போர்ட்டை வைத்து படம் பண்ணுவது நிச்சயம் சேலஞ்சான விஷயம்தான்.
அடுத்ததாக ஆனால் மிக முக்கியமாக சிவாவின் வழக்கமான டைமிங் டயலாக் டெலிவரி. "ஜெய் பாலகிருஷ்ணா" எனத் தொடங்கும் இடத்திலிருந்து "உங்க ஊருக்குத்தாங்க போறேன்", என ஷேக்குகளிடம் அவர் சொல்லிக் கொண்டு விடை பெரும் தருணம் வரை அவர் பலத்தில் படம் தொடங்கி முடிகிறது.
அந்த லைட்டிங், அது படத்தின் தனி ஹைலைட்.. வாவ் போட வைக்கிறது படத்தின் லைட்டிங்சென்ஸ். கதாபாத்திரத்தைச் சுற்றி உள்ள விஷயங்களை மறைத்து வைத்துவிட்டு பேசும் பாத்திரத்தை டேபிள் லாம்ப் ஸ்டைலில் வெளிக்காட்டும் அந்த லைட்டிங் சென்ஸை தனிப் பாத்திரமாக்கியிருப்பது திரை இயக்கனர்(கள்) மற்றும் ஒளி இயக்குனர் நீரவ்ஷா மூவரின் சூப்பர் டச். சென்னை இரவின் இருட்டு வர்ணங்களை இருட்டினூடே வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இந்த உத்தி.
சிவாவிற்கு எஸ்.பி.சரண் தரும் பக்க பலம். மனிதர் புதியதாய் ஏதும் செய்துவிடவில்லை எனினும், "சேமியா ஐஸ் இருக்கா? பிங்க் கலர்." என்பது போன்ற இடங்களில் குபீரெனச் சிரிக்க வைக்கிறார்.
ஜான் விஜய் - பரட்டை ப்ரின்ஸ் பாத்திரத்தில் மனிதர் கலக்கு கலக்கென்று கலக்குகிறார் (அப்பா வேடத்தில் எம்.ஆர்.ராதாவை இமிடேட் செய்து இவர் இரிடேட் செய்வது தனி). தமிழ் குணசித்திர, வில்ல ரோல்களில் இவருக்குத் தனி இடம் தயாராய்க் காத்துள்ளது.
படத்தின் பின் பாதியில் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை. குறிப்பாக அந்த கார் சேசிங் காட்சியின் பின்னணி இசைச் சேர்ப்பு அவர் கொண்ட மெச்சூரிட்டியைக் காட்டுகிறது. அந்தக் காட்சியில் காட்டிய நேர்த்தியை அவர் படத்தின் முதல் பாதியில் காட்டியிருந்தால் படத்தை இன்னமும் நிமிர்த்தி நிற்க வைத்திருக்கலாம். சில டைமிங் டயலாகுகள் கூட சில இசை உத்திகளின் சேர்ப்பின்மையால் 'ஜஸ்ட் லைக் தட்' கடந்து சென்றுவிடுகின்றன.
படம் நெடுக போதிய இடைவெளியில் தியேட்டர் சிரித்துக் கொண்டே இருக்கிறது. எனினும் "வ - குவாட்டர் கட்டிங்" ஒரு ஃபுல் மீல்ஸ் இல்லை என்பது படத்தின் பெரிய மைனஸ். மற்ற மைனஸ்களை மற்ற பதிவர்கள் பட்டியலிட விட்டுவிடுகிறேன்.
இப்போதைக்கு என்னிடமிருந்து "அந்தே". மற்ற விமர்சனங்களையும், பாக்ஸ் ஆபீஸையும் காத்திருந்து பார்ப்போம்.
(மைனா திரைப்படம் எப்படி இருக்காம்? அது பத்தியும் எழுதணும்)
.
.
.
4 comments:
நெறைய நெகட்டிவ் விமர்சனங்கள்... இருந்தாலும் நாளைக்குப் பார்க்கிறேன்!!!
// இந்தப் படத்தைப் பற்றி சத்திய சத்தியமாக எந்த நேர்மறை விமரிசனங்களும் தமிழ் இணைய உலகத்தில் உலா வர வாய்ப்பே இல்லை //
நிதர்சனம்...
என்னுடைய விமர்சனத்தையும் கொஞ்சம் வந்து படியுங்கள்...
// இந்தப் படத்தைப் பற்றி சத்திய சத்தியமாக எந்த நேர்மறை விமரிசனங்களும் தமிழ் இணைய உலகத்தில் உலா வர வாய்ப்பே இல்லை //
பாஸ்... இங்கே வந்து பாருங்க... ஒருத்தர் பாசிடிவ் விமர்சனம் எழுதியிருக்காரு...
http://apkraja.blogspot.com/2010/11/blog-post_06.html
@ பிரபா
நன்றி நண்பா. இன்னும் 'வ' பதிவு காணலையே உங்க தோட்டத்துல?
@ சிவா
நன்றி. பாத்துட்டு சொல்லுங்க.
Post a Comment