May 18, 2011

கோவை கிருஷ்ணமூர்த்தி - மேலும் சில தகவல்கள்



கோவை கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பற்றி நான் இங்கே எழுதின பதிவு "மனதைத் தொட்டது" என சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். இரண்டு விஷயங்களை அங்கே சேர்க்கத் தவறிவிட்டேன். அவற்றை இங்கே இந்தப் பதிவில் செய்து விடுகிறேன்.

அதற்குமுன் முதலில் பாலாஜி அவர்கள் தன் நினைவலைகளை மீட்டி எழுதின பின்னூட்டம்...

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களை நேராக சந்திக்கவும் அவரது முழு நேர கச்சேரியை கேட்க்கும் பாக்கியமும் எனக்கு அமைந்தது. நான் கேட்ட முதல் கர்நாடக இசை கச்சேரி அது. இன்று வரை  அதுவே எனது கடைசி நேரடி கச்சேரி கேட்க பெற்ற அனுபவமும். 

அவர் எங்கள் வீட்டுக்கு எதிரே அமைந்துள்ள கோவிலுக்கு அன்று பாட வந்திருந்தார். சிறுவனான எனக்கு மிகுந்த வியப்பாக இருந்தது அவரது உருவம். இவர் எப்படி உட்கார்ந்து பாடுவார்? உருன்டு விட மாட்டாரா என்றெல்லாம்  மனதில் கேள்விகள் எழுந்தன. சற்று நேரத்தில் அவர் பாட ஆரம்பித்தார். பெரிய இசை ஞானம் இல்லாவிட்டாலும் அந்த கச்சேரியை என்னால் ரசிக்க முடிந்தது. மிகவும் அருமையாகவும் ஜனரஞ்சகமாகவும் பாடினார். இன்றும் அவரது குரல் என் நினைவலைகளில் நீங்காமல் உள்ளது. 
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு மேல்நிலை பட்டதாரியும் ஆவார். அவர் தன் வாயால் பேனாவை பிடித்து எழுதி, தேர்வு பெற்று பட்டம் பெற்றார். He truly is an inspiration to one and all.
நன்றி பாலாஜி!


இரு சேர்க்கைகள்:

கோவை கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இணையதள முகவரி: http://srkrishnamurthy.com


அவர் பாடிய பாடல் ஒன்றின் காணொளி இணைப்பு.


.
.
.

4 comments:

Arun sankar said...

naanum kovai, thaan.. krisnamoorthy sir veedu engea ullathu..

Giri Ramasubramanian said...

@அருண் ராமசாமி
அவர் வடவள்ளியில் வசிக்கிறார் என நினைக்கிறேன். முகவரி விபரம் வேண்டுமென்றால் விசாரித்துச் சொல்கிறேன்.

Unknown said...

நானும் வடவள்ளி தான்...

Unknown said...

நானும் வடவள்ளி தான்

Related Posts Plugin for WordPress, Blogger...