"ஹப்பாப்பா.... என்னா வெயிலு...என்னா வெயிலு...! போன வருஷத்தவிட மோசமால்ல இருக்கு!", இந்த வசனம் எல்லோர் வாய்களிலும் வருகிறது, எல்லோர் காதுகளிலும் கேட்கிறது. வெயிலை நாம் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் அதன் கடுமையிலிருந்து நம்மை சில வழிமுறைகளில் காத்துக் கொள்ள முடியும்.
தமிழ் பேப்பர் கத்திரிக் குறிப்புகள் வெளியிட்டுள்ளது.
மங்கையர்மலர் இதழ் இந்தமுறை (மே இதழ்) கோடையை வெல்ல சில உணவு வகைகள், பானங்கள் தயாரிக்கும் வழிமுறைகள் அடங்கிய "கூல் சமையல் 64" என்ற இலவச இணைப்பு ஒன்றைத் தந்துள்ளது. கைவண்ணம்: சமையல் மகாராஜா செஃப் தாமு.
ஒரு சாம்பிள் இந்த மோர்க்கஞ்சி. செய்முறையைப் பாருங்கள். வீட்டில் குழந்தைகளைக் குளுமைப்படுத்த ஏற்றது.
மோர்க்கஞ்சி - தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி நொய் - 1 கைப்பிடி, மோர் - 3 கப்,
சாம்பார் வெங்காயம்- 3 (வெட்டியது), பச்சை மிளகாய் - 1 துண்டு, உப்பு -தேவைக்கு.
செய்முறை:
ஒரு அளவு நொய்க்கு இரண்டு அளவு தண்ணீர் என்கிற கணக்கில் நொய்யை நன்றாகக் குழைய வேக விடவும். வெந்த கஞ்சியில் கீறிய பச்சை மிளகாயை கசக்கிவிட்டு, உப்பு, வெட்டிய சாம்பார் வெங்காயம் சேர்த்து மோர் கலந்து குளிரவைத்துக் குடிக்கவும்.
குக்கும்பர் சாலட், ஆரஞ், மாங்கோ க்ரஷ் வகையறாக்களைத் தாண்டி இப்புத்தகத்தில் சுவாரசிய செய்முறைகள் ஜிஞ்சர்-ஹனி டிரிங்க், மோர் ஆகாரம், மேங்கோ - கோகனட் டிலைட், ராகி டிரிங்க்,பெரிய நெல்லி தயிர்ப்பச்சடி, ஃப்ரூட் லஸ்ஸி ஆகியவை.
மங்கையர் மலர் வாங்கி நீங்களும் தினம் ஒரு கூல் ரெசிபி வீட்டில் செய்து வீட்டைக் குளுமை செய்யுங்கள்.
.
.
.
1 comment:
வெயிலுக்கு ஏற்ற பதிவு...
Post a Comment