நியாயமாகப் பார்த்தால் இதை நான் டிவிட்டரிலோ பேஸ்புக்கிலோ ஸ்டேட்டஸாகப் பதிவு செய்ய வேண்டும்- ஆனால் எதையாவது சொல்லிக் கொள்ள வேண்டும் என்றால் இங்கே வருவது பழகிப்போய் விட்டது.
அது தவிர சொந்தமாக சிந்தித்து எதையும் எழுதுவதில்லை என்ற குறை எனக்கே இருக்கிறது- எதற்கெடுத்தாலும் நாலு தரவுகளைக் கொடுத்து அங்கே அப்படி சொல்லியிருக்கிறார்கள், இங்கே இப்படி சொல்லியிருக்கிறார்கள் ஆனால் நான் இப்படி நினைக்கிறேன், அதற்காக அது அப்படியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது ஒரு பிழைப்பா?
அதனால்- ரூம் போட்டு யோசித்தேன் என்று சொல்ல முடியாது, மூலையில் உட்கார்ந்து கொண்டு யோசித்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்- ஏனென்றால் இது அவ்வளவு குட்டியான சிந்தனை- அதை இங்கு ஒரு பதிவாகப் பகிர்ந்து நண்பர்களின் பார்வைக்கு முன்வைக்கிறேன்-
ஒருத்தர் நம்மைப் புகழ்கிறார் என்றால் அவர் நம்மை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம் <ஏன்னா நமக்குத்தான் நம்ம பவுசு தெரியுமே>. அதனால் அவர் மேல் நமக்குப் பரிவு வருவது ரொம்பவே நியாயம்தான். எட்டரை மாத்து பித்தளையை ஒருத்தன் புகழ்ந்தா பித்தாளி பல்லு இளிக்கறது தப்பா என்ன?
ஆனால் திட்டுபவர்கள் நம்மை சரியாகப் புரிந்து கொண்டு பேசுகிறார்கள்- அதனால்தான் அவர்கள் மேல் நமக்கு கோபம் வருகிறது. "கஸ்மாலம் கைதே, நம்மளைப் பத்தின உண்மையை ஊரறியப் புட்டு புட்டு வெக்குதே" என்பதால் நம் கோபமும் <ஒரு வகையில்> நியாயமே. அதே எட்டரை மாத்து பித்தாளியை எட்டி ஒதச்சுப் பாருங்க "டங்"குன்னு சத்தம் வரும். அது கோபத்தின் வெளிப்பாடு. ரொம்ப நியாயமான, இயற்கையான சவுண்டு.
பின்னூட்டங்களில் தஞ்சாவூர் கல்வெட்டு என்ற சொற்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பின்னூட்டக்காரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
3 comments:
கல்வெட்டு....தஞ்சாவூர்....
haa..haa.
என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? :(
இப்படியெல்லாம் பேசினா எப்ப அறச்சீற்றம் வந்து எப்படி நாலு பேரைத் திட்டி நானும் ரவுடிதான்னு ஊருக்குள்ள தலை நிமிந்து நிக்கறது?
மாதவரத்துல இருந்தப்போ நல்லாத்தான் இருந்தீங்க- இனத தென்சென்னை உங்களை சரியான தயிர் வடையா மாத்திடுச்சு :((
எத்தினி நாள்தான் தெரியாத ஆளுங்களையே கலாய்க்கறது. இன்னிக்கி நீங்க போணி
Post a Comment