Showing posts with label என்ன ஒரு சிந்தனை?. Show all posts
Showing posts with label என்ன ஒரு சிந்தனை?. Show all posts

May 14, 2011

நல்லாக் க்கீதே நாயம்




நியாயமாகப் பார்த்தால் இதை நான் டிவிட்டரிலோ பேஸ்புக்கிலோ ஸ்டேட்டஸாகப் பதிவு செய்ய வேண்டும்- ஆனால் எதையாவது சொல்லிக் கொள்ள வேண்டும் என்றால் இங்கே வருவது பழகிப்போய் விட்டது.
அது தவிர சொந்தமாக சிந்தித்து எதையும் எழுதுவதில்லை என்ற குறை எனக்கே இருக்கிறது- எதற்கெடுத்தாலும் நாலு தரவுகளைக் கொடுத்து அங்கே அப்படி சொல்லியிருக்கிறார்கள்,  இங்கே இப்படி சொல்லியிருக்கிறார்கள் ஆனால் நான் இப்படி நினைக்கிறேன், அதற்காக அது அப்படியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது ஒரு பிழைப்பா?
அதனால்- ரூம் போட்டு யோசித்தேன் என்று சொல்ல முடியாது, மூலையில் உட்கார்ந்து கொண்டு யோசித்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்- ஏனென்றால் இது அவ்வளவு குட்டியான சிந்தனை- அதை இங்கு ஒரு பதிவாகப் பகிர்ந்து நண்பர்களின் பார்வைக்கு முன்வைக்கிறேன்-



ஒருத்தர் நம்மைப் புகழ்கிறார் என்றால் அவர் நம்மை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம் <ஏன்னா நமக்குத்தான் நம்ம பவுசு தெரியுமே>. அதனால் அவர் மேல் நமக்குப் பரிவு வருவது ரொம்பவே நியாயம்தான். எட்டரை மாத்து பித்தளையை ஒருத்தன் புகழ்ந்தா பித்தாளி பல்லு இளிக்கறது தப்பா என்ன?

ஆனால் திட்டுபவர்கள் நம்மை சரியாகப் புரிந்து கொண்டு  பேசுகிறார்கள்- அதனால்தான் அவர்கள் மேல் நமக்கு கோபம் வருகிறது. "கஸ்மாலம் கைதே, நம்மளைப் பத்தின உண்மையை ஊரறியப் புட்டு புட்டு வெக்குதே"  என்பதால் நம் கோபமும் <ஒரு வகையில்> நியாயமே. அதே எட்டரை மாத்து பித்தாளியை எட்டி ஒதச்சுப் பாருங்க "டங்"குன்னு சத்தம் வரும். அது கோபத்தின் வெளிப்பாடு. ரொம்ப நியாயமான, இயற்கையான சவுண்டு.


பின்னூட்டங்களில் தஞ்சாவூர் கல்வெட்டு என்ற சொற்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பின்னூட்டக்காரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...