காலந்தோறும் நம்முன் நிற்கும் கேள்வி:
ஈண்டு நாளும் இளமையும் மீண்டில
மாண்டு மாண்டு பிறிதுறும் மாலைய
வேண்டுநாள் வெறிதே விளிந்தால் இனி
யாண்டு வாழ்வது? இடர் உழந்து ஆழ்தியோ.
இதற்கான விடையை வாழ்வினும் பெரிதாய் விளங்கும் காவியங்களே பேச இயலும். நாமே இந்த காவியங்களைப் படித்துத் தெரிந்து கொள்வதைவிட, இவற்றை வாசித்து, இவற்றின் பொருளை அனுபவித்துணர்ந்த அறிஞர்கள் வழி கேட்டறிவதே பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அண்மையில் ஊட்டியில் நிகழ்ந்த திரு ஜெயமோகன் அவர்களின் காவிய முகாம் இவற்றை அறிவதற்கான ஒரு நல்ல துவக்கம். நம் அருமை நண்பரும் தமிழார்வலரும் கல்வித் தந்தையும் கணித வித்தகரும் சிறந்த ஓவியருமான நண்பர்...........- குணமெனும் குன்றேறி அதில் அவையடக்கம் எனும் அடர்மரமொன்றில் அமர்ந்தவர்- இந்த முகாமில் காவியச் சுவையுண்டு திரும்பியிருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
காவிய முகாம் குறித்த அவரது அனுபவக் கட்டுரையை ஓரிரு நாட்களில் பதிப்பிக்க நினைத்துள்ளோம்.
ஆகவே, "வாட்ச் திஸ் ஸ்பேஸ்" எனச் சொல்லி இப்போதைக்குச் சுருக்கமாக முடித்துக் கொள்கிறோம்.
.
.
.<முதல் பகுதி>
No comments:
Post a Comment