"அப்போ நான் புறப்படறேன் அண்ணா"
"சரிம்மா ஜானகி. மகி பட்சணம் குடுத்தாளா?"
"வாங்கிக்கிட்டேன் அண்ணா"
"உமா இருப்பா பாரு, தாம்பூலம் வாங்கிக்கிடு"
"வாங்கிட்டேன் அண்ணா"
"பார்வதி, ஒரு நிமிஷம் இங்கே வா"
"சொல்டா பலராமா"
"இது யாருன்னு தெரியுதா?"
"யாரு?"
"நம்ம சின்னசேலம் ஜானகி"
"யாரு?"
"பூந்தோட்டம்...."
"அட.... அந்த ஜானகியா? அப்டியே ஆளே மாறிப் போயிட்ட"
"நீங்க?"
"நான் உங்க பூந்தோட்டம் வீட்டு பக்கத்துல இருந்தனே"
"ம்ம்ம்ம் எனக்கு சரியாத் தெரியலை. ஒரு வேளை எங்க அம்மாவுக்கு உங்களையெல்லாம் தெரிஞ்சிருக்கும்'னு நினைக்கறேன்"
"இல்லை, உங்க வீட்டுல எனக்கு உன்னைவிட்டா யாரையும் தெரியாது"
"அப்படியா...."
"ஆமா, ஆனா ரொம்பவும் மாறிட்ட நீ. ஆளு அடையாளமே தெரியலையே?"
"என்ன அப்படி பார்க்கறீங்க?"
" என்ன ஒரு மாற்றம். அடியோட மாறிட்டியே, அதைத்தான் பாக்கறேன். இப்போ என்ன வயசாச்சு உனக்கு?"
"அறுபத்தி மூணு முடிஞ்சுது"
"இது யாரு?"
"என் கடைசி பையன். இவ பேத்தி, பெரியவனோட பொண்ணு."
"ஆனாலும் ஆளே மாறிட்ட நீ. என்னால நம்பவே முடியலை"
"சரி வர்றேங்க! வர்றேன் அண்ணா"
"யாரும்மா அவங்க"
"தெரியலைடா, எனக்கு நியாபகம் இல்லை. எங்க சின்னசேலம் வீட்டு பக்கத்துல இருந்ததா சொல்றாங்க"
"அவங்க இத்தனை வருஷம் கோமா ஸ்டேஜ்'ல இருந்தாங்களா?"
"எதுக்கு கேக்கற?
"இல்லை, நீங்க சின்ன சேலத்துல இருந்தது அம்பத்தி அஞ்சு வருஷம் முன்னால. பத்து வயசு பொண்ணா பாத்த உங்களை இப்போ பாத்துட்டு அடியோட மாறிப் போயிட்டன்னு மறுபடி மறுபடி சொல்லிக்கிட்டு இருந்தாங்களே அதான் கேட்டேன்"
"ஹி ஹி ஹி..."
"தோ இருக்காளே என் அண்ணன் பொண்ணு, உங்க பேத்தி; இவளைக் காட்டி இதுதான் சின்ன சேலம் ஜானகி அப்படின்னு சொல்லியிருந்தா அவங்களுக்கு இத்தனை அதிர்ச்சி இருந்திருக்காதுன்னு நினைக்கறேன்"
.
.
.
8 comments:
:))))))))))))
+1
ஹா..ஹா...ஹா..ஹா...ஹா..ஹா...ஹா..ஹா...
நல்ல பதிவு.
@ நட்பாஸ்
அது என்ன சார் +1
@ Jayadev sir
@ Rathnavel sir
நன்றி!
அட்டேடே..! நீங்களும் அடியோட ஆளே மாறீட்டீங்களே.. அப்பூ..!!
சின்ன வயசுல உங்கள பார்த்தது.. !
இங்கனயும் கொஞ்சம் வந்துட்டு, இந்தப் பதிவை படிச்சு கமெண்டிடுங்க.. பிடிச்சிருந்தா ஒரே ஒரு ஓட்டு.. இன்ட்லியில போட்டுடுங்க.. போடுவீங்கதானே..!
இங்கனயும் கொஞ்சம் வந்துட்டு, இந்தப் பதிவை படிச்சு கமெண்டிடுங்க.. பிடிச்சிருந்தா ஒரே ஒரு ஓட்டு.. இன்ட்லியில போட்டுடுங்க.. போடுவீங்கதானே..!
இணைப்பு: http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html
Post a Comment