Nov 10, 2011

108 சேவை

இன்று ஹிந்து நாளிதழில் வந்த செய்தி இது.



108 ஆம்புலன்ஸ் சேவை என்பது மக்களுக்கு உதவுவதற்காக சென்ற ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட ஒரு உன்னத சேவை. இந்த சேவையின் மூலம் நேரத்தில் இலவச ஆம்புலன்ஸ் கிடைக்கப்பெற்று உயிர் பிழைத்தவர்களை நான் அறிவேன்.

ஆனால் பாருங்கள் ஒரு நாளில் இவர்கள் பெறும் 25000 அழைப்புகளில் சுமார் 4000 அழைப்புகள்தான் உண்மையானவை. மற்ற 85% கிண்டல், கேலி, பொய்யான அழைப்புகள், குழந்தைகளின் விளையாட்டு அழைப்புகளாம்.

நம் வீட்டுக் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யக் கூடாது என்று அறிவுருத்துவது இங்கே இந்த நேரத்தில் மிகவும் அவசியம் எனத் தெரிகிறது. குழந்தைகள் தெரிந்து செய்வதில்லை. எனவே, இந்த சேவையின் முக்கியத்துவம் குறித்த பாடத்தை ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு எடுப்பது அவசியம் ஆகிறது. குழந்தைகள் மட்டுமன்றி, நாமும் இத்தகைய செயல்களைச் செய்து இந்த உன்னத சேவைக்கு பங்கம் விளைவிக்காமல் இருப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

கடலூரிலிருந்து ஒரே எண்ணிலிருந்து ஒரு மனிதர் 1473 அழைப்புகளைச் செய்திருக்கிறாராம். மன அழுத்தம் கொண்ட நபர்கள் / குடிபோதையில் இருப்பவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் உணர மறுக்கும் ஒரு உண்மை என்னவென்றால், அவர்கள் வீட்டிலும் என்றேனும் எவருக்கேனும் அவசர மருத்துவ உதவி தேவைப்படலாம் என்பதுதான். 

இந்த விஷயத்தில் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு இதுகுறித்த தேவையான விழிப்புணர்வை வழங்குமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி: ஹிந்து நாளிதழ்

7 comments:

natbas said...

பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said...

சில ஜென்மங்கள் திருந்தாது சகோ.


நம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

JesusJoseph said...

நல்ல இருக்கு

நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com

செல்வா said...

ரொம்ப யோசிக்கவேண்டிய விசயம்ணா. கூடவே எல்லோருக்கும் போய்ச்சேர வேண்டிய விசயமும்!

ராஜா சந்திரசேகர் said...

முக்கியமான பகிர்வு.நன்றி தோழர்.

Unknown said...

அருமையான பகிர்வு.. அனைவருக்கும் போய் சேரவேண்டிய விடயம்

Arumugam S said...

Well needed awareness at this time. I will share it in my blog too.

Thanks,
Arumugam S
entropyearth.blogspot.com

Related Posts Plugin for WordPress, Blogger...