நான் தயாரிக்கும் டாப் டென் பட்டியலில் தமிழின் தலைசிறந்த நகைச்சுவைப் படங்களின் டாப் இரண்டு இடங்களில் சூப்பர்ஸ்டாரின் “தில்லுமுல்லு” மற்றும் கமலின் “மைக்கேல் மதன காமராஜன்” படங்கள் உண்டு.
தீவிர கமல் விசிறியான ஒரு தமிழ் வலைப்பதிவாளன் மை.ம.கா.ரா. பற்றி எந்தப் பதிவும் எழுதாதது எப்படி என்பது ஆச்சர்யமே! இன்று கமல் பிறந்தநாளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே, கச்சிதமாய்ப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
காமேஸ்வரன் செய்யும் வெள்ளந்தி அதகளங்கள், சுப்ரமணிய ராஜுவின் கில்பான்ஸ் கலக்கல்கள், மதன் கேரக்டரின் மிடுக்கான நடிப்பு, மைக்கேலின் வில்லத்தனம் என்று எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்தவாறு கூகுள் செய்ததில், படம் வெளிவந்த இந்த 20 வருடங்களில் இந்தப் படம் குறித்து தமிழ் வலையில் குறைந்தது இரண்டு டஜன் பதிவுகளாவது தேறுகிறது. டைட்டில் டு க்ளைமாக்ஸ் படத்தை அலசி ஆராய்ந்த இரண்டு பதிவுகளும் தென்படுகின்றன. படத்தின் எந்த காட்சியும் விட்டு வைக்கப்படவில்லை
நான் என்னத்தைத்தான் எழுத என யோசித்தால்.... எனக்கு இந்தக்காட்சியைத் தவிர்த்து வேறேதும் தோன்றவில்லை. கமலும் நாகேஷும் கலக்கும் இந்த லெஜெண்ட்ரி காட்சியை கொஞ்சம் ரசியுங்களேன்!
இந்தக் காட்சியின் படமாக்கலின் பின்னணியில் வார்த்தைக்கு வார்த்தை இருக்கும் மெனக்கெடல் ஒருமுறைக்குப் பலமுறை பார்க்கையில் புரிந்துகொள்ள முடிகிறது.
என் பார்வையில் இந்தப் படத்தின் டாப் க்ளாஸ் காட்சி இதுதான்!
இந்தக் காட்சியின் படமாக்கலின் பின்னணியில் வார்த்தைக்கு வார்த்தை இருக்கும் மெனக்கெடல் ஒருமுறைக்குப் பலமுறை பார்க்கையில் புரிந்துகொள்ள முடிகிறது.
என் பார்வையில் இந்தப் படத்தின் டாப் க்ளாஸ் காட்சி இதுதான்!
நடிப்புலகச் சக்கரவர்த்திக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
2 comments:
நான் பதிவெழுத ஆரம்பித்த புதிதில், நான் எழுதிய இரண்டாவது பதிவுதான் இத படத்தின் திரைவிமர்சனம். அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
@ பிரசாத்
நன்றி நண்பரே
Post a Comment