நன்றி: http://www.scholastic.com
ஃபோட்டோ 365, பாசுரம் 365, Quotes 365 வரிசையில் நானும் நுழைகிறேன் என்று பாடுகிறேன் 365 ப்ராஜக்டை நாம் துவங்கிய விஷயம் தமிழ்கூறும் நல்லுலகம் ஆல்ரெடி அறிந்தது.
எப்படியோ அரைகுறையாக அந்த ப்ராஜக்டை நிறைவு செய்தாகிவிட்டது.
சும்மா இருக்கும் நேரத்தில் விட்டத்தைப் பார்த்துத் தலையைச் சொறிந்ததில் தோன்றிய ஐடியாதான் இந்த “அடுத்த” 365 ப்ராஜக்ட்.
புத்தகங்களுக்கான அறிமுகம், விமர்சனம் செய்யும் தளங்கள் ஏற்கெனவே இங்கு அழியாச் சுடர்கள், சிலிகன் ஷெல்ஃப் என நிறைய உண்டு. அந்த வரிசையில் நாங்களும் எங்கள் பங்காக ”ஆம்னிபஸ்” தளத்தை துவங்குகிறோம்.
நாங்கள் படித்து ரசித்த நூல்கள் குறித்த பதிவாக இந்தத் தளம் இருக்கும். சிலசமயம் விரிவான விமர்சனமாக அமையும், பல நேரங்களில் ஜஸ்ட் ஒரு நூலைப் பற்றின அறிமுகப் பதிவாக இருக்கும்.
என்ன மாதிரியான புத்தகங்கள் பற்றி எழுதுவோம்? எட்டுத்தொகையாகவும் இருக்கும், எக்ஸைலாகவும் இருக்கும். திருக்குறளாக இருக்கும், திருப்பூந்துருத்தியாகவும் இருக்கும்.
நண்பர் நட்பாஸ் இப்போதைக்குக் கை கோர்த்திருக்கிறார். இன்னமும் மூன்று நண்பர்கள் அவ்வப்போது எழுதுகிறேன் என்று உறுதி கொடுத்திருக்கிறார்கள்.
இந்தமுறை 365 நாள்கள் ப்ராஜக்டாக அல்லாமல் 365 புத்தகங்கள் பற்றிப் பேசும் தளமாக இந்தத் தளம் அமையும். குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் குறித்த பதிவுகள் ஒவ்வொரு வாரமும் இடம்பெறும்.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் புதிய ப்ராஜக்ட் துவங்குகிறது.
இணையதளம் இங்கே ==> ஆம்னிபஸ்
5 comments:
வாழ்த்துகள் சார்!
சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
Best wishes for a successful run :-)
amas32
வாழ்த்துகள்!
வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி!
Post a Comment