குழந்தைகளைக் கடத்திக் கொன்ற (அல்லது அதற்காக கைது செய்யப்பட்ட) மோகன்ராஜ் என்கவுண்டர் கொலை செய்யப்பட தகவலை சன் செய்திகளில் செய்தியோட்டத்தில் படித்த பொது, "இது எதிர்பார்த்த ஒன்றுதான்", என்ற சாதாரண மனநிலையில் இருந்தேன். அடுத்த வேலையைப் பார்க்கத் துவங்கிவிட்டேன். அலுவலகம் செல்லும்போது அலுவலக காரில் நண்பர்களிடம் பெரிதாக ரீயாக்ஷன் ஏதும் இல்லை.
அலுவலகத்தில் சிலரிடம் பேசியபோது அங்கே உணர்ச்சிப் பிழம்புகள் பல எழும்பிக் கொதித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.
"இவனுங்கள ஜன சந்ததியில நடுரோட்டுல போட்டிருக்கணும் சார்"
"இன்னொருத்தன் இருக்கானா செத்துட்டானா?" என்பதாக இருந்தன விவாதங்களும் கேள்விகளும்..
தினமலர் இணையதளத்தைத் திறந்தபோது மதியம் ஒரு மணியளவிலேயே கிட்டத்தட்ட எழுநூறு பேர் பின்னூட்டம் இட்டிருந்தார்கள். அவர்களில் 99 சதம் பேர் போலீசைப் பாராட்டியிருந்தனர்.
என் அலுவலகத் தோழி ஒருவரும் தினமலரில் இவ்வாறு பின்னூட்டமிடத் தவறவில்லை.
நல்ல வேலை செய்துள்ளது கோவை போலீஸ். குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு தாயின் தந்தையின் மனத்திலும் நிறைவைத் தந்துள்ளது இந்த முடிவு. இது போன்றவர்களுக்கு அரசின் பணம், நேரம் ஆகியவற்றை இது போன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு செலவு செய்வது ரொம்ப வேஸ்ட். அதை நிறுத்தியமைக்கு நன்றி. இன்னொருத்தனையும் போட்டுத் தள்ளும் சேதி சீக்கிரம் கிடைக்க போலீசை வேண்டுகிறேன். கோவை போலீசுக்கு நன்றி!...
மங்குனி அமைச்சர் தன் தளத்தில் மக்களிடம் கேட்ட கருத்தில் நூற்று சொச்ச பேர் "என்கவுண்டர் சரிதான்" எனத் தீர்ப்பளித்தனர் (!??).
மங்குனி அமைச்சர் பதிவும் எதிரொலியும் ஒரு உதாரணம்தான். பத்திரிகை சார்ந்த தளங்கள், வலைப்பதிவர்கள் என கிட்டத்தட்ட அனைத்து திசைகளிலிருந்தும் இந்த என்கவுண்டருக்கு பேராதரவு.
ம.அமைச்சர் பதிவில் தமிழ்மலர் என்பவர் எழுப்பின சில கேள்விகள் தர்க்க ரீதியானவை. ஆனால் அவை கடுப்பாத்திரத்தில் இருந்த மக்களின் நையாண்டி மற்றும் கீழ்த்தர எதிர்வினைகளால் காணாமல் அடிக்கப்பட்டன.
"நீ என்னதான் சொல்ல வர்ற?" என என்னைக் கேட்பவர்களுக்கு.
ஒரு சக மனிதனாக - அக்குழந்தைகளிண் பெற்றோர்களாகக் கூட வேண்டாம் - அக்குழந்தைகளுடன் சேர்ந்து பக்கத்து வீட்டில் வாழ்ந்த ஒரு சக மனிதனாக நினைத்து ஒரு சில நிமிடம் யோசித்துப் பார்... "காவல்துறை செய்தது சரி என சொல்லவில்லை.. ஆனால் சில விஷயங்களில் இது போன்ற தண்டனைகள் நிச்சயம் தேவைதான். --சில விஷயங்களில்" இவ்வாறு யுவகிருஷ்ணாவின் பதிவில் பின்னூட்டமிட்டிருந்தார் ஒருவர்.
இது போன்ற உணர்ச்சி மயமான கேள்விகளுக்கும், இந்திய நீதித்துறையின் மீது முற்றிலும் நம்பிக்கை இழந்த மனிதர்கள் தாமே முன் வந்து எழுதும் முடிவுரைகளுக்கும் தர்க்க ரீதியான விளக்கங்கள் மூலம் பதிலளிக்க இயலாது.
ஆனால், உலகின் தலை சிறந்த ஜனநாயக நாடாக நம்மை நாமே மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவின் மீதும், இந்திய நீதித் துறையின் மீதும் தீவிர நம்பிக்கை கொண்ட ஒருவனாக என்னைக் கேட்டால், இந்த என்கவுண்டர் முற்றிலும் தவறு.
ஸ்ரீதர் நாராயணன் தன் தளத்தில் சொன்னதை இங்கே நான் மறுபடி சொல்கிறேன்...
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எடுக்கப்படும் தனிமனித முடிவிற்கும் ஒரு அரசாங்கத்தின் செயலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அரசாங்கத்தின் செயல்கள் ஒரு சமூகத்தையே பாதிக்கக் கூடியது. நமது சட்ட அமைப்பின் மேல் நமக்கே நம்பிக்கையில்லாமல் போய்விட்டதை உரக்க சொல்லி பெருமைபட்டுக் கொள்வது நல்லதா? நிச்சயம் நல்லதில்லை.
பா.ராகவன் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்...
யதார்த்த வாழ்வுக்கும் மசாலா சினிமாவுக்குமான இடைவெளிகள் குறைந்துகொண்டிருக்கின்றன. அற்புதங்கள் அந்தந்தக் கணமே நிகழ்ந்துவிட வேண்டுமென்ற அவசரம் எங்கும் தெரிகிறது.
கடைசியாக.... இந்தப் பதிவிற்கு என்னென்ன நக்கல் நையாண்டி ஆத்திர எதிர்வினைகள் வருமோ தெரியவில்லை. யுவகிருஷ்ணா'வின் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்திற்கு ஒரு அனானியின் எள்ளலைப் பாருங்கள்..
உணர்ச்சிக் கொந்தளிப்பில் ரீயாக்ட் செய்யும் எல்லோராலும் புரிந்து கொள்ளத்தக்கப் பதிவல்ல இது.
நான் என் காதாரக் கேட்ட சில கமெண்டுகள்:
மனுஷனுக்குத்தான் நீதி முறைப்படி தண்டனை தரணும், இவனைப்போல மிருகத்துக்கு இதுதான் சரி. / அவனுக்கு ஒன்றரை வயசு கொழந்தை இருக்குன்னா அதை அவன் யோசிச்சிருக்கணும். / இவனைப்போல எவனும் பின்னால பண்ணக்கூடாதுன்னா இதுதான் சரி.
இப்படி சென்றுகொண்டே இருக்கிறது மக்களின் உணர்ச்சி வாதங்கள்.
தமிழ்மலர் என்பவர் 'மங்குனி அமைச்சரின்' பதிவில் சில கேள்விகள் எழுப்பியிருக்கிறார். அவர் கேள்விகளின் அடிப்படையை நான் அறியாவிட்டாலும் அவர் கேட்பதில் உள்ள தர்க்க ரீதியான சில கேள்விகளுக்கு விடை காணுமுன் இந்த என்கவுண்டர் நடந்துவிட்டனவோ என்றும் ஐயப்பட வேண்டியுள்ளது.
எது எப்படியோ, "உன் வீட்டுல இப்படி நடந்திருந்தா நீ இப்படி தர்க்க ரீதியா கேள்வி கேட்டுட்டு நின்னுட்டு இருப்பியா?" என்பதான கேள்விகளுக்கு நம்மிடம் நிச்சயம் விடையில்லை.

Anonymous
//உணர்ச்சிக் கொந்தளிப்பில் ரீயாக்ட் செய்யும் எல்லோராலும் புரிந்து கொள்ளத்தக்கப் பதிவல்ல இது.//
வாங்க அரிஸ்டாட்டில் உங்களுக்கு ரொம்ப புரிஞ்சிருக்கு போலருக்கே.
டே! யோக்கியன் வாரன் சொம்பை எடுத்து உள்ள வைங்கோ!!!
வாங்க அரிஸ்டாட்டில் உங்களுக்கு ரொம்ப புரிஞ்சிருக்கு போலருக்கே.
டே! யோக்கியன் வாரன் சொம்பை எடுத்து உள்ள வைங்கோ!!!
ரொம்ப நன்றி அனானி!
.
.
.