Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts
Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts

Sep 8, 2012

முகமூடி, குங்ஃபூ & டாஸ்மாக்




அலுவலக நண்பர் அருண் பிரசாத்திடம் பேசிக் கொண்டிருந்தேன். முகமூடி திரைப்படம் பார்த்ததாகவும், படம் மிகவும் அருமை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் படத்தைப் பற்றி கொஞ்சமேனும் நல்ல கருத்தைச் சொன்னவர் எவருமில்லா உலகில் இப்படி ஒரு தகவல் சொன்ன இந்த மனிதரைப் புருவம் உயர்த்தி ஒரு பார்வை பார்த்தேன். 

சாரு நிவேதிதா தன்..முகமூடி(2) பதிவில் எழுதியிருந்ததை அவரிடம் குறிப்பிட்டேன்.  சாரு தன் பதிவில் இப்படிச் சொல்கிறார்.
படத்தின் ஹீரோ  குங்ஃபூவில் பயிற்சி எடுப்பவன்.  குங்ஃபூ தெரிந்தவர்கள் டாஸ்மாக்கில் போய் தண்ணி அடித்துக் கொண்டிருப்பார்கள் என்று மிஷ்கினுக்கு யார் சொன்னது என்று தெரியவில்லை.  உயிரே போனாலும் குங்ஃபூ விற்பன்னர்கள் தண்ணி அடிக்க மாட்டார்கள்.  குங்ஃபூ என்பது யோகத்தைப் போன்றது.  ஒரு யோகாச்சாரியார் டாஸ்மாக்கில் தண்ணி அடித்துக் கொண்டிருப்பாரா?  
"அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார். நீங்க ஜாக்கிசான் படமெல்லாம் பாத்ததில்லையா?ஏதோ ஒரு “ரிவென்ஜ்”ன்னு ஒரு படம் வருமே அதுல கூட ஜாக்கிசானோட குங்ஃபூ மாஸ்டரே..குடிச்சிட்டு..குடிச்சிட்டு..குங்ஃபூ..கத்துக் குடுக்கறாப்போல  ஒரு சீன் உண்டு", என்றார்.


அருண் சினிமா மோகம் மிகக் கொண்டவர். கலைஞர் டிவியின் நாளைய இயக்குனருக்காக நாலு குறும்படங்களை இயக்கியவர். எனினும், அவர் நம்ம சாருவுக்கு ஈடாகுவாறா? இல்லை நாம்தான் நம்மவரை விட்டுத் தந்திடலாகுமா?

"யோவ்! சினிமாவுல ஆயிரம் சொல்லுவான்யா. அதெல்லாம் நிஜமாகுமா? சாரு தமிழின் முதுபெரும் எழுத்தாளர், அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்", என்றேன் நான்.

சினிமாக்காரர் விட்டுத்தருவாரா? இதோ ட்யூட்டி முடிந்து இன்று காலை வீடு சேர்ந்ததும், ”இதைப் படித்துவிட்டுச் சொல்லவும்”, என்று ஒரு இணையக் கட்டுரைக்கான லின்க்கை எனக்கு மெயிலில் அனுப்பியிருக்கிறார்.

Meat, Wine, and Fighting Monks என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரையைப் படித்தால் ஒன்று தெரிகிறது. நிஜத்தில் மார்ஷியல் ஆர்ட் குருக்கள் எப்படியோ, ஆனால் கற்பனைப் பாத்திரங்கள் (கதை, நாவல், நாடகம்) காலாகாலமாய் ஒயின் விரும்பிகளாக இருக்கிறார்கள்.

முகமூடி திரைப்படம் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் பற்றியதுதானே? அந்த டாஸ்மாக் குங்ஃபூ வீரன் ஒரு கற்பனைப் படைப்புதானே? 

படம் பார்த்தவர் யாரேனும் கூறுங்களேன்....

Dec 18, 2010

இணையவெளியில் மெட்ராஸ் தாதா



மாமல்லனின் ஜெமோ நிலைப்பாடுகள் குறித்து எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. பிதொநிகு என் கற்பனை என விமா சொன்னது ஜெமோ-விமா இடையேயான விஷயமே. இடையே ஊடாடி அடிதடியில் ஈடுபட நாமொருவருமில்லை. எனினும், விமா'வின் தொடர் ஜெ தாக்குகள் அவரது புது புத்தக ரிலீசொடு அதை முடிச்சுப் போடசொல்கிறது.

எப்படியோ... இப்படியப்படி உணர்ச்சிவசப் பட்டு எழுதுகிறாரேயோழிய... சிலப்பல நேரங்களில் மனிதரின் ஜீனியஸ்தனம் பட்டுத் தெறிக்கிறது...

தன் தளத்தில் அவர் வடிக்கும் விஷயங்களை விடுங்கள்,ஒரு பின்னூட்டத்தில் மனிதர் எழுதிய கவிதை படித்து மிரண்டேனேன்றால் மிரண்டேன் அப்படி மிரண்டேன். இதுவும் ஜெமோ தாக்கு எனினும் இதில் உள்ள அனாயாசமான அதேசமயம் ஆழ்ந்த கவித்திறனை ரசித்தேன்.

அறம்

எதற்கும் அசையாத
எம்பெருமான் விஷ்னு
கருவறை துறந்து
உற்சவ மூர்த்தியாய்
உலா வருதல்
உனக்காக அல்ல தனக்காக

ஸ்வாமி ஏள்றார் என
தரைவீழும் மனுஷா கேள்

பொன்முலாமின் உள்ளிருக்கும்
காரியார்த்தக் கல்மனிதனைக் காண்

இங்கே டார்கெட் ஜெமோ'தான் என்றாலும் மோதிரக்கைக் குட்டு வாங்கினது என் நெருங்கின நண்பர் ஒருவர். இப்படி நான் எழுதுவதை அவர் க்ஷமிக்கணும்.

இத்தனை நாள் கழித்து இதுபற்றி நான் இங்கே எழுதக் காரணம், தலைவர் கொஞ்சம் இடைவெளிக்குப் பின் தன் தளத்தில் இன்று ஒரு கவிதை வடித்திருப்பதுதான். இப்போ டார்கெட் நம்ம அன்பிற்கும் பாசத்திற்கும் பண்பிற்கும் இப்போதைய சூழலில்  பரிதாபத்திற்கும் உரிய தேக எழுத்தாளர் அவர்கள்.

தேகக் கொசு
வெளியிட்டு இருப்பது
வெற்றுக் குசு


.
.
.

Jul 16, 2010

இலக்கிய விவாதம் என்றால்....?




முன்குறிப்பு:


நீர்மூழ்கி நிலையில்
நீர் நினைப்பதையே 
நீரெழுதுவீர்...
நீரென்ன நினைத்தீரோ
நீரெழுதீர்....
நீரென்ன நினைத்தீரோ?

________________

இலக்கிய விவாதம் என்றால் என்னவோ ஏதோ என்று நெடுநாட்களாக நினைத்திருந்தேன். 

இன்றுதான் தெளிவு தெளிவாகப் புரிந்து கொண்டேன். இனி நிம்மதியாகத் தூங்குவேன்....!!

இவர்களுக்கு (இவன்களுக்கு "ர்"  ஒரு கேடு) வக்காலத்து வாங்கிக் கொண்டு கண்டதுகளும் எதற்காக என்னைக் குலம் கோத்திரம் சொல்லித் திட்டின என்று இப்போதுதான் விளங்குகிறது.

________________

பின்குறிப்பு: காலையில் எழுந்து பார்த்தால் அந்த இடுகையைக் காணோம். தெளிஞ்சிடுச்சோ?
.
.
.
image courtesy: http://faceinhole.funphotobox.com

Jul 14, 2010

ஆழ்ந்த பொருளற்ற அற்ப மாயை

“....But I must tell that entry into the film world has suddenly relieved me of all the burdens of a head of a family. Had I not come to this industry, I would have been running from pillar to post to organise money for my son's higher-education,” said the writer.

கடந்த ஞாயிறு ஹிந்து நாளிதழில் இதைச் சொல்லியிருப்பது வேறு யாருமில்லைங்க, நம் மனம் கவர்ந்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்தான்.


ஒரு அரசு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே தமிழில் முன்னணி மற்றும் பிரபல எழுத்தாளராக இருக்கும் ஒருவரே இந்த வகையில் சொல்லும் அவசியம் இருக்கிறது.

மேலும், நேற்று ஒரு வலைப்பதிவர் தன் ஜெமோ சந்திப்பு குறித்து எழுதியிருந்தார். அதில், அந்தச் சந்திப்பு முழுவதிலும் அல்லது பெரும்பாலும் ஜெமோ'வின் பேச்சு சினிமா சார்ந்ததாகவே இருந்தது, இலக்கியம் மிகக் குறைவாகவே ஜெமோ பேசினார் எனக் கூறினார்.


சாரு தன் சமீபப் பதிவொன்றில் "உங்களைப் படிக்கலைன்னா தூக்கம் வரலை, சாப்பாடு எறங்கலை" என்று இணையத்தில் இலவசமாகச் சொல்வதை நிறுத்திவிட்டு தன் புத்தகங்களை வாங்கிப் படிக்குமாறு தன் வாசகர் ஒருவருக்கு வேண்டுகோள் விடுத்தார். அது தன் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள சற்றேனும் உதவும் என்றார். "என்னடா மனுஷன் இப்படியெல்லாம் எழுதறார்" என்று நினைத்தேன்.


இணையத்தில் ஆயிரமாயிரம் வாசகர்கள், ஒரு பக்கம் அன்புச் சொரிதல்கள், மற்றுமோர் பக்கம் ஆவேசக் கூக்குரல்கள், அடிகள், அரவணைப்புகள், புலம்பல்கள், புண்ணாக்குகள். என்ன வேண்டுமென்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும். எல்லாமே இலவசமாக இலவசத்திற்குக் கிடைப்பன. ஆனால் உண்மை என்னவென்றால் at the end of the day money only can help you live.....!!! அதை நாம் ஒப்புக் கொண்டுதானே ஆகவேண்டும்.


சாரு சொன்னதாகட்டும், ஜெமோ'வின் சினிமா சிலாகிப்புகளாகட்டும் என் பார்வையில் யதார்த்தம்! யதார்த்தம்!

டந்த சில வாரங்களுக்கு முன்னே நடந்த தமிழ்ப்பதிவர் பிரச்னையின் போது சக பதிவர் ஒருவரிடம் அந்தப் பிரச்னைகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர், "தினத்தந்தி நாளிதழ் தினமும் இணையத்தில் பதிவேற்றம் செய்த அடுத்த நிமிடம் ஒரு லட்சம் ஹிட்ஸ்களைப் பார்க்கிறதாம்", என்றார். 

நாம் இணையத்தில் இலவசமாய் எழுதிக் கொண்டு கூட்டம் கூடுகையில் "என் தளத்துல டெய்லி நானூறு ஹிட்டு, நாலாயிரம் ஹிட்டு" என்று சொந்தமாக பலம் கூட்டி அறைகூவிக் கொள்கிறோம்.

At the end of the day மீசைக்கவிஞன் சொன்னதுபோல், வாழ்க்கை ஒரு ஆழ்ந்த பொருளற்ற அற்ப மாயையாகவும் தோற்ற மயக்கங்களுடன் கூடிய சொற்பனமாகவும்தான் தோன்றுகிறது எனக்கு.
.
.
.

Jun 2, 2010

சாரு - விஜய் டிவி / கவிதை / யானி



விஜய் டிவி:


கடந்த ஞாயிறன்று வெளிவந்த விஜய் டிவி நீயா நானாவில் சாரு பங்கேற்றபோது நேர்ந்த சங்கடங்களை தன் இந்தப் பதிவில் கொட்டித் தீர்த்திருக்கிறார் சாரு. அப்பதிவு உங்கள் பார்வைக்கு....


மன்னிப்புக் கேள்!




கவிதை:


கொஞ்ச நாட்கள் முன்னாள் சாருவின் கவிதை என்ற தலைப்பில் ஒரு பதிவை கிண்டலாக எழுதி அவர் தீவிர ரசிகை ஒருவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன். இப்போது ஒருவழியாக சாரு தன் கவிதைகள் ஒவ்வொன்றாய் வெளியிடத் தொடங்கியிருக்கிறார். சும்மா சொல்லக் கூடாது, என் மேலாளரின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் "Charu has exceeded my expectations" (ஹ ஹ ஹா...நான் திருந்துவதாய் இல்லை).

சாம்பிளுக்கு இரண்டைப் பாருங்கள். சூப்பர் இல்ல? <இதர கவிதைகளை வாசிக்கhttp://charuonline.com/>


***
கடற்கரையில்
எதிர்வந்த
இளம்பெண்ணை
தாகித்தது மனம்
பக்கத்தில்  ஒரு
மூதாட்டி
மாமிச தாகம்
மாமிசத்தாலே
அடங்கியது
***
நீ இருந்தாய்
என்றே
நினைத்துக்  கொண்டிருந்தாய்
இருந்தாயா நீ?
*** 


உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் சாரு.




யானி:


யானியின் இசை ஒன்றுக்கும் தன் தளத்தில் அறிமுகம் தந்திருந்தார் சாரு. அந்த யுடியூப் இணைப்பு இங்கே....



மிகப் பழமையான அர்மேனிய காற்று வாத்தியத்தில் தொடங்கும் இசை, ஒவ்வொரு இசைக் கருவியாகப் பயணித்து இசைப் பிரவாகமாக உருவாகி உச்சத்தை அடைந்து நிறைவு பெறுகிறது. நமக்கு சப்தமும் சிலிர்க்கிறது. உக்கிரமான காதல் (காம?) வெளிப்பாட்டிற்கும் இது போன்ற உணர்வுகளை உசுப்பும் இசைக்கும் நிச்சயம் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இரண்டும் ஒன்றெனவே தோன்றுகிறது எனக்கு.
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...